Published:Updated:

ஜென் Z - “நானும் சமையக்காரன்தான்டா!”

ஜென் Z - “நானும் சமையக்காரன்தான்டா!”
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - “நானும் சமையக்காரன்தான்டா!”

கருப்பு, ஓவியம்: அனில் கே.எஸ்.

ஜென் Z - “நானும் சமையக்காரன்தான்டா!”

கருப்பு, ஓவியம்: அனில் கே.எஸ்.

Published:Updated:
ஜென் Z - “நானும் சமையக்காரன்தான்டா!”
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - “நானும் சமையக்காரன்தான்டா!”
ஜென் Z - “நானும் சமையக்காரன்தான்டா!”

5 விதிமுறைகளைப் பின்பற்றினா, கிட்னாப்பிங் மட்டும் இல்லை ப்ரோ... குக்கிங்கூட செம மேட்டர்தான். அஞ்சுக்குப் பதிலா எட்டுங்கிறதை மட்டும் கவனிச்சுக்கோங்க.

ரூல் 1:  செல்ஃப் கான்ஃபிடன்ஸ்

ஜென் Z - “நானும் சமையக்காரன்தான்டா!”

`சமைக்கிறது கஷ்டம் இல்லை'னு நாம முதல்ல நம்பணும். ரெண்டு வாரம் ஒரு பொண்ணு பின்னாடியே ஸ்கெட்ச் போட்டுத் திரிஞ்சு, திட்டுறதுக்காவது அந்தப் பொண்ணைத் திரும்பிப் பார்க்க வைக்கிற நம்மால்... உப்பு, புளி போட்டு சமைக்க முடியாதா?’னு கண்ணாடி பார்த்து நம்மை நாமே தயார்படுத்திக்கணும். (கண்ணாடி பார்க்கும்போது நீங்க கண்ணாடி போட்டுக்கக் கூடாது.)

ரூல் 2: நோ கஷ்டமான குக்கிங்!

நூடுல்ஸ், ரசம் மாதிரியான ஈஸியான அயிட்டங்களைச் சமைக்கப் பழகுறதுதான் நல்லது. பக்கத்து வீட்டில் சிக்கன் வாசனை வருதேங்கிறதுக்காக உணர்ச்சிவசப்பட்டு, நாமளும் ஒரு கிலோ சிக்கனை வாங்கி சின்னாப்பின்னமாக்க நினைக்கக் கூடாது. முதல் தடவை நூடுல்ஸ் பண்றப்போதான் அதுக்கு உப்பு போடலாமா வேண்டாமாங்கிற சந்தேகம் வரும். அப்புறம் ஈஸி ஆகிடும். `2 மினிட்ஸ் நூடுல்ஸ்'னா, அது சமைக்க ஆகும் நேரம் இல்லை. சாப்பிட ஆகும் நேரம்கிற உண்மை, நம்ப முகத்துல பொக்குனு குத்தும். அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க!

ரூல் 3: ஸ்வச் கிச்சன்

எந்தச் சமையல் செய்முறையை எடுத்தாலும், முதல்ல `சுத்தமான பாத்திரம் ஒன்றை எடுத்துக்கொள்ளவும்'னுதான் தொடங்குவாங்க. சமைக்கும் முடிவில் இருந்து ஆண்கள் பின்வாங்க மிக முக்கியமான காரணம் இதுதான். இந்தச் சிக்கலில் இருந்து இளைய சமுதாயத்தை மீட்க ஓர் எளிய வழி இருக்கிறது. எந்தப் பாத்திரம் சுத்தமாக வேண்டும் என நினைக்கிறீர்களோ, அதில் சமையல் செய்யத் தேவையான புளியை ஊறவைத்தால் வேலை சிம்பிள். புளியைக் கரைத்து இடம் மாற்றினால் பாத்திரம் பளிச்சென மாறிவிடும்.

ரூல் 4: நோ கவுன்ட்டிங்

அடுத்த சிக்கல்.... உப்பு, மிளகாய்த்தூள், எண்ணெய் இப்படி எதை எடுத்துக் கொண்டாலும் `தேவையான அளவு பயன்படுத்தவும்'னு இருக்கும். இந்தத் `தேவையான அளவுனா என்ன?’ங்கிறதை அடிச்சுக் கேட்டாலும் யாரும் சொல்ல மாட்டாங்க. அதனால கடவுள் மேல பாரத்தைப் போட்டுட்டு, கண்ணை மூடிக்கிட்டு கரண்டியில் அள்ளிப்போட்டுடணும். `பின்'விளைவுகளை மறுநாள் பார்த்துக்கலாம்!

ரூல் 5: ப்ரேவ் ஹார்ட்

நீங்க எக்ஸ்பெர்ட் ஆக, செய்யவேண்டிய இன்னொரு மிக முக்கியமான டாஸ்க்... பயப்படாம கடுகு தாளிப்பதற்கு, பயபக்தியா சீக்கிரம் பயிற்சி எடுத்துக்கணும். நாலு அடி தள்ளி நின்னு கடுகைத் தூக்கிப்போடுறது, கடுகைக் கருகவிடுறது மாதிரியான அட்ராசிட்டி எல்லாம் அறவே செய்யக் கூடாது. பார்டர்ல நிற்கிற ராணுவத்தை மனசுல நினைச்சுக்கிட்டு, கிட்ட நின்னே கடுகு தாளிக்கணும். வீ கேன் ப்ரோ!

ரூல் 6: பீ ஹம்பிள்

`இன்னைக்கு என்ன வைக்கலாம்?'னு ரூம்மேட் கேட்டா, `முதல்ல ஏதவாது வை. அப்புறமா அதுக்குப் பேரு வைக்கலாம்'னு புத்திசாலித்தனமா பேசக் கத்துக்கோங்க. சமைக்கிறதுக்கு முன்னாடியே குழம்புக்குப் பேர் வைக்கிறது, கொதிக்கிற எண்ணெய்க்குப் பக்கத்துல கரண்டியோடு செல்ஃபி எடுத்துக்கிறது மாதிரி ஓவர் கான்ஃபிடன்ஸ் வேலைகள் பண்ணக் கூடாது.

ரூல் 7: ஸ்டாக் முக்கியம்

மிக முக்கியமான விதி... சொதப் பிட்டா நேர்மையா ஒப்புக்கணும். சாம்பார் முயற்சி பண்ணி ரசத்தைவிட மோசமான ஒண்ணு வந்தா, ரிஸ்க் எடுக்காம, பைக்கை எடுத்துட்டுப் போய் பார்சல் வாங்கிட்டு வந்துடணும். சமையல் பரிசோதனை முயற்சிகள் முடியும் வரை, ரெடிமேட் சாப்பாடு அயிட்டங்களை எப்பவும் ஸ்டாக் வெச்சுக்கிறது ஆபத்துக் காலங்களில் உதவும்.

ரூல் 8 :ஒன் சாங்... ஓகோ குக்கிங்!

விக்ரமன் படங்கள்ல ஒரே பாட்டுல ஹீரோ முன்னுக்கு வர்ற மாதிரி, நாம சமைச்சு முடிக்க எளிய வழி ஒண்ணு இருக்கு. மனசுக்குப் பிடிச்ச அந்தப் பாடலை மொபைலில் ரிப்பீட் மோட்ல போட்டுவிட்டா, ஒரு பாட்டு முடியுறதுக்குள்ள சமைச்சு முடிச்சு, பாத்திரத்தையே கழுவிடலாம்னா பார்த்துக்கோங்களேன்!

இவை எல்லாம் டிப்ஸ்னு நம்பி, நிஜமாவே சமைக்க ஆரம்பிச்சு, கழுவிக் கழுவி ஊத்தாம, பாத்திரத்தைக் கழுவி வெச்சுட்டு உட்காருங்க பாஸ்!