Published:Updated:

ஜென் Z - யார் அடுத்த சேவாக்?

ஜென் Z - யார் அடுத்த சேவாக்?
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - யார் அடுத்த சேவாக்?

கே, படம்: சு.குமரேசன்

ஜென் Z - யார் அடுத்த சேவாக்?

கே, படம்: சு.குமரேசன்

Published:Updated:
ஜென் Z - யார் அடுத்த சேவாக்?
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - யார் அடுத்த சேவாக்?
ஜென் Z - யார் அடுத்த சேவாக்?

``டெஸ்ட்டில் அதிவேக 300. ஒருநாள் போட்டியில் மின்னல்வேக 100... எதில் அதிக எக்ஸைட்மென்ட்?”

``இப்போதைக்கு இரண்டுமே இல்லை. என் ட்வீட் 1,000 ரீட்வீட் ஆவதில்தான் இப்போது எனக்கு ஆர்வம். நான்தான் ரிட்டையர்டு ஆகிவிட்டேனே பாஸ்”

முதல் ஓவர், முதல் பந்தையே பௌண்டரிக்கு பார்சல் பண்ணும் அதே வேகத்தில் பதில் வருகிறது வீரேந்தர் சேவாக்கிடம் இருந்து. தமிழ்நாடு பிரிமீயர் லீக் புரமோஷனுக்காக சென்னைக்கு வந்திருந்த
வரைச் சந்தித்து சில யார்க்கர்களை வீசினேன்.

``ஆல்ரெடி ஐ.பி.எல் இருக்கு... இன்னொரு லீக் தேவையா?”

ஜென் Z - யார் அடுத்த சேவாக்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடுபவர் களுக்கு தமிழ்நாடு பிரிமீயர் லீக் அருமையான வாய்ப்பு. நன்றாக விளையாடினால், உடனே ரஞ்சியிலோ, ஐ.பி.எல்-லிலோ விளையாடும் வாய்ப்பு கிடைக்கலாம். நான் சிறுநகரத்தில் இருந்து வந்தவன். அவர்கள் கஷ்டம் எனக்குத் தெரியும்.  மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸ்தான் நம்ம டீம்.”

``ஐபிஎல்-லில் 4 வெளிநாட்டு வீரர்கள் போல, இதில் மற்ற மாநில வீரர்கள் கலந்துக்கொள்ள அனுமதிக்கலாமா?”

``நிச்சயமாக இல்லை... ஒவ்வோர் அணியிலும் 11 தமிழக இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அதுதான் முக்கியம். ”

``டி20-ல் அதிரடியாக ஆடுபவர்கள் டெஸ்ட் போட்டியில் கலக்கமுடியுமா?”

``ரன் அடிப்பது எப்படி என்பதுதான் முக்கியம். அது தெரிந்தால் எந்த ஃபார்மட்டிலும் ரன் அடிக்கலாம். கிரிக்கெட் மாறிக்கொண்டே இருக்கிறது. டெஸ்ட் போட்டியிலே ஓப்பனர்கள் ஸ்லிப், கவர் ஏரியாவில் ஃபீல்டர்களின் தலைக்கு மேல் அடித்து ரன் சேர்க்கிறார்கள். கிரிக்கெட் மாறவில்லை. பேட்ஸ்மென்களின் அப்ரோச் மாறியிருக்கிறது.”

`டி20 போட்டிகள் பேட்ஸ்மென்களை மட்டுமே உருவாக்குகிறதா?”

``நிச்சயமாக இல்லை. அஷ்வின், பும்ரா, புவனேஷ்குமார் எல்லோருமே டி20-ல் நன்றாக விளையாடி இப்போது 50 ஓவர், டெஸ்ட் விளையாடுகிறார்கள். பெர்ஃபாமன்ஸ்தான் முக்கியம். ஃபார்மட் இல்லை.”

``இந்திய அணியின் பேட்டிங் கோச் பதவி காலியாக இருக்கிறது. நீங்க ட்ரை பண்ணலாமே?”

``எனக்கு நேரம் இல்லை. இந்தியன் டீமில் நிறைய நல்ல பேட்மென்கள் இருக்கிறார்கள். நமக்குத் தேவை நல்ல பௌலிங் கோச்தான்.”

``இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் அனில் கும்ப்ளே?''

``சரியான சாய்ஸ். சர்வதேச கிரிக்கெட்டில் 600 விக்கெட்கள் எடுத்திருக்கிறார். நான் சந்தித்ததிலே செம பாசிட்டிவ்வான நபர் கும்ப்ளே.”

``மேற்கு இந்தியத் தீவுகளில் நடந்த ஒரு டெஸ்ட் போட்டியைப் பார்க்க வந்தவர்களின் எண்ணிக்கை, விளையாடியவர்களைவிட குறைவு. டெஸ்ட் போட்டிகளின் எதிர்காலம் அவ்வளவுதானா?”

``இந்தியாவிலும் அப்படி நடந்திருக்கிறது. நமது மக்கள் தொகை அதிகம். அங்கே குறைவு. இந்தப் போட்டியில் அந்த டீமின் முக்கிய ஸ்டார்கள் சிலர் விளையாடவில்லை. அவர்கள் விளையாடி யிருந்தால் கூட்டம் வந்திருக்கும்.”

``பிங்க் நிறப் பந்துகளை டெஸ்ட் போட்டியில் பயன்படுத்தினால் மக்களிடையே ஆர்வம் அதிகம் ஆகுமா?”

``மக்கள், கிரிக்கெட் பார்க்கத்தான் வருகிறார்கள். பிங்க் நிறப் பந்துகளை அல்ல.”

``சச்சினைப் போல சேவாக் ஆடுவதாகச் சொன்னார்கள். உங்களைப்போல் இப்போது யார் ஆடுகிறார்கள்?”

``அதை நீங்கள்தான் சொல்ல வேண்டும். `நான் சச்சினைப் போல ஆடுகிறேன்’ என நானும் சொல்லவில்லை. சச்சினும் சொல்லவில்லை. அதைச் சொன்னது நீங்கள்தான். அதனால் இதையும் நீங்களே சொல்லிவிடுங்கள்” - சிரிக்கிறார் சின்ன சச்சின்... சேவாக்.

ஆமா... இந்திய டீமின் இப்போதைய சேவாக் யார்?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism