Published:Updated:

ஜென் Z - நான் பிரசன்னா ஆனது எப்படி?

ஜென் Z - நான் பிரசன்னா ஆனது எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - நான் பிரசன்னா ஆனது எப்படி?

சிபி

ஜென் Z - நான் பிரசன்னா ஆனது எப்படி?

சிபி

Published:Updated:
ஜென் Z - நான் பிரசன்னா ஆனது எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - நான் பிரசன்னா ஆனது எப்படி?
ஜென் Z - நான் பிரசன்னா ஆனது எப்படி?

ழக்குரைஞர் பிரசன்னா. தொலைக்காட்சி விவாதங்களில் பிரபலமான முகம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்தித் தொடர்பு இணைச் செயலாளர்.

``என் தமிழ் அய்யா மனுவேல் ராஜிடம் ஒருமுறை ‘சிந்திக்கிறதுன்னா என்ன?’ எனக் கேட்டேன்.  அவர் ‘பெரியார் பட காலண்டருக்குப் பின்னால் ‘ராகுகாலமும் எமகண்டமும்’ என பதில் தந்தார். இதுதான்

ஜென் Z - நான் பிரசன்னா ஆனது எப்படி?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நான் கேட்ட முதல் பகுத்தறிவு வாசகம். அவர்தான் ‘க்ளாஸ்ல நல்லா கத்துறடா. பேச்சுப் போட்டியில கலந்துக்கோ’ எனச் சொன்னார். என் முதல் பேச்சுப் போட்டியில் முதல் பரிசு வாங்கினேன். ‘ஏன் எனக்கு முதல் பரிசு கொடுத்தீங்க?’ என நடுவர்களிடமே கேட்டேன். ‘நீ மேடையில வந்து நின்னப்ப, உன்கூடவே தன்னம்பிக்கையும் வந்து நின்னுச்சு. அதனாலதான் முதல் பரிசு’ எனச் சொன்னார்கள். அதன் பிறகு எங்கே பேச்சுப் போட்டி நடந்தாலும் கலந்துகொள்வது வழக்கமானது. ஆனால், முதல் பரிசை எப்போதும் ஒரு அக்கா வாங்கிக்கொண்டே இருந்தார். அவரிடம் கேட்டபோது, ‘நீ நிறையப் படிக்கணும்; எல்லாத்தையும் படிக்கணும்’ என்றார். அன்று தொடங்கியதுதான் என் வாசிப்புப் பழக்கம்.

வாசிப்பது என் சுவாசமானது. ஆனால், வீட்டில் அதற்கான சூழல் இல்லை. ஒரே ஓர் அறை, அதில் ஒரே ஒரு விளக்கு. இந்த லைட்டை அணைத்தால்தான் மற்றவர்கள் தூங்க முடியும். நான் புத்தகத்துடன் வெளியே வந்து, தெருவிளக்கில் நின்று வாசிப்பேன். வாசிப்பு, எனக்கு உலகை அறிமுகப்படுத்தியது.

என் கல்லூரியில் முதல் நாள். `உங்கள் எதிர்கால லட்சியம் என்ன?' என்ற கேள்விக்கு ‘கலெக்டர், வழக்குரைஞர், மருத்துவர், பிசினஸ் மேன் என்ற பதில்களுக்கு இடையில் `நான் அரசியல்வாதியாக வேண்டும்' என்றேன். எல்லோரும் என்னைப் பார்த்துக் கேலியாகச் சிரித்தார்கள். அந்த ஏளனச் சிரிப்புதான், இன்று அரசியலில் என்னை ஓர் அங்கமாக்கியிருக்கிறது.

பள்ளிப் பருவம் முடிந்ததும், திருச்சியில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரி முதல்வரிடம் பள்ளியில் நான் வாங்கிய பரிசு, சான்றிதழ்களைக் காட்டி ‘நான் படிக்கணும். அதுக்கான பணம் என்கிட்ட இல்லை. எனக்கு உதவி பண்ணுங்க’ என்றேன். உடனே, அவர்  பணமே வாங்காமல் நான் கேட்ட ஆங்கில இலக்கியப் பிரிவில் சேர்த்துக்கொண்டார். கல்லூரி முடிந்ததும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை. ஆனால், என் கவனம் முழுவதும் என் கனவின் மீதே இருந்தது. ஒருகட்டத்தில் திருச்சியைவிட்டு சென்னை நோக்கி ஓட்டம் எடுத்தேன். அந்த நாள் 2005 ஆகஸ்ட் 21. சென்னையில் வந்து விழுந்தேன். அடுத்த கட்டமாக, சட்டப்படிப்பு நுழைவுத்தேர்வு எழுதி தேர்வானேன்.

ஒருநாள், திராவிடர் கழகம் நடத்திய பேச்சுப் போட்டியில், மாநிலத்தில் முதல் பரிசு பெற்றேன். எனக்குப் பரிசு கொடுத்தது தலைவர் கலைஞர். அவரோடு ஒரு புகைப்படமாவது எடுத்துவிட வேண்டும் என்பது என் நீண்டநாள் ஆசை. அவர் கையால் தங்கப்பதக்கம் வாங்கியதில் எல்லையற்ற மகிழ்ச்சி. அவரிடம் ‘எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும்’ என்றேன். ‘அப்படியா!’ எனக் கேட்டவர், அந்தத் தங்கப்பதக்கத்தைப் போடும்போது ‘நீ நல்லா வருவ’ என்றார். அது என் கனவுகளுக்கான முதல் அடிக்கல். என் அரசியல் பயணம் தொடங்கியது. சட்டக் கல்லூரி மாணவர் அணிச் செயலாளராக, பிறகு தலைமைக் கழகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டேன். கடந்த ஆண்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்தித் தொடர்பு இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டேன். இவை எல்லாம் எனக்குக் கிடைத்த அங்கீகாரங்கள் என்பதைவிட, இன்னமும் நான் கடுமையாக உழைக்க வேண்டும் என்ற பொறுப்பு தந்தவை.

‘No pain... No gain’ - இந்த இரண்டு வரிகளில் அடங்கிவிடும், நான் கடந்து வந்த வாழ்க்கை. அந்த வரிகள்தான் என்னை உருவாக்கின.''

ரோல்மாடல்

மார்ட்டின் லூதர் கிங், எங்கர்சால், அறிஞர் அண்ணா, கருணாநிதி.

பிடித்த இடம்

பெரியார் திடல். அய்யாவின் நினைவு இடம்.

பொழுதுபோக்கு

வாசிப்பு... புத்தகம் மட்டும் அல்ல. நாளிதழ்கள், வார இதழ்கள் அனைத்தையும் வாசிப்பேன். எப்போதாவது நண்பர்களுடன் கிழக்கு கடற்கரை சாலையில்
லாங் டிரைவ்.

மந்த்ரா

இலக்கு நோக்கி ஓடிக்கொண்டே இரு. தடைகள் வரும். அதைக் கோபத்தோடு தாண்டி ஓடு. ஆனால், உன் கோபத்தை ஒருபோதும் வெளியே காட்டாமல் ஓடு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism