Published:Updated:

ரியோ ரியல் ஹீரோஸ்!

ரியோ ரியல் ஹீரோஸ்!
பிரீமியம் ஸ்டோரி
ரியோ ரியல் ஹீரோஸ்!

பிடிப்பிடஸ்

ரியோ ரியல் ஹீரோஸ்!

பிடிப்பிடஸ்

Published:Updated:
ரியோ ரியல் ஹீரோஸ்!
பிரீமியம் ஸ்டோரி
ரியோ ரியல் ஹீரோஸ்!
ரியோ ரியல் ஹீரோஸ்!

ப்போதும் போலவே இந்த முறையும் அமெரிக்காவும் சீனாவும் தங்க வேட்டை யாட, ரியோ ஒலிம்பிக்-2016 இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. எண்ணற்ற மகிழ்ச்சிகள், அதிர்ச்சிகள், பிரிவுகள், உறவுகள், வேதனைகள், சாதனைகள் என கலந்துகட்டிய உணர்வுத் திருவிழாவில் இருந்து விறுவிறு ஹைலைட்ஸ் இங்கே!

ரியோ ரியல் ஹீரோஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கோல்டு ஃபிஷ்

பசிகொண்ட திமிங்கலம் போல பாய்கிறார் நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ். அள்ளிக்கோ அசத்திக்கோ என ஆடித் தள்ளுபடி ஆஃபர் போல தங்கப்பதக்கங்களை வரிசையாகக் கபளீகரம் பண்ணுகிறார் பெல்ப்ஸ். போட்டி தொடங்கிய இரண்டே நாட்களில் நான்கு தங்கங்களை வீட்டுக்கு கூரியர் பண்ணிவிட்டார். ஒரு போட்டிக்கு முன்னர், முகத்தைக் கோபமாக வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார். அந்தப் படத்தைப் போட்டு #PhelpsFace என்ற ஹேஷ்டேகில் அவரை கேலிபண்ணி கலாய்த்து தள்ளியது இணையசமூகம். ஆனால் பெல்ப்ஸ் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அடுத்தடுத்த போட்டிகளில் ஜெயித்துக் கொண்டிருந்தார்.

ரியோ ரியல் ஹீரோஸ்!

நல்லா பார்க்கிறாங்க டூட்டி!

ஒலிம்பிக்கில் முதல்முறையாக 100 மீட்டர் ஓட்டத்தில் கலந்துகொள்ளும் இந்தியப் பெண் டூட்டிசந்த். எவ்வளவு பெரிய சாதனை! ஆனால், நம்முடைய விளையாட்டுத் துறை அதிகாரிகளுக்கு அதைப் பற்றி எல்லாம் என்ன அக்கறை? இந்தியாவில் இருந்து பிரேசிலுக்கு, விமானத்தில் 36 மணி நேரப் பயணம். இதற்காக டிக்கெட் புக் பண்ணும்போது அதிகாரிகளுக்கு சொகுசான பிசினஸ் வகுப்பு, கஷ்டப்பட்டு ஓடி சாதிக்கப்போகும் டூட்டிக்கு எகனாமிக் வகுப்பு என டிக்கெட் போட்டு அழைத்துச் சென்றுள்ளனர்.

ரியோ ரியல் ஹீரோஸ்!

க்யூட் குண்டர்

100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் நீச்சல் போட்டியில் கலந்துகொள்ள, எத்தியோப்பிய நாட்டில் இருந்து வந்திருந்தார் ரோபல் ஹிரோஸ் ஹப்தே. அவருடைய உடல் அமைப்பு, நீச்சல் வீரர்களுக்கு சற்றும் தொடர்பு இல்லாத வகையில் இருந்தது. புரொஃபஷனல் வீரர்களுக்கு நடுவில் ஒரு சுண்டெலி போல்தான் அவர் நீந்தினார். நீச்சலில் எத்தியோப்பியா நாடு பின்தங்கியிருப்பதால், நீச்சலைப் பிரபலப்படுத்த அந்நாட்டு வீரரான ஹப்தேவுக்கு சர்வதேச நீச்சல் சங்கத்தால் இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டது. கிடைத்த வாய்ப்பை மறுக்காமல் அந்தக் குண்டு உடலை வைத்துக்கொண்டு சர்வதேச வீரர்களோடு போட்டிபோட்டு அவர் நீந்தியதற்கு அதிரிபுதிரி ரெஸ்பான்ஸ். ஜெயிக்காவிட்டாலும், ஒட்டு மொத்த மக்களின் அன்பைத் தாறுமாறாகப் பெற்றுக்கொண்டார். `எத்தியோப்பியாவில் எல்லோருக்குமே தொலைதூர ஓட்டத்தில் மட்டும்தான் ஆர்வம். அங்கே எல்லோருமே ஓடுவார்கள். ஆனால், நான் அதில் இருந்து மாறி வேறு ஒரு விஷயத்தைச் செய்ய விரும்பினேன். அதனால்தான் நீச்சலைத் தேர்ந்தெடுத்தேன். எங்கள் நாட்டில் பயிற்சி எடுக்க ஸ்விம்மிங் மையங்கள் கிடையாது. குளங்களில் நீந்தித்தான் பயிற்சி எடுத்தேன்' என ஹப்தே பேசப் பேச... நெஞ்சம் நெகிழ்ந்து ஹப்தேவுக்கு லைக்ஸைக் கொட்டி கொண்டாடித் தீர்த்தது விளையாட்டு உலகம்.

ரியோ ரியல் ஹீரோஸ்!

