Published:Updated:

ஜென் Z - அரசனூர் அட்ராசிட்டி லீக்!

ஜென் Z - அரசனூர் அட்ராசிட்டி லீக்!
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - அரசனூர் அட்ராசிட்டி லீக்!

ப.சூரியராஜ், படம்: உ.பாண்டி

ஜென் Z - அரசனூர் அட்ராசிட்டி லீக்!

ப.சூரியராஜ், படம்: உ.பாண்டி

Published:Updated:
ஜென் Z - அரசனூர் அட்ராசிட்டி லீக்!
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - அரசனூர் அட்ராசிட்டி லீக்!
ஜென் Z - அரசனூர் அட்ராசிட்டி லீக்!

“Dude. Lets hangout. Starbucks @ 5.30?”

காபி குடிக்கவே `லெட்ஸ் ப்ளான்'னு வாட்ஸ்அப் குரூப் க்ரியேட் பண்ற சிட்டி பாய்ஸ் பற்றி தெரியும். ஆனால், கிராமத்து பாய்ஸ்களின் ஜாலி வாழ்க்கை எப்படியிருக்கும் என நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

பஞ்சாயத்து ரூம்தான், காலையில் கண்விழிக்கும் டெரர் ஸ்பாட். பத்துக்குப் பத்துக்கு ரூமில் சுமார் பதினைந்து பேர் பட்டறையைப் போட்டுப் படுத்திருப்பார்கள். எவன் கை, கால் எவன்கிட்ட சிக்கியிருக்குனு கண்டுபிடித்து, வீட்டுக்குச் சென்றதும் மோட்டா டம்ளரில் சூடான டீ. நெக்ஸ்ட் கிணற்றுக்குளியல். கிணற்றில் குளிக்கும்போது ‘தலைகீழாகத்தான் குதிப்பேன்’ என சர்க்கஸ் சபதங்கள் ஓடும். கண்ணு ரெண்டும் விஜயகாந்த் கண் மாதிரி செக்கச்செவேல்னு ஆனாதான் எண்ட் கார்டு.

ஸ்கூலோ, காலேஜோ... ஷார்ட் சட்டையும் டைட்பேன்ட்டும்தான் ஃபேஷன் மோஷன். பஸ் என்றால் ஃபுட்போர்டு; ஜன்னலோரப் பிள்ளையிடம் கடலை போடு. பைக் வாங்கினால் முதலில் போவது ஸ்டிக்கர் கடை. பைக் எதுவா இருந்தாலும் அதில் தல-தளபதி முத்திரைகள் கட்டாயம் இருக்கணும்.

பிராண்டட் போனையும் ‘மரிக்கொழுந்தே... என் மல்லிகை மொட்டே...’ என ஃபுல் சவுண்டில் அலறவிடுவார்கள். கெத்துகாட்ட, பொழுதைப் போக்க, புரப்போஸ் பண்ண, அப்டேட்டா இருக்க, நோட்டில் கோடு போட என சகலத்துக்கும் செல்போன்.

ஃபேஸ்புக், வாட்ஸ்அப்பில் வரும் செய்திகள் அம்புட்டும் உண்மை என நினைத்துக் கொண்டிருப்பார்கள். `மச்சான்... `மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இனிமே உலக அதிசயம் இல்லை'னு நாசாவுல சொல்லிட்டாய்ங்களாம்டா' ' என மதுரைக்காரனுக்கு அதிர்ச்சி கொடுப்பார்கள்.

ஜென் Z - அரசனூர் அட்ராசிட்டி லீக்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சண்டே வந்துவிட்டால், டவுனுக்கு படம் பார்க்கக் கிளம்பிவிடுவார்கள். அங்கே அட்டென்ஷனில் நின்று போட்டோ எடுத்து ஃபேஸ்புக்கில் புரொஃபைல் பிக்சரை மாற்றுவார்கள். மற்ற நேரங்களில் பெரும்பாலும் மந்தையில் டாப் அடிப்பது, கபடி, கிரிக்கெட் விளையாடுவதுதான் பொழுதுபோக்கு.
இறந்துபோனவர்கள் நினைவாக அவர்கள் பெயரில் கிரிக்கெட், கபடி டீம் ஆரம்பித்து டோர்னமென்ட் நடத்துவார்கள். ‘அரசனூர் பாய்ஸ் நடத்தும் அட்ராசிட்டி கிரிக்கெட் லீக்’ என லாங் சைஸ் நோட் ஒன்றைத் தூக்கிக்கொண்டு ஊர்த் தலைவரிடம் அடைப்பைப் போட்டு, அதையே நம்பிக்கைச் சான்றிதழாக்கி வசூல்செய்வார்கள். பந்து உபயம், பேட் உபயம், போஸ்டர் உபயம், கப் உபயம், கிட்னிகார்டு உபயம் என எல்லாமே உபயமாகத்தான் இருக்கும்.

கல்யாண வீடோ, துக்க வீடோ, கண்டிப்பாக பேனர் உண்டு. `அட்டகாசம்' அஜித் ஆறு பவுன் சங்கிலிகளோடு முறைக்க, `அழகிய தமிழ் மகன்' விஜய் பூங்கொத்தை நீட்டிக்கொண்டு சிரிக்க, தல-தளபதி சண்டையில் சின்னதாக பேனர் வைத்து சிவகார்த்திகேயன் சிறுவர் ஃபேன்ஸ் சிரிப்பு காட்டுவார்கள்.

பள்ளி, கல்லூரியில் இருந்து வீடு திரும்பியதும் டி.வி-யில் WWE, சன் மியூஸிக், இசையருவி, காமெடி, படம் என ரிமோட் திக்குமுக்காடும். மாலை வேளை என்பது மந்தையிலோ, சலூன் கடையிலோ,  டீக்கடையிலோ டாப் அடித்து ஒருவரை ஒருவர் முரட்டுக் கலாய் கலாய்த்துக்கொள்வார்கள். சில நேரங்களில் கேரம்போர்டு சாகசங்களும் உண்டு. ஒருசிலர் உடலை உறுதிசெய்யும் ஜிம்முக்குள் அவ்வப்போது போய்வருவார்கள். உள்ளே போகும்போதே கைகளில் இரண்டு பக்கெட்டுகளைத் தூக்கிகொண்டு நடப்பதைப்போலவே நடந்து பாப்பம்பட்டி ப்ராக் லெஸ்னர், டி.கல்லுப்பட்டி ட்ரிபிள் ஹெச் ஆகிவிடுவார்கள்!

இரவு வரை வீதி உலா வந்து, சைட்டைப் போட்டு ரூட்டைக் கொடுத்து ஓய்ந்துபோய் மீண்டும் பஞ்சாயத்து ரூமில் படுக்கையைப் போட்டால்... அடுத்த செல்போன் அலறல் வரைக்கும் உறக்கம்தான்!