Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

கேப்டன் மகன்?!

நானே கேள்வி... நானே பதில்!

கேப்டன் மகன்?!

Published:Updated:
##~##

''தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் இவ்வளவு ஊழல்களா?''

 ''ஒருவேளை, 'பப்ளிக் சர்வீஸில் கமிஷன் தவிர்க்க முடியாது என்பதால்தான் இப்படி பெயர் வைத்திருக்கிறார்கள்’ என்று நினைத்து இருப்பார்களோ?''

- எஸ்.பழனிவேல், திருமாளம்.

'' 'உலக மகா மோசடி’ என்றால் என்ன?''

''சென்னையில் ஏ.டி.எம். கார்டுகளின் ரகசியக் குறியீட்டு எண்ணைத் திருடி வெளிநாட்டில் இருந்து ஒரு கும்பல் பணத்தை எடுத்துக்கொள்ளும் மோசடி சமீபத்தில் பூதாகாரமாக எழுந்தது தெரியும். 'வங்கியில் தன் கணக்கில் இருந்த பணத் தைத் திருடிவிட்டார்கள்’ என்று போலீஸ் கமிஷனரிடம் பலர் புகார் கொடுத்து இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் உலக வங்கி அதிகாரியாம்!''

- சுலோசனா, விழுப்புரம்.

'' 'என்னால் முடியாவிட்டாலும் என் மகன் மக்க ளுக்கு நல்லது செய்வான்’ என்கிறாரே விஜயகாந்த்?''

''ஐயையோ, நாம் தப்பினாலும் நம் குழந்தைகள் தப்ப முடியாதோ?''

- கி.ரவிக்குமார், நெய்வேலி.

''நகைச்சுவை மூலமாக நல்ல கருத்தைச் சொல்ல முடியுமா?''

''ஏன் முடியாது? '2016-ல் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சியைப் பிடிக்கும். அப்போது தமிழகத்தில் முற்றிலுமாக மது ஒழிக்கப்படும்’ என்கிறாரே ராமதாஸ். மது ஒழிப்பு நல்ல விஷயம்தானே?''

- எஸ்.பழனிவேல், திருமாளம்.

நானே கேள்வி... நானே பதில்!

''பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு எது முக்கியம்?''

''உள்ளத் தூய்மை. டால்ஸ்டாய் வார்த்தை கள் இவை. 'ஒரு பாத்திரத் தின் ஓட்டையில் இருந்து ஒழுகும் நீரைத் தடுக்க உள்பக்கத்தில் இருந்து அடைக்க வேண்டுமே தவிர, வெளியே இருந்து அடைத்தால் பயன் இல்லை. எனவே, அகத்தைச் சுத்தமாக வைத்திருத்தல் மிக முக்கியம்!’ ''

- டி.என்.போஜன், ஊட்டி.

''எந்த ஒரு நல்ல விஷயத்திலும் பாதிப்பு இருக்கும் என்பதற்கு உதாரணம்?''

'' 'ஒருவர் 100 எஸ்.எம்.எஸ்-களுக்கு மேல் அனுப்பக் கூடாது’ என்ற உத்தரவு. இலக் கியக் கூட்டங்கள், சிறு அளவிலான அரசியல் செயல்பாடுகளை மேற்கொள்பவர்களின் போராட்டங்கள் ஆகியவை பற்றிய செய்திகள் இப்போது போஸ்டர்கள், பேனர்கள் மூலம் தெரிவிக்கப்படுவது இல்லை. குறுஞ்செய்திகள், ஃபேஸ்புக் அறிவிப்புகள் ஆகிய வற்றின் மூலம்தான் பரப்பப்படுகின்றன. இந்த உத்தரவினால் இலக்கியவாதிகளும் மாற்று அரசியல் செயற்பாட்டாளர்களும் பாதிக்கப்படுகிறார்கள். வாய் பேச இயலா தவர்கள், கேட்புத் திறனற்றவர்களின் செல் பேசி உரையாடல் குறுஞ்செய்திகள் மூலம் தான் நடக்கிறது. ஒரு விபத்தில் அடி பட்டவருக்கு ரத்தம் கிடைக்கவும் ஏராள மான குறுஞ்செய்திகளை அனுப்ப வேண்டி உள்ளது. இப்படி சின்னச் சின்ன பாதிப்பு கள் எந்த ஒரு பெரிய முடிவின் பின்னும் ஏற்படத்தான் செய்கின்றன!''

-ஆர்.நாகராஜன்,சென்னை - 117

நானே கேள்வி... நானே பதில்!