Published:Updated:

ஜென் Z - உங்க பூட்டு ஸ்ட்ராங்கா இருக்கா?

ஜென் Z - உங்க பூட்டு ஸ்ட்ராங்கா இருக்கா?
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - உங்க பூட்டு ஸ்ட்ராங்கா இருக்கா?

கே, ஓவியம்: காமேடி

ஜென் Z - உங்க பூட்டு ஸ்ட்ராங்கா இருக்கா?

கே, ஓவியம்: காமேடி

Published:Updated:
ஜென் Z - உங்க பூட்டு ஸ்ட்ராங்கா இருக்கா?
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - உங்க பூட்டு ஸ்ட்ராங்கா இருக்கா?
ஜென் Z - உங்க பூட்டு ஸ்ட்ராங்கா இருக்கா?

பாஸ்வேர்டின் பரிணாம வளர்ச்சியை ஒரு அனிமேஷன் படமாகவே எடுக்கலாம். ஆரம்பத்தில் `ragav'னு பாஸ்வேர்டு வெச்சாலே ஓ.கே சொன்ன சிஸ்டம், அடுத்த கட்டமா `உன் பேரு குட்டியா இருக்கே’னு தலையைச் சொறிஞ்சது. முழுப்பேரை வெச்சா நல்லதுதான்னு `iamragavan'னு பாஸ்வேர்டு மாத்தினோம். ம்ஹூம்... `கூட சில நம்பர்ஸ் சேருடானு செக்யூரிட்டி லெவலை அதிகமாக்கியது. `iamragavan89’னு பிறந்த வருஷத்தைச் சேர்த்தோம். கொஞ்ச நாள் போனதும், கேப்ஸ்லாக் விஷயம் சிஸ்டத்துக்கு ஞாபகத்துக்கு வர, `ஒழுங்கா கேப்ஸ் லெட்டர் வைக்கிறியா... இல்ல வாய்க்குள்ள கத்தியை விட்டுச் சுத்தவா?’னு கேட்டது. சரினு `IAMragavan89’னு பாஸ்வேர்டை மாத்தினோம். அதுக்கு அப்புறம், கீபோர்டுல ஸ்பெஷல் கேரக்டர்ஸ் இருக்கிறது தண்டத்துக்கு இல்லை. அதுக்கும் ஸ்பேஸ் கொடுனு சொன்னது. ஸோ... `IAMragavan$89’னு டி-ஷர்ட் ரேட் மாதிரி மாத்தினோம். கடைசியா, `மாசத்துக்கு ஒரு தடவை பாஸ்வேர்டு மாத்தணும் பாஸ்’னு ஒரு ஆர்டினன்ஸ இறக்கிவிட்டுடுறாங்க. அத்தனை பேருக்கு எங்கேடா போவோம்?

ஜென் Z - உங்க பூட்டு ஸ்ட்ராங்கா இருக்கா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாஸ்வேர்டுல பேருன்னதும் காதலிகள் ஞாபகத்துக்கு வர்றாங்க. `உன் பாஸ்வேர்டைச் சொல். உன் கடைசி கேர்ள் ஃப்ரெண்ட் பேரைச் சொல்றேன்'னு ட்விட்டர்ல அடிச்சுக் கிளப்புறாங்க பிலாசஃபி பிரபாகரன்கள். `லவ்வுக்கு பாஸ்போர்ட்டா வந்தவ, மெயிலுக்கு பாஸ்வேர்டா மாறிட்டா'னு மதன் கார்க்கி பாடல் எழுதவேண்டியது மட்டும்தான் பாக்கி. ஒரு சில கில்லாடிகள் பாஸ்வேர்டை கேட்டாலே பத்திட்டு வரும். `RanjiNithya SindhuLekhaAll91’. ஒருத்தன் பர்ஸைப் பார்த்துப் பொறாமைப்படலாம். பாஸ்வேர்டைப் பார்த்துமா பொறாமைப்பட முடியும்?

பாஸ்வேர்டுக்குள் டெக்னாலஜியை ஒளிச்சு வெச்சிருக்கான் ஆண்ட்ராய்டுக்காரன். கேர்ள் ஃப்ரெண்டுகூட எடுத்த செல்ஃபியை மொபைல்ல சேவ் பண்ணிவெச்சா மாட்டுறதுக்கு வாய்ப்பு அதிகம். அதுக்காகவே ஒரு ஆப் கண்டுபிடிச்சிருக்காங்க. அதை இன்ஸ்டால் பண்றப்போ ரெண்டு பாஸ்வேர்டுகள் கேட்கும். 1234-னு டைப் பண்ணா, கால்குலேட்டரா ஓப்பன் ஆகிற ஆப், இன்னொரு சீக்ரெட் பாஸ்வேர்டை டைப் பண்ணினா கேலரியா மாறும். உள்ள போட்டோக்களா ஓடும். யார் நம் மொபைலை செக் பண்ணாலும் மாட்டிக்காம இருக்க உதவுமாம் இந்த டபுள் பாஸ்வேர்டு ஆப். `ஆபத்பாந்தவா... அநாதரட்சகா... பாஸ்வேர்டு பிதா’னு கை எடுத்துக் கும்பிடுறாங்க ஆல் பர்ப்பஸ் ரோமியோக்கள்.

பாஸ்வேர்டுல இவ்ளோ நல்லது பண்ற இதே உலகத்துலதான், பாம் வைக்கிறவங்களும் இருக்காங்க. பஸ்ல போறப்போ போரடிக்குதுனு, மொபைலுக்கு `Virus found'னு பேரு வெச்சிருவானுங்க. அடுத்தவன் மொபைல்ல இவன் மொபைல் டிடெக்ட் ஆனா ஏதோ வைரஸ் வந்துடுச்சுன்னு பதறி, மொபைல் ஆஃப் பண்ணவைக்கணும். அதுல ஒரு குட்டி சந்தோஷம். எதிர்வீட்டுக்குப் புதுசா ஒரு பொண்ணு குடி வந்தா, அவ பேரைக் கண்டுபிடிக்கக்கூட இந்த டெக்னிக்தான் யூஸ் ஆகுது. `Ishubaby’, `realriya’னு பேர் வெச்சா எப்படிங்க? இந்த மாதிரி பேர் வைக்கிறவங்க, பாஸ்வேர்டையும் இந்த அழகுலதான் வைப்பாங்கங்கிறதுதான் இன்டெர்நெட் தியரி.

பாஸ் பண்ண சோம்பேறித்தனமா இருக்கலாம். பாஸ்வேர்டுல என்னய்யா சோம்பேறித்தனம்? கீபோர்டுல வரிசையா இருக்கிற qwerty, asdfgh, 123456னு பாஸ்வேர்டு வைப்பாங்க. உலகத்துல அதிகமா யூஸ் ஆகிற பாஸ்வேர்டு எது தெரியுமா? qwerty-தானாம். நமக்கெல்லாம் லைக்ஸ் வாங்கித் தர்ற மார்க் ஸுக்கர்பெர்க் அக்கவுன்டையே சில மாசம் முன்னாடி உடைச்சுட்டாங்க. அவர் பாஸ்வேர்டு என்ன தெரியுமா? `dadada’. நமக்கு சொத்து எதுவும் இல்லாம இருக்கலாம். சொந்தமா ஒரு பாஸ்வேர்டுகூடவா வெச்சுக்கக் கூடாது? யோசிங்க. புதுசா, இளசா, ரவுசா யோசிங்க. ஜிமெயில் ஐடி அவைலபிளானு பாத்துட்டுத்தான் குழந்தைக்கே இப்பலாம் பேர் வைக்கிறாங்க. நாம பாஸ்வேர்டுக்காச்சும் கொஞ்சம் மெனக்கெடலாம் இல்ல? நான் பல காலமா யோசிச்சு, எனக்குனு வெச்சிருக்கிற பாஸ்வேர்டு இதுதான் ************