Published:Updated:

ஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 2

ஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 2
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 2

Dr. ஆர்.கார்த்திகேயன், படங்கள்: ப.சரவணகுமார், ஓவியம்: கார்த்திகேயன் மேடிதொடர்

ஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 2

Dr. ஆர்.கார்த்திகேயன், படங்கள்: ப.சரவணகுமார், ஓவியம்: கார்த்திகேயன் மேடிதொடர்

Published:Updated:
ஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 2
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 2
ஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 2

நாயகர்களில் இரு வகை உண்டு. லட்சியம் எட்டும் நாயகன், லட்சியம் தவறும் நாயகன். நம்முள் இந்த இருவரும் உண்டு. ஒருவர், `Conquering Hero', இன்னொருவர் `Suffering Hero'.

வெற்றி நாயகர் எந்த எதிர்ப்பையும் முறியடித்து கடைசியில் வெல்வார். எம்.ஜி.ஆர்., ரஜினி, விஜய் போல. ரயிலையே கையில் நிறுத்தும் தெலுங்குப் பட பாலகிருஷ்ணா, கட்டடங்களில் தாவிச் சண்டையிடும் ஜாக்கி சான் எல்லாம் இந்த ரகம்தான்.

துயர நாயகர், எல்லா வலிகளைத் தாங்குவதில் ஹீரோயிசம் காட்டுவார். ரத்தம் கக்கும் `வசந்தமாளிகை' சிவாஜியும் `ஆடுறா ராமா...' கமலும் சிகர உதாரணங்கள்.

இப்போதெல்லாம் பாலா படங்கள் தவிர, துயர நாயகர்கள் வழக்கொழிந்துபோய்விட்டார்கள். ஏன் என்பதைப் பிறகு பார்க்கலாம்.

ஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 2

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

#கனவு ஹீரோ

அகந்தையை அடிபடாமல் வைத்திருக்கும் Defense Mechanism-களில் இந்தப் பகல் சொப்பனமும் ஒன்று. பஸ்ஸுக்காகக் காத்திருக்கையில் ஆடி காரை ஆடித் தள்ளுபடியில் வாங்குவதுபோல கனா காணலாம். பேருக்கு ஒரு girl friend இல்லாத நிலையிலும் நயன்தாரா போல ஒருவர் உங்களைத் தேடி வந்து காதலிப்பதைக் கற்பனை செய்யலாம்.

அளவுக்கு மீறி தனியாகப் பேச ஆரம்பிக்காத வரை, இது ஓ.கே!

லட்சியம் எட்டும் நாயகன்தான் நம் எல்லோரின் ஆதர்சம். பிடித்த பெண்ணைக் கட்டுவதும், எதிரியை வீழ்த்துவதும் பொது அம்சங்கள். இந்த template-ல் வரும் எல்லா படங்களும் வெற்றிபெறுவது இதனால்தான். இதற்குத் தடையாக உள்ள பிரச்னையும்/ வில்லனும்தான் ஒரு படத்தைச் சுவாரஸ்யப்படுத்து கிறார்கள். `பாட்ஷா', `கில்லி', `சிங்கம்', `தனி ஒருவன்' அனைத்தும் ஒரே ஜாதிதான்.

உங்கள் life script-ல் உள்ள முக்கிய இடர் என்ன எனப் பாருங்கள். அதை எதிர்கொள்வதில்தான் வெற்றி.

பெரும்பாலும் இடர்கள் வெளியே இருப்பது இல்லை.

பகல் சொப்பனம் fantasy. தூங்கும்போது வருவது கனவு dream.

கனவுகளை ஆராய்ந்த உளவியல் பிதா ஃப்ராய்டு Interpretations of Dreams (1900) என்ற புத்தகத்தின் மூலம்தான் Psychoanalysis எனும் கருத்தாக்கத்தை முன்வைத்தார். கனவுகள் நம் ஆழ்மன சஞ்சலங்களின் தெளிப்பு என்றார். கனவுகளின் உள்அர்த்தங்களைப் புரியவைத்தார் ஃப்ராய்டு. தொடர்ந்து வரும் கனவுகளையும், மனிதகுலத்தின் பொதுக் கனவுகளையும் இவரின் சீடர் `கார்ல் யூங்' ஆராய்ந்தார்.

பாம்பைக் கண்டு பயப்படும் கனவும், பரீட்சையில் ஃபெயிலாகும் கனவும், பற்களை இழப்பதாக வரும் கனவும் உலகம் முழுக்க உள்ளதாம்.

நம் கனவுகள் நம்மைப் பற்றிய, நமக்குத் தெரியாத அரிய செய்திகளை நமக்குச் சொல்லும் என்பது உண்மை.

ஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 2

#What_if?

வாழ்க்கைக்கும் சினிமாவுக்கும் உள்ள பெரிய ஒற்றுமை, இரண்டும் நேர்கோட்டில் செல்வது போன்ற ஒரு மாயத்தோற்றம் கொண்டவை. இரண்டும் Non linear. ஆனால், அதை ஒரு linear வடிவத்தில் பொருத்தப்பார்க்கிறோம். இதனால்தான் வாழ்க்கையைப் பேச சினிமா ஒரு நல்ல மொழியாகத் தெரிகிறது எனக்கு.

