Published:Updated:

ஜென் Z - வீடியோ சாட்... விசிட்டிங் கார்ட்!

ஜென் Z - வீடியோ சாட்... விசிட்டிங் கார்ட்!
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - வீடியோ சாட்... விசிட்டிங் கார்ட்!

ஞா.சுதாகர்

ஜென் Z - வீடியோ சாட்... விசிட்டிங் கார்ட்!

ஞா.சுதாகர்

Published:Updated:
ஜென் Z - வீடியோ சாட்... விசிட்டிங் கார்ட்!
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - வீடியோ சாட்... விசிட்டிங் கார்ட்!
ஜென் Z - வீடியோ சாட்... விசிட்டிங் கார்ட்!

ப்பிளின் ஃபேஸ்டைமையும் ஸ்கைப்பையும் பார்த்து `Hey oldies... Plz move' என்கிறது கூகுளின் டியோ (Duo). எளிமையான, அதே சமயம் எக்கச்சக்க எக்ஸைட்மென்ட்களோடு வந்திருக்கிறது இந்தப் புதிய வீடியோ காலிங் ஆப்!

ஏற்கெனவே ட்ரெண்டில் இருக்கும் ஆப்பிளின் ஃபேஸ்டைம் (Facetime) மற்றும் ஸ்கைப்பை (Skype) ஓரங்கட்டுவதுதான் டியோவுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் அசைன்மென்ட். அதைப் பக்காவாகச் செய்துவருகிறது டியோ. ஃபேஸ்டைம், ஐபோனில் கிங்தான். ஆனால், ஆண்ட்ராய்டு பக்கம் ஆப்சென்ட். ஸ்கைப், மெசெஞ்சர், ஏன்... கூகுளின் ஹேங்-அவுட்கூட, நம் 2G வேகத்துக்கு `நீ அதுக்கு சரிப்பட்டு வர மாட்ட' என நாம் ஒதுக்கியவைதான்! இதை மனதில் வைத்தே டியோவைச் செதுக்கியுள்ளது கூகுள்!

வாட்ஸ்அப் போலவே எண்ட் டு எண்ட் என்கிரிப்ட் செய்யப்பட்டது என்பதால், பாதுகாப்பும் கியாரன்ட்டி. 2G, 3G மற்றும் வைஃபை என எந்த கிரவுண்டிலும் ஸ்கோர்செய்வது டியோவின் மற்றொரு பலம். கூடுதலாக டியோவின் சிக்னேச்சர் ஷாட்டாக வந்திருப்பது knock-to-Knock. ஒருவர் நமக்கு கால் செய்யும்போது, அவரின் முகம் நாம் கால்-ஐ அட்டெண்ட் செய்வதற்கு முன்னரே டிஸ்ப்ளேவில் தெரியும். இந்த knock-to-Knock-ஐ பெருமையாகவே சொல்லிக்கொள்கிறது கூகுள். இதை டிஸ்ஸேபிள் செய்யவும் முடியும்.

ஜென் Z - வீடியோ சாட்... விசிட்டிங் கார்ட்!

அநியாயத்துக்கு எளிமையாக இருக்கிறது டியோ. இன்ஸ்டால் செய்துவிட்டு, உங்கள் போன் நம்பரை மட்டும் கொடுத்தால் போதும். ஒன் டைம் பாஸ்வேர்டையும்கூட அதுவே சிங்க் செய்துகொள்ளும். நூடுல்ஸைப்போல 2 மினிட்ஸில் ரெடி! மெயில் ஐ.டி கொடுப்பது, கன்ஃபர்மேஷன் மெயிலை க்ளிக்செய்வது என எந்தவித சமாசாரமும் இல்லை.

 ஆனால் பில்டர்ஸ், குரூப் சாட் போன்ற வசதிகள் இல்லை. ஒரே அப்டேட்டில் இதை கூகுள் சரிசெய்துவிட முடியும் என்பதால், டியோஅ பாய்ஸ் வெயிட்டிங்!

இன்னும் டெக்ஸ்ட் சாட்டிங்கிலேயே இருக்கும் நம் ஆண்ட்ராய்டுவாசிகளுக்கு, வீடியோ சாட்டிங்குக்கான சிம்பிள் விசிட்டிங் கார்டுதான் டியோ. ஐ.ஓ.எஸ் மற்றும் ஆண்ட்ராய்டு இரண்டிலும் இருப்பதால், எளிதில் யூஸர்களைச் சம்பாதித்துவிடலாம். ஆனால், 2G நெட்வொர்க்கிலும் சிறப்பாகக் கம்பு சுற்றுவதில்தான் இருக்கிறது டியோவின் வெற்றி!