Published:Updated:

விகடன் சாய்ஸ்

விகடன் சாய்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
விகடன் சாய்ஸ்

விகடன் சாய்ஸ்

விகடன் சாய்ஸ்

விகடன் சாய்ஸ்

Published:Updated:
விகடன் சாய்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
விகடன் சாய்ஸ்
விகடன் சாய்ஸ்

எது நல்ல பெர்ஃப்யூம்?

ல்லோருமே கமகமக்க வலம்வருவதைதான் விரும்புவோம். ஆனால், சில நேரங்களில் சொதப்பலான பெர்ஃப்யூமை அடித்துவிட்டு `அடேய்... என்ன பெர்ஃப்யூம்டா, தாங்க முடியலை!' என நண்பர்களின் கேலிக்கு உள்ளாவோம். இதில் இருந்து தப்பிக்க, பெட்டராக மணக்க இந்த பெர்ஃயூம் டிப்ஸ்... எதைத் தேர்ந்தெடுக்கலாம்... எப்படித் தேர்ந்தெடுக்கலாம்?

வாசனை அடுக்குகள்

நாம் வாங்கும் பெர்ஃப்யூமை நுகரும்போது ஒரே மாதிரியான வாசனை வருவதாக உணர்வோம். ஆனால், அதைப் அடித்துக்கொள்ளும்போது அதில் வெவ்வேறுவிதமான நறுமணங்கள் வெளிப்படும். இந்த அடுக்குகளை `Frangrance Notes' என்கிறார்கள்.

Top Notes
அடித்துக்கொண்டதும் வரும் முதல் வாசனை இது. ஆனால், இந்த மணம் காற்றில் உடனடியாகக் கரைந்துவிடும்.

Middle notes
நமக்கான வாசனை என்பதும், அதிக நேரம் நம்மைச் சுற்றி இருக்கக்கூடிய வாசனையும் இதுவே.

Base notes
ஒரு பெர்ஃப்யூமை  உபயோகித்து சில மணி நேரங்கள் கழிந்த பிறகு உருவாகும் வாசனை.

விகடன் சாய்ஸ்

* அக்குள் தொடங்கி உடலின் பல்வேறு பகுதிகளில் கிருமிகளால் ஏற்படும் துர்நாற்றத்தைத் தடுக்கும்.

* 6 முதல் 15 சதவிகிதம் வரை வாசனைத் தைலம்தான் இருக்கும்.

* அதிக நேரம் நீடிக்காது.

* விலை மலிவானது.

விகடன் சாய்ஸ்

டியோடரன்ட் VS பெர்ஃப்யூம்

விலை அதிகம்.

உடல் மற்றும் உடைகளில் பூசிக்கொள்ளலாம்.

15 முதல் 40 சதவிகிதம் வரை வாசனைத் தைலங்கள் இருக்கும்.

* உடல் துர்நாற்றத்தை அதிக நேரம் தடுக்கும்.

* ஒரே நேரத்தில் வெவ்வேறு பெர்ஃப்யூம்களைப் பயன்படுத்தி, புதிய மணங்களை உருவாக்கலாம்.



பெர்ஃப்யூம்களில் ஐந்து வகை

விகடன் சாய்ஸ்

படம் A: இதுதான் முழுமையான பெர்ஃப்யூம். 30 சதவிகிதம் வரை வாசனைத் எண்ணெய்கள் அடர்த்தியாகச் சேர்க்கப்பட்டிருக்கும். அதனாலேயே  அதிக விலை. இதை நேரடியாக உடலில் `PULSE SPOTS' களில் பூசிக்கொள்ளலாம்.

படம் B: இதில் டாப் நோட்ஸ் மறைந்த பின்னரும், மிடில் நோட்ஸ் தொடர்ந்து செயல்பட்டு நம்மை மணம் உள்ளவராக மாற்றும். இது தலைமுடியிலும் உடைகளிலும் பயன்படுத்தக்
கூடியது.

படம் C: இதில் 10 சதவிகிதம் அளவுக்கு மணம் தரும் எண்ணெய்கள் இருக்கும். இந்த வகை பெர்ஃப்யூம்களில் டாப் நோட்ஸ் சிறப்பாக இருக்கும். வெயில் காலத்துக்கு ஏற்றது. பெரும்பாலான கடைகளில் கிடைக்கும்.

படம் D: வெறும் 7 சதவிகிதம் மட்டுமே இதில் வாசனைத் திரவியங்கள் இருக்கும். மற்றவை எல்லாமே ஆல்கஹால்தான். வெயில் அதிகம் இருக்கும் இடங்களில் இதைப் பயன்படுத்தலாம். ஆனால், அதிக நேரம் நீடிக்காது.

படம் E: இருப்பதிலேயே வாசனை மிகவும் குறைவான, நீர்த்துப்போன பெர்ஃப்யூம் இதுதான். 3 சதவிகிதம் வரையிலான வாசனை எண்ணெய்தான் இருக்கிறது.

* பெர்ஃப்யூம்களில் கலந்துள்ள வாசனை எண்ணெய்களின் அளவைப் பொறுத்து அதன் விலையும் உயரும்.

* ஒரு பெர்ஃப்யூமின் `Tenacity' மிக முக்கியமானது. டெனசிட்டி என்றால், ஒரு பெர்ஃப்யூமின் மணம் எவ்வளவு நேரம் நம் உடலில் தங்குகிறது என்பதன் அளவு.

பயன்படுத்துவது எப்படி?

விகடன் சாய்ஸ்

பெர்ஃப்யூம்கள் நீண்டநேரம் நீடிக்க...

ங்களின் தோல், ஏற்கெனவே எண்ணெய்ப் பிசுபிசுப்புக்கொண்டதாக இருந்தால் நல்லது. இல்லை என்றால், எங்கு எல்லாம் அடித்துக்கொள்ளப்போகிறோமோ அங்கு கொஞ்சமாக மணம் இல்லாத மாய்ஸ்டரைஸரைப் போட்டுக்கொண்டு பயன்படுத்தினால் நீடித்து நிற்கும்.

பெர்ஃப்யூம்களை ஆக்ட்டிவேட் செய்யும் சுவிட்ச் என்பது வெப்பம்தான். அது அதிக அளவில் நீடித்திருப்பது நம்முடைய பல்ஸ் பாய்ன்ட்களில். காதுகளுக்குப் பின்னால், மணிக்கட்டுகளில், கை மூட்டுகளில், கால் முட்டிகளுக்குப் பின்னால் பெர்ஃப்யூம்களைத் தெளிக்கவேண்டும்.

பெர்ஃப்யூமைத் தெளித்தவுடன் அதை உடனே நன்றாக அழுத்தித் தேய்க்க வேண்டும் எனத் தோன்றும். அப்படிச் செய்தால், அது பெர்ஃப்யூமின் மணத்தை நீர்த்துப்போகச்செய்யும். எனவே, நோ தேச்சுஃபையிங்!

பெர்ஃப்யூமை, வெயிலில் படும்படி வைக்கக் கூடாது; குளியலறையிலும் வைக்கக் கூடாது; நல்ல குளிர்ச்சியான இடங்களில் வைப்பது நல்லது.