Published:Updated:

உணவு நல்லது வேண்டும்!

உணவு நல்லது வேண்டும்!
பிரீமியம் ஸ்டோரி
உணவு நல்லது வேண்டும்!

உணவு நல்லது வேண்டும்!

உணவு நல்லது வேண்டும்!

உணவு நல்லது வேண்டும்!

Published:Updated:
உணவு நல்லது வேண்டும்!
பிரீமியம் ஸ்டோரி
உணவு நல்லது வேண்டும்!
உணவு நல்லது வேண்டும்!

அன்னாசி - வாழை ஜூஸ்

தேவையானவை: அன்னாசிப்பழம் - 3 துண்டுகள், வாழைப்பழம் 1, ஐஸ்கட்டிகள் - 3.

செய்முறை: வாழை மற்றும் அன்னாசிப் பழங்களைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, ஐஸ்கட்டிகளைச் சேர்த்து, மிக்ஸியில் அரைத்தால் ஜூஸ் ரெடி.

பலன்கள்: வைட்டமின் பி மற்றும் சி, பொட்டாசியம், மக்னீசியம், சோடியம் உள்ளிட்ட தாதுஉப்புக்கள் நிறைவாக உள்ளன. கார்போஹைட்ரேட் இருப்பதால், உடனடி எனர்ஜி கிடைக்கும். வளரும் குழந்தைகள், விளையாட்டு வீரர்கள், கருவுற்ற பெண்கள், எடை குறைவாக இருப்பவர்கள், மஞ்சள்காமாலை உள்ளவர்களுக்கு ஏற்ற ஜூஸ். சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்களும் சர்க்கரை நோயாளிகளும் இந்த ஜூஸை அருந்தக் கூடாது.

உணவு நல்லது வேண்டும்!

பீட்ரூட் - பனீர் சாலட்

தேவையானவை: பீட்ரூட் - 200 கிராம், பனீர் - 100 கிராம், முட்டைக்கோஸ், கேரட் - தலா 50 கிராம், கெட்டித் தயிர், தேன் - சிறிதளவு, உப்பு -  தேவையான அளவு.

செய்முறை: பீட்ரூட்டை வட்டமாக வெட்டி, நீராவியில் ஒருசில நிமிடங்கள் வேகவிட வேண்டும். பனீரையும் அதே வடிவில் மெலிதாக வெட்டி, இரண்டையும் தலா ஒவ்வொன்று என ஒன்றன் மீது ஒன்றாக அடுக்க வேண்டும். கேரட், முட்டைக்கோஸை சீவி, கெட்டித் தயிர், உப்பு, தேன் சேர்த்துக் கலக்கி, சாலட் மீது வைத்து சாப்பிடலாம்.

பலன்கள்: பீட்ரூட்டில் வைட்டமின் சி, இரும்புச்சத்து, கால்சியம், மாங்கனீஸ், பொட்டாசியம் நிறைவாக உள்ளன. இரும்புச்சத்தைக் கிரகிக்க, வைட்டமின் சி அவசியம். இந்த சாலட்டில் இவை இரண்டும் நிறைவாக உள்ளன. வைட்டமின் சி நீரில் கரையும் வைட்டமின் என்பதால், இயன்றவரை சமைக்காமல் எடுத்துக்கொள்வது நல்லது.

உணவு நல்லது வேண்டும்!

சிறுகுடல் மற்றும் பெருங்குடல்: நாம் உண்ட உணவை செரிமானம் செய்து, அதில் உள்ள ஊட்டச்சத்துக் களை கிரகிக்கும் பணியை சிறுகுடல் மற்றும் பெருங்குடல் செய்கின்றன.

உணவு நல்லது வேண்டும்!

பலப்படுத்தும் உணவுகள்: மீன், கீரைகள், அவரைக்காய், பீன்ஸ், வாழைத்தண்டு இவற்றோடு புரோபயாட்டிக் உணவுகளான தயிர், மோர், யோகர்ட், இட்லி ஆகியவற்றைச் சாப்பிடலாம்.