`நான் ரொம்ப பிசி’ என உட்கார்ந்த இடத்தில் இருந்து மொபைல் வழியாக ஓடிக்கொண்டிருக்கும் உலகம் இது. டீஸரைக்கூட ஃபாஸ்ட் ஃபார்வர்டு செய்துதான் பார்க்கிறார்கள். இரண்டு மணி நேர

சினிமாவில் ஒரு சீன் போரடித்தாலும், தியேட்டரில் ஆங்காங்கே மொபைல் வெளிச்சம் பரவுகிறது. இந்த லைஃப் ஸ்டைலுக்கு ஏற்ற ஒரு விஷயம்தான் `மைக்ரோ டேல்ஸ்'.

அதென்ன மைக்ரோ டேல்ஸ்?

ஒரு நாவல் அல்லது சிறுகதையில் அடங்கக்கூடிய ஒரு கதைக் கருவை இரண்டு, மூன்று வரிகளில் சொல்லிவிடுவது. (அட, நம்ம `10 செகண்ட் கதைகள்’தான்.) இப்படி ஷார்ட் அண்ட் ஸ்வீட் கதைகளைச் சொல்லும் மூன்று திறமைசாலி இளைஞர்கள்தான் அனுஜ், சிண்டன் மற்றும் ப்ரோமித் குஹா. ‘Commas - Half Strokes’ என்னும் ஃபேஸ்புக் பக்கத்தில் குட்டிக் கதைகளால் இளசுகளின் லைக்ஸை அள்ளுகிறார் ப்ரோமித். அனுஜும் சிண்டனும் ‘Terribly Tiny Tales’ மூலமாக பெருங்கனவுகளைக்கூட குட்டிக்குட்டி நட்சத்திரக் கதைகளாக மாற்றிக் கலக்குகிறார்கள்.

அனுஜ், ‘டெரிபிளி டைனி டேல்ஸ்’ ஆரம்பித்தது 2013-ம் ஆண்டில். `ட்வீட் சைஸ் கதைகள்தான் எங்க பேஜ்ல இடம்பிடிக்கும். எல்லாரும் எழுதலாம்’ எனச் சொன்னபோது முன்வந்தவர்தான் சிண்டன். இப்போது அனுஜுக்கு சிண்டன் அவரது பெர்சனல் மொபைல்போல, அவ்வளவு க்ளோஸ். முதலில் ஃபேஸ்புக் பேஜ் ஆக மட்டுமே ஆரம்பிக்கப்பட்ட டைனி டேல்ஸ், இப்போது 14 பேர் கொண்ட அலுவலகமாக உருவெடுத்துள்ளது. இன்று பல கதை சொல்லிகள், டைனி டேல்ஸ்களில் தினமும் 500-க்கும் மேற்பட்ட மைக்ரோ கதைகளை எழுதிவருகின்றனர்.

6.9 லட்சம் ஃபாலோயர்களைக் கொண்டுள்ள டெரிபிளி டைனி டேல்ஸ்க்குத்தான் மைக்ரோ கதை உலகில் முதல் இடம். முதலில் 140 சொற்களைக் கொண்ட கதைகளை மட்டுமே சொல்லிவந்த டைனி டேல்ஸ், டைனி க்ளிம்ப்ஸ் என்னும் 14,000 வார்த்தைகள்கொண்ட கதைகளையும், டைனி டாக்கீஸ் என்னும் 10 நிமிட மைக்ரோ படங்களையும் கொண்டுவர முயற்சிக்கிறது.

``மைக்ரோ டேல்ஸ் கதைகளைப் படிக்க உங்களுக்கு வெறும் சில நொடிகள் போதும். ஆனால், அந்தக் கதை உங்களுக்குள் விட்டுச்செல்லும் தாக்கம் வாழ்நாள் முழுக்க நீடிப்பதாக இருக்க வேண்டும்’’-மைக்ரோ கதைகள் போலவே இதையும் ஷார்ட்டாகச் சொல்கிறார்கள் அனுஜ் மற்றும் சிண்டன் இருவரும்.

கொல்கத்தாவைச் சேர்ந்த ப்ரோமித் கடந்த மார்ச் மாதம் விளையாட்டாக மைக்ரோ டேல்ஸ் கதைகளை ஃபேஸ்புக் பக்கத்தில் எழுத ஆரம்பித்தார். இன்று ப்ரோமித்தின் பக்கத்தில் குட்டிக் கதைசொல்லிகள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள்.

``என் ஃபேஸ்புக் பேஜ்ல வர்ற அடுத்தவங்க கதையில அவங்க பேர் வரும். நல்ல கதைகளை செலெக்ட் பண்ண தினமும் பல மணி நேரம் ஆகும். Commas - Half Strokes ஃபாலோ செய்யும் 63 சதவிகிதம் பேர் இளைஞர்கள், அதனாலதான் காதல் மற்றும் பிரேக் அப் மைக்ரோ டேல்ஸ்களுக்கு மவுசு அதிகம். உஷ்... இதெல்லாம் என் அம்மாவுக்குத் தெரியாது சொல்லிடாதீங்க’’ எனச் சிரித்துக்கொண்டே சொல்கிறார் பள்ளி செல்லும் ப்ரோமித்.

ஹை ஸ்பீட் உலகில் நின்று, நிதானமாக படிக்க நேரம் இல்லாதவர்களுக்கு இரண்டு வரிகளில் வாழ்க்கையையே சொல்லிவிடும் ‘மைக்ரோ டேல்ஸ்’ கதைகள் நல்ல மைண்ட் சார்ஜர்ஸ்!

www.facebook.com/terriblytinytales

www.facebook.com/UsCAHS/