`What if?' என ஒரு கேள்வி கேட்டால், அங்கு சினிமாவுக்கான கதையை வாழ்க்கையில் இருந்து எடுக்கலாம்.

ஊரே நடுங்கும் ரெளடிக்கு, சினிமாவில் ஹீரோ வேஷம் கிடைத்தால் எப்படி இருக்கும்? `ஜிகர்தண்டா'. ஹனிமூனுக்கு ப்ளான் செய்கையில் தன் திருமணமே நின்றுபோக, அவள் மட்டுமே தனியாக ஹனிமூன் போனால்? இந்திப் படம் `குயின்'. டி.வி ரிப்போர்ட்டர் ஒருநாள் முதலமைச்சர் ஆனால்? `முதல்வன்'.

உங்களுக்குப் பிடித்த வெற்றிப் படங்கள் அனைத்துக்கும் உள்ள வாட் இஃப்களைப் பட்டியல் போடுங்களேன்!

#சம்பளம் சந்தோஷம்

தவறவிட்ட ரயில், கிடைக்காத வேலை, தற்செயலாகச் சந்தித்த நண்பரின் யோசனை, எங்கோ படித்ததில் நினைவுக்கு வந்து எடுத்த முடிவு, யாரோ செய்த உதவி என நம் வாழ்க்கையைத் திசைமாற்றிய சம்பவங்கள் எத்தனை? இவை அனைத்தும் திட்டமிடாதவை. பல நேரங்களில் நினைத்துக்கூடப் பார்க்காதவை. ஆனாலும் பெற்றோர்கள் நிறைய linear myths வைத்திருக்கிறார்கள்.

எல்லாம் நம் திட்டப்படி மட்டுமே நடக்கும் என நம்பவைக்கிறார்கள். நன்றாகப் படித்தால்தான், நல்ல மார்க் வரும். நல்ல மார்க் வந்தால்தான் நல்ல காலேஜ்ல ஸீட் கிடைக்கும். நல்ல கிரேடு பாயின்ட் இருந்தால்தான், நல்ல வேலை கிடைக்கும். நல்ல வேலை கிடைத்தால்தான், கை நிறையச் சம்பாதிக்க முடியும். அப்படிச் சம்பாதித்தால்தான், சந்தோஷமா வாழ முடியும்!

#குறுக்கு வாழ்க்கை

சுமாராகப் படித்தும் புத்திசாலிப் பையன் அதிக மார்க் எடுக்கலாம். மார்க் இல்லாவிட்டாலும் பணக்காரப் பையன் ஸீட் வாங்கலாம். நல்ல கிரேடு பாயின்ட் இல்லாவிட்டாலும் பேசத் தெரிந்த பையன் இன்டர் வியூவில் வேலையை வாங்கிவிட்டுப் போகலாம். படிப்பு வராமல் தொழில் ஆரம்பித்தவன் நிறையச் சம்பாதிக்கலாம். நிறையச் சம்பாதிக்காத சாமானியன் சைக்கிளில் போய் எல்லாரையும்விட சந்தோஷமாக இருக்கலாம்!

ஒவ்வொரு முடிவில் எத்தனை `கலாம்'?!

க.க.க. போ! 

ஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 2

#போதை சினிமா

துயர நாயகர்களையும் துயர் கதைகளையும் தமிழ்த் திரை ரசிகர்கள் ரசிப்பது இல்லை எனக் கூறுகிறார்கள். தியேட்டரில் ரிப்பீட் ஆடியன்ஸ் சின்னப் பசங்கதான். அதனால்தான் அதிரடி, காதல், பேய் எனப் போய்க்கொண்டிருக்கிறோம் என்பதில் பாதிதான் உண்மை. தற்கொலைகளும் துயர் சம்பவங்களும் வன்முறைகளும் அதிகம் மலிந்துள்ள நிஜ வாழ்க்கையை மீண்டும் அவர்கள் திரையில் பார்க்க விரும்பவில்லை.

நிஜத்தை மறக்கடிக்கும் பலவற்றில் சமூக அங்கீகாரம் கொண்ட போதை, சினிமா! எனத் தோன்றுகிறது.

 #வாட்ஸ்அப் வாட்ச்மேன்


` `ராஜராஜசோழன் நான்...’ என்ற பாடலை எழுதியது யார்?' என, சென்ற இதழில் கேட்டிருந்தேன்.

பதில்: மு.மேத்தா.

இரவு நேரக் காவலுக்கு செக்யூரிட்டி என்ற பெயரில் வயதானவர்களை வதைக்கிறார்கள். தூக்கக் கலக்கத்தில் உட்கார முடியாமல் நகரமுடியாமல் அவர்களைத் தவிப்பதைப் பார்த்தபோது இந்த ஐடியா தோன்றியது.

பேசாமல் நம்ம பசங்களுக்கு ஸ்மார்ட்போன் கொடுத்துட்டா போதாது? வாட்ஸ்அப் வாட்ச் மேன் ரெடி. சாட்டிங் பண்ணிட்டே ராத்திரி முழுக்க உட்கார்ந்திருப்பார்கள். அது சரி, கண்காணிப்பு?

- மற்றவை நெக்ஸ்ட் வீக்