வின்னர்

இந்திய வீரர் தத்து போகனல், துடுப்புப் படகுப் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் ஸ்கல்ஸ் பிரிவில் கலந்துகொண்டார். கடினமான இந்தப் போட்டியில் கால் இறுதி வரை முன்னேறியவர், அதில் நான்காவது இடம்தான் பிடித்தார். இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றாலும் பதக்க வாய்ப்பு பறிபோனது. ஆனால், தத்து இந்த அளவுக்கு முன்னேறியதே மிகப்பெரிய சாதனை. பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிராவின் கிராமத்தில் பிறந்தவர், தத்து போகனல். அடிக்கடி விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் ஊரில் வெங்காய விவசாயியாகப் போராடிக்
கொண்டிருந்தார். கிணறுகளும் வயிறுகளும் மழையின்றி வற்றிப்போக, விவசாயம் செய்ய முடியாமல் வறுமையில் இருந்து தப்பிக்கவும் தந்தை இல்லாத குடும்பத்தைக் காக்கவும் ராணுவத்தில் இணைந்தார். அங்குதான் இந்தத் துடுப்புப் படகுப் போட்டியில் ஆர்வத்துடன் கலந்துகொள்ள ஆரம்பித்து, ஒலிம்பிக் வரை முன்னேறியிருக்கிறார். இப்போ சொல்லுங்க போகனலின் சாதனை சாமான்யமானதா? 

ரியோ ரியல் ஹீரோஸ்!
ரியோ ரியல் ஹீரோஸ்!

பிரேசில் ராணி

ஒலிம்பிக் போட்டியை நடத்தும் பிரேசிலுக்கு முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத்தந்தவர், 24 வயதான ஜூடோ ரெஃபேலா சில்வா. கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ரெஃபேலாவின் வெற்றியை, கால்பந்து வெற்றிக்கும் மேலாகக் கொண்டாடுகிறது பிரேசில். `2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில், தவறான முறையில் காலைப் பிடித்து இழுத்ததாக நான் போட்டியில் இருந்து அநியாயமாக வெளியேற்றப்பட்டேன். அப்போது சிலர் `நீ எல்லாம் குரங்குக் கூண்டுக்குள் இருக்க வேண்டியவள்' எனக் கிண்டல் அடித்தார்கள். அன்றுதான் என் வாழ்க்கையே இனி ஜூடோதான் என முடிவெடுத்தேன். 2013-ம் ஆண்டு உலக ஜூடோ பந்தயத்தில் சாம்பியன் பட்டம் வென்றேன். இதோ இப்போது என் சொந்த மண்ணில், என் மக்கள் முன்னிலையில் என் நாட்டுக்காக முதல் தங்கத்தை வென்றிருக்கிறேன். இந்த வெற்றியை லண்டனில் என்னைத் துரத்தியவர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன். அவர்கள் இல்லை என்றால், இந்த வெற்றி எனக்குச் சாத்தியமாகி இருக்காது' என்று அழுதபோது, ஒட்டுமொத்த பிரேசிலும் எமோஷனில் எகிறியது!

அதிர்ச்சிப் பாட்டி

தாய்லாந்து பளு தூக்கும் வீரர் க்ருவாய்தாங், 56 கிலோ எடைப்பிரிவில் வெண்கலம் வென்றார். நல்ல விஷயம்தானே... ஆனால், அவர் விளையாடுவதை ஆர்வத்தோடு நேரடி ஒளிபரப்பில் பார்த்துக்கொண்டிருந்த அவருடைய 84 வயது பாட்டி, பேரனின் சாதனையைப் பார்த்து ஓவர் எக்ஸைட்மென்ட்டில் அதிர்ச்சிக்குள்ளாகி மாரடைப்பால் மாண்டு விட்டார். போட்டியில் ஜெயித்துப் பதக்கம் வென்றபோதும் சோகத்தில் இருக்கிறார் க்ருவாய்தாங்.  

ரியோ ரியல் ஹீரோஸ்!

நீச்சல் பேபி

இந்த ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட மிக இளம் வீரர், நேபாள நாட்டைச் சேர்ந்த கௌரிகா சிங். நீச்சல் வீராங்கனையான இவருக்கு வயது 13. இந்த வயதிலேயே தன் அபார ஆற்றலால் ஒலிம்பிக்குக்குத் தகுதிபெற்றுள்ளார். முதல் போட்டியிலேயே அவருடைய உடை கிழிந்து விட்டது. பயிற்சியாளர் நேபாளத்தில் இருக்கிறார். பதற்றப்படாமல் போனிலேயே பயிற்சியாளரிடம் பேசி, உடனடியாக மாற்று விஷயங்களைக் கவனித்திருக்கிறார். போட்டியிலும் அபாரமாக நீச்சல் அடித்து அசத்தி, இலக்கை அடைந்தி ருக்கிறார். ஆனால், பதக்கம் வெல்லும் அளவுக்கு பாய்ச்சல் காட்ட முடியவில்லை.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

`இந்தியாவை சப்போர்ட் பண்ணுங்க... ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பாருங்க' எனக் கூவிக் கூவி விளம்பரம் பண்ணும் ஸ்டார்ஸ்போர்ட்ஸில், இந்திய வீரர்கள் கலந்துகொள்ளும் போட்டிகளை எப்படிப் பார்ப்பது  என்றுதான் தெரியவில்லை. நம் ஆட்கள் விளையாடும் போட்டிகளை ஒளிபரப்புவதே இல்லை என்பதால், விளையாட்டு ரசிகர்கள் கடுகடுவென இருக்கிறார்கள்!
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism