Published:Updated:

காவிரி என்பது கண்ணீர் நதி அல்ல!

காவிரி என்பது கண்ணீர் நதி அல்ல!
பிரீமியம் ஸ்டோரி
காவிரி என்பது கண்ணீர் நதி அல்ல!

காவிரி என்பது கண்ணீர் நதி அல்ல!

காவிரி என்பது கண்ணீர் நதி அல்ல!

காவிரி என்பது கண்ணீர் நதி அல்ல!

Published:Updated:
காவிரி என்பது கண்ணீர் நதி அல்ல!
பிரீமியம் ஸ்டோரி
காவிரி என்பது கண்ணீர் நதி அல்ல!
காவிரி என்பது கண்ணீர் நதி அல்ல!

நாம் சோற்றில் கை வைக்க... சேற்றில் கால் வைத்தவர்கள் துயர ஆற்றில் தத்தளிப்பது தொடர்கதையாகவே இருக்கிறது. இன்னும் தீர்க்கப்படாத பிரச்னையாகவே நீள்கிறது காவிரிப் பிரச்னை.

‘விவசாயிகள்தான் இந்தியாவின் முதுகெலும்பு!’ என்று பாடப் புத்தகங்களில் மட்டும் எழுதிவைத்துவிட்டு, முறிந்துபோன முதுகெலும்பைப் பற்றிய உறுத்தலே இல்லாமல் வாழ்கிறோமா நாம்?

காவிரி டெல்டா மாவட்டங்களில், இந்த ஆண்டும் குறுவைச் சாகுபடி செய்யமுடியவில்லை. இது தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்னை மட்டும் அல்ல; கோடிக்கணக்கான மக்களின் உணவுப் பிரச்னையும்கூட. விவசாயிகளின் அபயக்குரல், ஆட்சி அதிகாரங்களில் இருப்பவர் எவரையும் எட்டவில்லை என்பது ஆற்றமுடியாத அவலம்.

காவிரி நீரைக்கொண்டு காலங்காலமாக விவசாயம் செய்துவரும் டெல்டா விவசாயிகளின் போராட்டம், அரை நூற்றாண்டு தாண்டியும் நீடிக்கும் வலி மிகுந்த போராட்டம். இயற்கையின் கொடையாக தமிழ்நாட்டுக்கு தானாகவே வந்துகொண்டிருந்த காவிரி நீரை, கர்நாடக அரசு அணைகள் கட்டித் தடுக்க ஆரம்பித்தபோதே, நம் மாநிலத்தில் விவசாயம் பாதிக்கப்பட்டது. அதனால் தங்களுக்குக் கிடைக்கவேண்டிய காவிரி நீரைப் பெற்றுத்தர விவசாயிகள் அதிகாரவர்க்கத்தின் அத்தனை கதவுகளையும் தொடர்ச்சியாக பல ஆண்டுகள் தட்டியும் நியாயம் கிடைக்காததால், கடைசியாக நீதிமன்றத்தை நாடினார்கள்.

காங்கிரஸ், பா.ஜ.க என மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும், கர்நாடகாவில் அவர்களுக்கு என ஓட்டு வங்கி இருப்பதால், தமிழ்நாடு விவசாயிகளின் இந்த நீதிப் போராட்டத்துக்கு அவர்கள் எப்போதுமே அனுசரனையாக இருந்தது இல்லை. அதை மீறி விவசாயிகளின் நீண்டகாலப் போராட்டங்களின் காரணமாக காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு, முதலில் இடைக்காலத் தீர்ப்பும், அதன் பிறகு பல ஆண்டுகள் கழித்து இறுதித் தீர்ப்பும் வெளியானது.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வந்து ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும், உரிய காலத்தில் தமிழ்நாட்டுக்குக் கிடைக்கவேண்டிய நியாயமான தண்ணீர் கிடைப்பது இல்லை. இந்தத் தீர்ப்பை முறையாக அமல்படுத்தவேண்டிய காவிரி மேலாண்மை வாரியமும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவும் அமைந்துவிடக் கூடாது என்பதில் கர்நாடகாவைச் சேர்ந்த சுயநல அரசியல் சக்திகள் இன்று வரை வெற்றிபெற்று வருகிறார்கள். 

விவசாயிகளின் துயர் துடைக்கப்படவேண்டுமானால், நடுவர்மன்றத் தீர்ப்பின்படி  தமிழ்நாட்டுக்குக் காவிரி நீர் கிடைக்க வேண்டும் என்றால், காவிரி மேலாண்மை வாரியமும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவும் அமைக்கப்பட வேண்டும் என்றால், கர்நாடாகாவின் மீது ஓட்டுப் பாசம் வைத்திருக்கும் அரசியல்வாதிகளையும் மீறி தமிழ்நாட்டுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றால், அரசியல் வேறுபாடுகளை மறந்து தமிழக அரசியல் கட்சிகளின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும். அது மூடப்பட்டுக்கிடக்கும் டெல்லியின் காதுகளைத் திறக்க வேண்டும்.

காவிரிப் பிரச்னைக்குத் தீர்வு கண்டு... விவசாயிகளின் துயர் துடைப்பது, வெறுமனே உழவோடும் உணவோடும் சம்பந்தப்பட்டது மட்டும் அல்ல; நம் உணர்வோடும் சம்பந்தப்பட்டது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism