Published:Updated:

ஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 3

ஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 3
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 3

Dr. ஆர்.கார்த்திகேயன், ஓவியம்: கார்த்திகேயன் மேடி

ஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 3

Dr. ஆர்.கார்த்திகேயன், ஓவியம்: கார்த்திகேயன் மேடி

Published:Updated:
ஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 3
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 3
ஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 3

#வேணாம்-மச்சான்-வேணாம்

ஆண்களுக்கு பெண்களும், பெண்களுக்கு ஆண்களும்தான் எல்லாம்.

எல்லாம் என்றால் என்ன? எல்லா ஆசை களுக்கும் கோபங்களுக்கும் பிரச்னைகளுக்கும் காரண காரியம்... இப்படி எல்லாம். இப்படி எதிரும் புதிருமாக இருந்துகொண்டே ஆராதிப் பையும் வன்முறையையும் செய்துகொண்டிருக்கிறோம்.

ஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 3

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்று என்னிடம் சைக்கோதெரபிக்கு வருபவர்களுக்கு, குறிப்பாக 30 வயதுக்குக் குறைவானோருக்கு உறவுப் பிரச்னைதான் பிரதானம்.

`ஆண்கள் இல்லாமல் பெண்களும், பெண்கள் இல்லாமல் ஆண்களும் வாழவே முடியாதா?’ என என்னிடம் கேட்டவர், திருமண வாழ்வில் விரக்தியுற்றவர்.

`முடியுமா... முடியாதா என்பதற்கு முன்னர் எதற்கு அப்படி வாழவேண்டும் என யோசியுங்கள்’ என்றேன். அடுத்த செஷன் அவர் வரவில்லை.

#ரன்பீர்_கபூர்

வயதானவுடன், பெண்கள் ஆண்களைப்போல, ஆண்கள் பெண்களைப்போல மாறிவருவதாகக் கவலைப்படுகிறார்கள். இது எல்லா காலத்திலும் நிகழ்வதுதான்.

அழகு, ஆபரணம், அலங்காரம்... என ஆண்கள் பெண்களுக்கு இணையாகச் செலவுசெய்கிறார்கள். இந்தி படத்தில் ரன்பீர் கபூர் கட்டியிருக்கும் ஒரே டவலை நழுவவிட்டு புரட்சிசெய்கிறார். ஷாரூக், பாத் டப்பில் மலர் தூவலோடு குளித்தார்... விளம்பரத்துக்கு. எல்லா கதாநாயகர்களிடம் பெண்களுக்கான நளினம் ஒளிந்திருக்கிறது. கூர்ந்து பாருங்கள்... எம்.ஜி.ஆர்., `அரசிளங்குமரி’ போன்ற படங்களில் leggings  போட்டிருப்பார். கண்ணுக்கு மை, காதணி, உதட்டுச் சாயம் என அனைத்துப் பெண் அலங்காரச் சமாசாரங்களையும் பயன்படுத்திய ஹீரோ அவர். தவிரவும், சட்டையைக் கழற்றுவதில் இந்திய முன்னோடி. கமல் காக்கிச் சட்டை போட்டாலும் கழற்ற ஆரம்பித்தது எல்லாம் அப்புறம்தான்.

டூயட் காட்சியில்கூட, ஆண் ரசிகர்கள் கதாநாயகனின் உடையை, உடலை உச்சு கொட்டி ரசிப்பது, உட்சபட்சமாக எம்.ஜி.ஆருக்குத்தான் நடந்தது. `தங்கபஸ்பம் சாப்பிட்ட உடம்பு' எனச் சிலாகிப்பது தியேட்டரிலேயே கேட்கும்.

ஆண்களைப்போல பெண்கள் நடை, உடை, பாவனைகளை மாற்றி (காலகாலமாகத் தொடர்ந்து) வருவதும் அதிகாரப் பகிர்வுக்கான முதல் அடியெடுத்தல்.

ஆணின் பெண்மையும் பெண்ணின் ஆண்மையும் படைப்பின் நியதிகள்.

ஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 3#அரை_மார்க்

பெண்களிடம் ஆண்மையையும் ஆண்களிடம் பெண்மையையும் ஒருங்கே நான் காணும் இடம்...  பள்ளிகளில் நடைபெறும் parents – teachers meeting.

சிறுபான்மையினராக அப்பாக்கள் நிறையும் சபை அது. அம்மாக்கள் வரிசையில் நிற்காமல் முட்டியால் முட்டி முன்னேறுவார்கள்.
என் பையனுக்கு ஏன் அரை மார்க் போடவில்லை?’ என எம்.எல்.ஏ ரேஞ்சுக்கு உரக்கக் கேள்வி கேட்பார்கள். அங்கே பக்கவாத்தியக் கலைஞன் போல அடக்கமாக நிற்பார்கள் அப்பாக்கள்!

நாளைய அப்பாக்களே... உங்கள் சீன் எல்லாம் பிள்ளையை ஸ்கூலில் சேர்க்கும் வரைதான். பிறகு என்ன சுளுக்குதான்! ஹீரோயிஸத்தை மூட்டை கட்டிவைத்துவிட்டு அடிபணியத் தயாராகுங்கள்!

#செல்ஃபி

`செல்ஃபி மோகம் யாருக்கு அதிகம் ஆண்களுக்கா... பெண்களுக்கா?’ என பட்டிமன்றம் நடத்தலாம். ஒரு நடுத்தர வயதுக்காரர் சாலையைக் கடக்கும்போது செல்ஃபி எடுக்க முயற்சித்ததை, டிராஃபிக் போலீஸ் பார்த்து, கெட்டவார்த்தையில் திட்டி, மிச்ச சாலையைக் கடக்கவைத்தார். அவர் சொன்ன கெட்டவார்த்தையைப் பிரசுரிக்க முடியாவிட்டாலும் யோசிக்கவைத்தது. 
         
#சுய_மதிப்பு

செல்ஃபி எடுக்கும் எல்லாரிடமும் ஒரு narcissism தலைதூக்குவதைப் பார்க்கலாம். தன் சுயமதிப்பை மீட்க, தினம் ஒரு செல்ஃபியையாவது ஃபேஸ்புக்கில் போடும் ஆட்கள் அதிகரித்துவிட்டார்கள். சுயபிம்பம் படுத்தும்பாடு இன்று பெரும் நிறுவனங்களுக்கு சந்தை வாய்ப்பு.

இடுப்பைச் செதுக்க, நிறம் கூட்ட, வழுக்கை தீர, பிருஷ்டம் சீராக, மார்பகத்தைத் தூக்க, பற்கள் வரிசை பட, தோல் மெருகுபட, வேண்டாத முடி நீங்க, வயிறு கரைய... என நடிகர் நடிகையருக்கு சளைக்காமல் செலவுசெய்யத் தயாராகிவிட்டோம். `சலூன்ல ஆகிறது எல்லாம் செலவு இல்ல பாஸ்... மூலதனம்' என்றான் ஓர் இளம்மேதை!

#பார்பி_பொம்மை

தன்னை விரும்பி ஏற்காதபோதுதான், தன்னுள் ஆயிரம் குறைகள் இருப்பதாகத் தெரிகிறது. ஒவ்வொன்றையும் சரிசெய்து தன்னை நிரூபிப்பது அனைத்தும், சுயபிம்பக் கோளாறுகள். பார்பி பொம்மைபோல உடலுக்காக இளைக்கும் anorexia பெண்கள், இன்று உலகம் முழுதும் பெருகிவருகிறார்கள்.

`நான் சரியில்லை' என்ற எண்ணம்தான் எதிரி. அதை நிவர்த்திசெய்ய ஒரே வழிதான் உண்டு. உங்களை நீங்களே லவ் பண்ணுவதுதான். குறைவில்லாத ஏமாற்றம் இல்லாத லவ் இது.

I love and accept myself என தினம் சொல்லுங்கள். பாதி சுயபிம்பப் பிரச்னைகள் காணாமல்போகும். உங்களை விரும்பி நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள். பிறகு இந்த உலத்தை விரும்பி ஏற்றுக்கொள்வீர்கள்!

#முக்கோணச்_சிந்தனை

‘என்னிடம் எதுவும் இல்லை’ எனத் துக்கப்பட்டு தற்கொலையை நினைக்கும் இளைஞர்கள் பெருகிவருகிறார்கள். இதற்குக் காரணமான depressive triad எனும் முக்கோணச் சிந்தனை. அதைப் பற்றி அடுத்த வாரம் விரிவாகச் சொல்கிறேன்.

அதற்கு முன்னர் ஓர் ஊக்கச் செய்தி. மீரா ஷெனாய் என்பவர் உடல் ஊனமுற்றோருக்குப் பயிற்சி அளித்து தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கித் தருகிறார். லெமன் ட்ரீ போன்ற விடுதிகளில், கால்வாசி பேர் மாற்றுத்திறனாளிகள். மற்றவர்கள் செய்யும் வேலையை இவர்கள் சிறப்பாகச் செய்வதால், இதை நிறுவனங்கள் ஒரு business case ஆகப் பார்ப்பதாகச் சொல்கிறார் மீரா. உடல் ஊனத்தைவிட கண்ணுக்குத் தெரியாத மன ஊனம் கொடியது.

#ஸ்கிரிப்ட்

எதை குறும்படம் எடுக்கலாம், எங்கு அனுப்பலாம் எனத் துடிக்கும் நாளைய இயக்குநர்களுக்கு ஒரு வாய்ப்பு. ஒரே அறைக்குள் நடக்கும், பத்து நிமிடத்தில் படமாக்கக்கூடிய ஒரு ஸ்கிரிப்ட்டை எழுதி அனுப்புங்கள். சிறந்த ஒரு ஸ்கிரிப்ட்டைத் தயாரிப்புக்குத் தேர்வுசெய்கிறேன்! கேம்? genz@vikatan.com

ஒரே அறையில் நடக்கும் கதையை 100 நிமிடப் படமாக எடுத்து, வெற்றி கண்டிருக்கிறார் சிட்னி லூமெட்.

படத்தின் பெயர்? அடுத்த வாரம் சொல்கிறேன்!

- மற்றவை நெக்ஸ்ட் வீக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism