Published:Updated:

மீண்டும் ராகுல்!

மீண்டும் ராகுல்!
பிரீமியம் ஸ்டோரி
மீண்டும் ராகுல்!

தா.ரமேஷ்

மீண்டும் ராகுல்!

தா.ரமேஷ்

Published:Updated:
மீண்டும் ராகுல்!
பிரீமியம் ஸ்டோரி
மீண்டும் ராகுல்!
மீண்டும் ராகுல்!

வ்வோர் ஐந்து ஆண்டுகளுக்கும் ஒருமுறை ஒரு புதிய வீரரின் வெற்றிச் சரித்திரம் இந்திய அணியில்   தொடங்கும். சூறாவளியைப்போல ஓர் ஆட்டக்காரர் உள்ளே புகுந்து அடித்து ஆடி அசரவைப்பார். மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நடந்துவரும் டெஸ்ட் போட்டிகளில் அப்படி ஓர் ஆட்டக்காரர் அடுத்தடுத்து முத்திரை பதித்துக்கொண்டிருக்கிறார். அவர்...
கே.எல்.ராகுல். ட்ராவிட் மண்ணில் இருந்து முளைத்து வந்திருக்கும் இன்னொரு வித்து.

காத்துவாங்கும் மைதானங்கள்கூட, கிறிஸ்துமஸ் தினத்துக்கு மறுநாள் தொடங்கும் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின்போது நிரம்பி வழியும். மெல்போர்னில் 2014-ம் ஆண்டில் நடந்த, அப்படி ஒரு போட்டியில்தான் கே.எல்.ராகுல் முதன்முறையாக இந்திய அணியின் ஜெர்ஸி அணிந்தார்.

ராகுலின் முதல் டெஸ்ட், கேப்டன் தோனியின் கடைசி மேட்ச்சாக அமைந்தது. தோனியின் கையால் தொப்பியை வாங்கி, ஆயிரம் கனவுகளுடன் 90 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் களம் புகுந்த ராகுல், முதல் இன்னிங்ஸில் அடித்த ரன்கள் மூன்று. இரண்டாவது இன்னிங்ஸில் மூன்றாவது வீரராக இறக்கிவிடப்பட்டார். ம்ஹும் அப்போதும் செல்ஃப் எடுக்கவில்லை.
ஒரு ரன்னுடன் பெவிலியன் திரும்பினார். புல் ஷாட் அடிக்கிறேன் என, ஷேன் வாட்சனுக்கு ஈஸி கேட்ச் கொடுத்தார். போதாக்குறைக்கு, அதே ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் கொடுத்த கேட்ச்சையும் ராகுல் கோட்டைவிட்டார்.

அறிமுகப் போட்டியில் இப்படி அடுத்தடுத்து சொதப்பினால், யாருக்குத்தான் அடுத்த போட்டியில் இடம் கிடைக்கும்? சோர்ந்துபோயிருந்தார் ராகுல். சூழல் மாறியது. டெஸ்ட் மேட்ச்சுக்கு தோனி குட்பை சொல்ல, விராட் கோஹ்லி இந்திய டெஸ்ட் கேப்டன் என அறிவிக்கப்பட்டார். `இவர் இளைஞர். இவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கலாம்' என, ராகுலை ஓப்பனிங் இறக்கிவிட்டார் கோஹ்லி.

பெளன்சர்கள் எகிறும் சிட்னி மைதானத்தில் நான்காவது டெஸ்ட். ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் அடித்தது 572 ரன்கள். இமாலய ஸ்கோர். இந்தியத் தரப்பிலோ ஓப்பனர் முரளிவிஜய் டக் அவுட். இதுதான் தருணம். சுதாரித்தார் ராகுல். ரோகித்தும் கேப்டன் கோஹ்லியும் நம்பிக்கை வார்த்தை களைச் சொல்ல, அட்டகாசமான ஒரு இன்னிங்ஸ் ஆடி, சதம் அடித்தார். இரண்டாவது டெஸ்ட் போட்டியிலேயே முதல் சதம். கோஹ்லியின் தோளில் முகம் புதைத்து உள்ளூர நன்றி சொன்னார் ராகுல்.

மீண்டும் ராகுல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராகுலின் தந்தை லோகேஷ், தீவிர கவாஸ்கர் ரசிகர். கவாஸ்கரின் மகன் பெயர் ரோஹன். ஆனால், ராகுல் என நினைத்துத்தான் தவறாக தன் மகனுக்குப் பெயர் வைத்துவிட்டதாகச் சொல்லியிருக் கிறார் லோகேஷ். மைசூரில் பிறந்த ராகுல், பெங்களூருக்குக் குடிப்பெயர்ந்த பிறகு கிரிக்கெட் வாழ்வில் ஏறுமுகம். 2010-ம் ஆண்டில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் இடம்பெற்றிருந்த ராகுல், 2014-15 சீஸனில், துலீப் டிராஃபி தொடரில் கர்நாடக அணிக்காக விளாசியதைப் பார்த்து, அவரை இந்திய அணிக்குத் தேர்வுசெய்தனர் தேர்வாளர்கள்.

டாப் ஆர்டரில் மட்டுமே ஜொலிக்க முடியும் என்பதால், மற்ற வீரர்களின் ஃபார்ம் அவுட், இஞ்சுரிக்காக ராகுல் காத்திருக்கவேண்டி இருந்தது. இன்னமும் அப்படித்தான். சிட்னி டெஸ்ட்டில் ஷிக்கர் தவானை நீக்கியதால், இலங்கைத் தொடரில் தவான் காயமடைந்ததால், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் முரளிவிஜய் காயம் அடைந்ததால்தான் ராகுல் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க முடிந்தது. ஆனாலும், கிடைத்த நேரத்தில் முத்திரை பதிக்க தவறவில்லை. அவர் அடித்த சதங்கள் அனைத்தும் அந்நிய மண்ணில் அடிக்கப்பட்டவை.

ஒருமுறை கர்நாடக அணிக்காக 120 ரன்கள் அடித்ததும், ‘என்னிடம் எனர்ஜியே இல்லை. களத்தில் நிற்கக்கூட முடியவில்லை. அப்படியே படுத்து விடலாம் என நினைத்தேன்’ எனச் சொன்ன ராகுல், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 150 ரன்கள் விளாசிய பிறகும் அசராமல் இருந்தார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் ஜிம்பாப் வேக்கு எதிராக அறிமுகமான முதல் போட்டியிலேயே சதம் அடித்து சாதித் தார் ராகுல். டெஸ்ட், ஒருநாள் மட்டும் அல்ல; 20/20 கிரிக்கெட்டிலும் ராகுல் கில்லி.
 நிலைத்து நின்று ஆடுவதிலும், அடித்து ஆடி நொறுக்குவதிலும் இருமுகம் காட்டுகிறார் இந்த இளைஞர். கோஹ்லிக்குப் பக்கபலமாக நின்று சதங்கள் விளாசும் ராகுல், இந்திய கிரிக்கெட்டுக்குக் கிடைத்திருக்கும் இன்னொரு சுவர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism