Published:Updated:

காதல்... ஊழல்... லட்சியம்!

மோ.அருண் ரூப பிரசாத்

காதல்... ஊழல்... லட்சியம்!

மோ.அருண் ரூப பிரசாத்

Published:Updated:
##~##

''ஐயோ சாமி... எகிப்துப் புரட்சிக்கு முன்னாடியே நான் இந்த நாவலை எழுத ஆரம்பிச்சுட்டேன். சுவிஸ் பேங்க் கறுப்புப் பணம், அண்ணா ஹஜாரே உண்ணாவிரதம் எல்லாம் அப்புறம்தான் இந்தியாவில் சென்சேஷன் ஆச்சு. ஆனா, இது எதுவும் என் நாவலுக்கு அடிப்படை இல்லை!'' - கற்பூரம் அணைக்காத குறையாகச் சத்தியம் செய்கிறார் சேத்தன் பகத். இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் ஆங்கில எழுத்தாளர்.  

 பள்ளிப் பருவ நட்பு, முக்கோணக் காதல், நாட்டைத் திருத்த நினைக்கும் நல்லவன், குறுக்குப் புத்திகொண்ட கெட்டவன் என இந்திய சினிமாக்களுக்குப் பொருந்தும் அதே ஃபார்முலா கதைதான். ஆனால், அதை சேத்தன் எழுதும்போது படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது. 'ரெவல்யூஷன் 2020: லவ்,

காதல்... ஊழல்... லட்சியம்!

கரப்ஷன், ஆம்பிஷன்’ (Revolution 2020: Love, Corruption, Ambition) - சேத்தன் பகத்தின் ஐந்தாவது நாவல். விற்பனையில் சக்கைப்போடு போடுகிறது. கதையின் பின்புலம் வாரணாசி. கோபால், ராகவ், ஆர்த்தி மூவரும் பள்ளித் தோழர்கள். சிறு வயதில் இருந்தே ஆர்த்தியைக் காதலிக்கும் கோபால், ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுப் பயிற்சிக்காக வெளியூர் செல்ல, ராகவ், ஆர்த்தி இடையே லவ் கெமிஸ்ட்ரி மூள்கிறது. கோபாலுக்கு இந்த விவரம் தெரியவரும் சமயம், அவனுடைய நோயாளி தந்தை இறக்க, வாழ்க்கை சூன்யம் ஆகிறது. பள்ளிப் படிப்பை மட்டுமே முடித்து இருக்கும் கோபால், ஒரு கல்லூரி ஆரம்பிக்கிறான். கோபாலின் 'கல்வித் தந்தை’ அவதாரத்துக்குப் பிறகு, கதையில் எக்ஸ்பிரஸ் வேகம். 'காதுல நல்லாச் சுத்துறான்யா பூவை’ எனத் தோன்றினாலும் நாவலை முழு தாகப் படிக்காமல் கீழேவைக்க முடியவில்லை. அநாயாசமாக அள்ளித் தெளிக்கப்பட்ட கெட்ட வார்த்தைகளும் ப்ரீ-மேரிட்டல் செக்ஸும் சேத்தனின் கதைகளில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கும். இதுவும் அதற்கு விதிவிலக்கு அல்ல!

ஆனால், சேத்தனின் மற்ற நாவல்களுக்கும் இதற்கும் உள்ள ஒரே வித்தியாசம் - இது ஒரு கெட்டவனின் கதை. ஆனாலும், கையில் பெட்டியோடு, நாவலின் ரைட்ஸ் வாங்க கியூவில் நிற்கிறார்கள் பாலிவுட் தயாரிப்பாளர்கள்!