Published:Updated:

உணவு நல்லது வேண்டும்!

உணவு நல்லது வேண்டும்!
பிரீமியம் ஸ்டோரி
உணவு நல்லது வேண்டும்!

உணவு நல்லது வேண்டும்!

உணவு நல்லது வேண்டும்!

உணவு நல்லது வேண்டும்!

Published:Updated:
உணவு நல்லது வேண்டும்!
பிரீமியம் ஸ்டோரி
உணவு நல்லது வேண்டும்!
உணவு நல்லது வேண்டும்!

ஆப்பிள் - பேரிக்காய் ஜூஸ்

தேவையானவை: ஆப்பிள் - 1, பேரிக்காய் சிறியது - 2.

செய்முறை: ஆப்பிள், பேரிக்காய்களை தோல், விதை நீக்கி, சிறிய துண்டுகளாக வெட்டி, சிறிது நீர் சேர்த்து, மிக்ஸியில் நன்கு அரைக்க வேண்டும். சர்க்கரை வேண்டாம்; பழங்களின் இனிப்புச் சுவையே போதுமானது.

பலன்கள்

* வைட்டமின் ஏ, சி, கே மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட தாதுஉப்புக்கள் நிறைந்துள்ளன.

* சருமம் பொலிவுபெறும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், நோய்கள் அண்டாது.

* இதய நோயாளிகள், சிறுநீரகத்தில் கற்கள் இருப்பவர்கள், புற்றுநோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஏற்றது.

* சர்க்கரை நோயாளிகள் பழங்களை ஜூஸாகச் சாப்பிடாமல், அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது.

* குழந்தைகள், கர்ப்பிணிகள் இதை அருந்தலாம். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிக அளவு உள்ளது.

உணவு நல்லது வேண்டும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெள்ளைப் பூசணி சாலட்

தேவையானவை: வெள்ளைப் பூசணி - 200 மி.கி., தயிர் - 2 கப்.

தாளிக்க: கடுகு, உளுந்து - தலா கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1, பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு துண்டு, கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: பூசணியை தோல் நீக்கித் துருவி, நன்றாகப் பிழிந்து தனியாக வைக்கவும். பிழிந்து வைத்த பூசணியுடன் தயிர், உப்பு சேர்த்து, நன்றாகக் கலக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து கலந்து வைத்துள்ள பூசணியுடன் சேர்த்துச் சாப்பிடவும்.

பலன்கள்: பூசணி, நீர்ச்சத்து நிறைந்தது. உடல் பருமன் குறைக்க உதவும். தயிரில் புரோபயாடிக் உள்ளது. குழந்தைகள், வயிற்றுப் புண் உள்ளவர்களுக்கு ஏற்றது.

உணவு நல்லது வேண்டும்!

தசைநார்களை உறுதிப்படுத்தும் உணவுகள்

புரதச்சத்து நிறைந்த உணவுகள், சிட்ரஸ் பழங்கள், தக்காளி, குடமிளகாய், மீன், கீரைகள் ஆகியவற்றைச் சாப்பிடலாம்.