Published:Updated:

"குஷ்புவுக்குதான் ஓட்டு போடுவேன்!”

"குஷ்புவுக்குதான் ஓட்டு போடுவேன்!”
பிரீமியம் ஸ்டோரி
"குஷ்புவுக்குதான் ஓட்டு போடுவேன்!”

நா.சிபிச்சக்கரவர்த்தி

"குஷ்புவுக்குதான் ஓட்டு போடுவேன்!”

நா.சிபிச்சக்கரவர்த்தி

Published:Updated:
"குஷ்புவுக்குதான் ஓட்டு போடுவேன்!”
பிரீமியம் ஸ்டோரி
"குஷ்புவுக்குதான் ஓட்டு போடுவேன்!”
"குஷ்புவுக்குதான் ஓட்டு போடுவேன்!”

“ஜாலி கேள்விகள்தானே... ஐ யம் ரெடி” என எனர்ஜியாகப் பேசுகிறார் இயக்குநர் இராதாகிருஷ்ணன் பார்த்திபன்.

“ஆஹா... இந்த வாரம் நான் மாட்டிக்கிட்டேனா?” - மகிழ்ச்சி ஸ்மைலியோடு தயாராகிறார் கவிஞர் லீனா மணிமேகலை.

“நான் இந்த கேள்வி பதில் பகுதியை விகடன்ல விரும்பிப் படிப்பேன். கொஞ்சம் ஈஸியா கேளுங்க. ஸ்மார்ட்டா பதில் சொல்றேன்” - வெள்ளந்தியாகச் சிரிக்கிறார் இயக்குநர் ஜெர்ரி.

“தல... லைன்லயே இருங்க, கூகுள் ஆண்டவரை ஓப்பன் பண்ணிவெச்சுக்கிறேன். என்னது... பிட் அடிக்கக் கூடாதா!” - யோசனையோடு ஓ.கே சொல்கிறார் நடிகர் கலையரசன்.

``தமிழ்நாடு அரசின் மொத்தக் கடன் எவ்வளவு?''

விடை: ரூ.2,41,031 கோடி

இராதாகிருஷ்ணன் பார்த்திபன்: “மொத்தக் கடனா? (யோசிக்கிறார்) 10 கோடியில் ஒரு பங்கு என் தலை மேல இருக்குங்கிற வருத்தம்தான் எனக்கு இருக்கு. மத்தபடி எனக்கு எந்தக் கடனும் கிடையாது.”

லீனா மணிமேகலை: “ஏதோ ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்னு படிச்சதா ஞாபகம். ‘இந்த அம்மா ஆட்சியில் இலவசங்களைக் கொடுத்துக் கொடுத்து, கடனை மட்டும்தான் ஏத்திவெச்சிருக்காங்க’னு விவாதங்கள் எல்லாம் போயிட்டிருந்தது. இத்தனை நம்பருக்கு எத்தனை ஜீரோ வரும்னு மனசுல யோசிச்சப்பவே கடன் எவ்வளவுனு மறந்துட்டேனே.”

ஜெர்ரி: “ரெண்டு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகம்னு நினைக்கிறேன். ஆனா, இந்தக் கடனை அடைக்க என்ன திட்டம் வெச்சிருக்காங்கனுதான் தெரியலை.”

கலையரசன்: ஷாக் ஆனவர், “தல... இந்தக் கேள்வியில இருந்து நான் எஸ் ஆகிடவா? உங்க கேள்விகள்ல சிக்கிச் சிதைஞ்சுடுவேன்போல. ஏதோ ஒன்றரை லட்சமோ ரெண்டரை லட்சம் கோடி ரூபாயோ சொன்னாங்க. உத்தேசமாப் போட்டுக்கங்க.”

"குஷ்புவுக்குதான் ஓட்டு போடுவேன்!”

“தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் யார்?”

விடை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இதுவரை யாரையும் நியமிக்கவில்லை.

இராதாகிருஷ்ணன் பார்த்திபன்
: “அது ராகுல் காந்திக்குத்தான் தெரியும். என்னை ஓட்டு போடச் சொன்னா, என் ஃப்ரெண்ட் குஷ்புவுக்குத்தான் ஓட்டு போடுவேன்.”

லீனா மணிமேகலை:
விடாமல் சிரிக்கிறார் “ஏங்க... காங்கிரஸ் கட்சியில இருந்து பிரிஞ்சு பல கட்சிகள் இங்கே தினமும் உருவாகிட்டு இருக்கு. இதுல எந்த காங்கிரஸ் கட்சித் தலைவர் பேரைக் கேட்கிறீங்க? தமிழ் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். மெயின் காங்கிரஸ்ல குஷ்பு மீடியா ஸ்போக்ஸ் பெர்சன்... (சந்தேகமாக) மெயின் காங்கிரஸ் கட்சித் தலைவர் மூப்பனார் பையன் வாசன்தானே... சரியா?’’

 ஜெர்ரி
: “ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை சமீபத்தில் தலைவர் பொறுப்புல இருந்து நீக்கினாங்க. அடுத்த தலைவரை நியமிக்கிறதுக்குள்ள ராகுலுக்கு ஒருவர் மாத்தி ஒருவர் புகார் அனுப்பிட்டே இருந்தாங்கனு படிச்சேன். ஆனா, யாரை நியமிச்சாங்கனு படிக்கலையே! குஷ்புவைக்கூட நியமிக்கலாம்னு சொன்னாங்க. குஷ்புவா?” - டவுட்டாகக் கேட்கிறார்.

கலையரசன்
: “ஆங்... எனக்குப் பதில் தெரியும் தல... இருங்க சொல்லிடுறேன். நியூஸ்லகூட அவர் பேரை அடிக்கடி கேட்டிருக்கேன். ரொம்ப நல்ல பேருங்க... ரெண்டோ, மூணோ இனிஷியல். சரியா? இப்படி எல்லாம் பதில் சொன்னா மார்க் தர மாட்டீங்களா? அவர் பேர் மனசுக்குள்ள இருக்கு. டக்குனு வர மாட்டேங்குது. ஆங்... ஞாபகம் வந்துடுச்சு தல. ஜி.கே.வாசன்.”

“ `மோடி என்னைக் கொலை செய்யலாம்' எனச் சொன்ன அரசியல் கட்சித் தலைவர் யார்?”

விடை : அரவிந்த் கெஜ்ரிவால்

இராதாகிருஷ்ணன் பார்த்திபன் : அதிர்ச்சியானவர், “சத்தியமா நான் இல்லைனு எழுதிடுங்க. இங்கே சொல்ற பதில் புத்திசாலித்தனமா இருக்கணும். அதுதான் முக்கியம்.”

லீனா மணிமேகலை: “ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்”.

ஜெர்ரி: “இப்படி அடிக்கடி சர்ச்சையில் சிக்குபவர்னா டெஃபனெட்டா டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்தான்.”

"குஷ்புவுக்குதான் ஓட்டு போடுவேன்!”

கலையரசன்: “அய்யோ... தல நேத்துதான் இதைப் பற்றி ரஞ்சித் சார் ஆபீஸ்ல பேசிட்டிருந்தோம். அவர்கூட கவர்மென்ட் ஆபீஸரா இருந்து சி.எம் ஆனவர். அடக்கடவுளே... என்னய்யா இது சத்திய
சோதனை! எல்லா நியூஸையும் படிக்கிறேன் தல. ஆனா, பேர்கள்தான் மனசுல நிற்க மாட்டேங்குது. கெ... கெ... கெஜ்ரிவால்... அரவிந்த் கெஜ்ரிவால். எப்படியோ ஒரு கொஸ்டீனுக்குப் பதில் சொல்லி, மானத்தைக் காப்பாத்தியாச்சு.”

“நடிகர் தனுஷின் வயது என்ன?”

விடை: 33

இராதாகிருஷ்ணன் பார்த்திபன்: “சமீபத்தில் தனுஷ் தன் 14-வது பிறந்தநாளைக் கொண்டினார். எப்படிச் சொல்றேன்னா... 2002-லதான் ‘துள்ளுவதோ இளமை’ படம் வந்தது. அப்படிப் பார்த்தால் அவருக்கு 14 வயசுதானே?”

லீனா மணிமேகலை: “எனக்கு நடிகர்கள் பிறந்தநாள் கொண்டாடுறது, ஹனிமூன் கொண்டாடுறது எல்லாம் தெரியாதுங்களே. தனுஷைப் பார்த்தால் 35 ப்ளஸ் இருப்பார்னு நினைக்கிறேன்” - சிரிக்கிறார்.

ஜெர்ரி: “தனுஷ் ‘துள்ளுவதோ இளமை’ படம் முடித்திருந்த சமயம். ‘விசில்’ படத்தின் ப்ரீவியூ ஷோ பார்ப்பதற்காக தனுஷ், ஜெயம் ரவினு நிறையப் பேர் வந்திருந்தாங்க. அப்ப இருந்து கணக்கு
வைத்தால் இப்ப தனுஷுக்கு 34 வயசு இருக்கலாம். சரியா?” - பதிலைச் சொன்னதும்... “அடடா... ஒரு வயசு மிஸ் பண்ணிட்டனே!” என்றார்.

கலையரசன்: “சூப்பர் தல. தனுஷ் சமீபத்தில் 33-வது பர்த் டேவை செலிபரேட் பண்ணினார். சினிமாவுல ஏ டு இஸட்னு எது கேட்டாலும் சொல்லிடுவேன்.” - காலரைத் தூக்கிவிடுகிறார்.

"குஷ்புவுக்குதான் ஓட்டு போடுவேன்!”

“பிரபல தொழில் அதிபர் ஒருவருக்கு இப்போது இஸட் ப்ளஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவர் யார்?”

விடை: அனில் அம்பானி.

இராதாகிருஷ்ணன் பார்த்திபன்: “பதில் கொஞ்சம் ஓவரா இருக்கும், பரவாயில்லையா? நம்ம நாட்டுல, விஜய் மல்லையாவுக்கு இஸட் ப்ளஸ் பாதுகாப்பு கொடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.”

லீனா மணிமேகலை:
“மல்லையா வெளிநாட்டுல இருக்காரே. அங்கே இருந்துட்டுத்தான் `இஸட் ப்ளஸ் பிரிவு பாதுகாப்பு வேணும்'னு கேட்கிறாரோ என்னவோ?”

ஜெர்ரி: “இந்தக் கேள்விக்கு மல்லையாதான் உடனே ஞாபகம் வர்றார். அவர்கிட்ட பணத்தை வசூல் செஞ்சாலே இந்தியக் கடன்ல கொஞ்சம் அடைச்சுடலாம். இப்ப யாருக்கு இஸட் ப்ளஸ் கொடுத்திருக்காங்கனு தெரியலையே பிரதர்!”

கலையரசன்: “நான் போன் எ ஃப்ரெண்ட் ஆப்ஷனாக என் மனைவிகிட்ட ஆன்சர் கேட்கிறேன்” - அருகில் இருந்த அவர் மனைவியிடம் கேட்டவர், “அவங்க விஜய் மல்லையானு சொல்றாங்க. இந்த ஆன்சரையே லாக் பண்ணிக்கோங்க தல. நிச்சயமா இது தப்பான ஆன்சராகத்தான் இருக்கும்” - சிரிக்கிறார் கலை.