Published:Updated:

ஜென் Z - ‘செல்லக்குட்டி... வெல்லக்கட்டி... ஜாங்கிரி...’

ஜென் Z - ‘செல்லக்குட்டி... வெல்லக்கட்டி... ஜாங்கிரி...’
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - ‘செல்லக்குட்டி... வெல்லக்கட்டி... ஜாங்கிரி...’

வால்டர் ஒயிட்

ஜென் Z - ‘செல்லக்குட்டி... வெல்லக்கட்டி... ஜாங்கிரி...’

வால்டர் ஒயிட்

Published:Updated:
ஜென் Z - ‘செல்லக்குட்டி... வெல்லக்கட்டி... ஜாங்கிரி...’
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - ‘செல்லக்குட்டி... வெல்லக்கட்டி... ஜாங்கிரி...’
ஜென் Z - ‘செல்லக்குட்டி... வெல்லக்கட்டி... ஜாங்கிரி...’

ண்டிக்கு ஒண்டியாக சண்டைக்கு வந்தால் `ஜான் சீனா, செத் ராலின்ஸ், ரோமன் ரெயின்ஸை'கூட அடித்து வீழ்த்திவிடலாம். ஆனால், ஆங்கிரிபேர்ட் காதலிகளோடு சண்டைபோடுவது ரொம்பக் கஷ்டம். `ப்ளூ டிக் வந்துதே... ஏன் ரிப்ளை பண்ணல?', `முதல் ரிங்லயே கால் அட்டெண்ட் பண்ண முடியாதா?', `உன்கூட செல்ஃபி எடுத்து அவ ஏன் ஃபேஸ்புக்ல போட்டிருக்கா?', `செகண்ட் லைன்ல யாரு?',

`ஏன் இன்னும் தூங்கல?'... என்பது மாதிரி நம்மால் யூகிக்கவே முடியாத விஷயங்களில் இருந்து அணுகுண்டுகளை உருவி போடுகிற மதியூகிகள் நம் காதலிகள். இந்த க்யூட் க்யூபிட்ஸ்களை

ஜென் Z - ‘செல்லக்குட்டி... வெல்லக்கட்டி... ஜாங்கிரி...’

எப்படிச் சமாளிக்கலாம்?

தோற்கத் தயங்காதே

`எந்தச் சண்டையிலும் ஜெயிக்க வேண்டும், வின்னிங் இஸ் எவ்ரிதிங்’ என்றுதானே சொல்லிச் சொல்லி நம்மை வளர்த்திருக் கிறார்கள். ஆனால், காதலுக்கு அந்த விதி பொருந்தாது. இங்கே காதலன்களுக்கு இருப்பது ஒரே ஆப்ஷன்தான். எனவே சண்டை வந்துவிட்டால், இதில் எப்பாடுபட்டாவது ஜெயிக்கவேண்டும் என  வக்கீல்போல துடிக்கப்படாது. அது புதிய சண்டைகளை உருவாக்கி எதிரியை வலுவாக்கிவிடும். நாம் எவ்வளவு கோபப்படுகிறோமோ அந்த அளவுக்கு காதலிகளுக்கு பலம் கூடும்... `வாலி’ மாதிரி. எனவே, எப்படியும் நமக்குக் கிட்டப்போவது தோல்வியே என்பதை மனதில்கொண்டு அதை நோக்கியே நம் பயணம் அமைய வேண்டும்.

தயாராயிரு

ஜென் Z - ‘செல்லக்குட்டி... வெல்லக்கட்டி... ஜாங்கிரி...’

உங்கள் காதலி எந்த நொடியிலும் உங்களைச் சண்டைக்கு இழுக்கலாம் என்பதால்... நீங்கள் எவ்வளவு குஷியாக இருந்தாலும், எந்நேரமும் வரப்போகிற வம்புக்குத் தயாராயிருக்கணும். பாய்ஸிடம் இருக்கிற பிரச்னையே காதலிகளை எப்படி எல்லாம் மகிழ்விப்பது என்பதைவிட எப்படி எல்லாம் காண்டாக்குவது என்பதை நன்றாகத் தெரிந்துவைத்திருப்பதுதான். புதிதாக நகங்களில் பச்சை கலரில் நெயில்பாலிஷ் போட்டுவந்தால்... `சூப்பர்’ எனச் சொன்னால் என்ன குறைந்துவிடும்? ஆனால், அதைச் சொல்ல மாட்டோம். அது ஜீனிலேயே இருக்கிற தயாரிப்புக் குளறுபடி. அதனால், நாம்தான் எந்நேரமும் உஷாராக வேண்டும்!

டானாயிருந்தாலும் டோனைக் கவனி

நான் பெரிய பிஸ்தா... பாதாம்... முந்திரி என்ற டோனில் எப்போதும் சண்டைகளில் பேசக் கூடாது. நீங்கள் ரஷ்யாவுக்கு அதிபராக இருந்தாலும், உங்கள் காதலிக்கு டம்மி பீஸுதான் பாஸ். அதைப் புரிந்துகொண்டு சண்டைகளின்போது உங்கள் ஆளுமைத்திறன்களை வெளிப்படுத்தினால், அன்னாரின் ஆளுமைத்திறன்களும் இரண்டு மடங்கு வெளிப்பட்டு உங்களை பீஸுபீஸாக்கிவிடும். அவர் பேசுவது தப்பாகவே இருந்தாலும், `நீ சொல்றதுதான்மா கரெக்ட்... எனக்குத்தான் தெரியாமப்போச்சு' என்ற மாதிரி சொற்களைப் பயன்படுத்தினால் சேதாரத்தைத் தவிர்க்கலாம். எனவே, எப்போதுமே சண்டைகளின் போது `செல்லக்குட்டி... வெல்லக்கட்டி... ஜாங்கிரி...’ என கொஞ்சிக்கொண்டே பேசினால், அவர் உங்கள் மீது கருணைகாட்ட வாய்ப்பு இருக்கிறது. 

சிரிக்காதே

காதலி சண்டையிடும்போது சம்டைம்ஸ்... ரொம்ப ஃபன்னியாக, குழந்தைத்தனமாக இருக்கும்தான். ஆனால், அதற்காக உடனே சிரிப்பதோ, புன்னகைப்பதோ, சிரிக்கலாம் என நினைப்பதோ மிகவும் தவறானது. நீங்கள் அவருடைய ஈகோவின் மெல்லிய கண்ணாடி எல்லைகளை உடைக்கிறீர்கள், அந்தக் கண்ணாடித்துண்டுகள் உங்களைக் குத்திக் கிழித்துவிடும். `என்னைப் பார்த்தா கோமாளி மாதிரி இருக்கா?' என்று மட்டும் உங்கள் காதலி சொல்லிவிட்டால், அதற்குப் பிறகு அவரைச் சரிசெய்யவே முடியாது. சோ... நெவர்... எவர்... நகைப்பது தவறு.

ஜென் Z - ‘செல்லக்குட்டி... வெல்லக்கட்டி... ஜாங்கிரி...’

எதிரியின் மூட்

இதை நேரில் கண்டுபிடித்துவிடலாம். ஆனால், போனில், சாட்டிங்கில் கண்டுபிடிப்பது ரொம்பக் கஷ்டம். எனவே நம் எதிரி எந்த நேரத்தில், எப்படி எல்லாம் ரியாக்ட் பண்ணுகிறார் என்பதை எப்போதும் கூர்ந்து கவனிக்க வேண்டும். கோபமாக இருக்கும் போது காமெடி பண்ணுவது சிலருக்குப் பிடிக்காது. காமெடி பண்ணிக்கொண்டிருக்கும்போது நாம் சிரிக்காமல் இருப்பதும் பிடிக்காது. எனவே, எதிரியின் மூட் அறிந்து செயல்படுவது... சிரிப்பதா, அழுவதா, ரியாக்ட் பண்ணாமல் இருப்பதா என்பது முக்கியம்!

மான்கராத்தே

யெஸ்... இதுதான் உள்ளதிலேயே மிகச் சிறந்த மருந்து, பவர்ஃபுல் கருவி. சண்டை தொடங்குவதற்கான அறிகுறிகள் தெரிந்தாலே உடனடியாக எல்லைத்தாண்டி தெறித்து பாதுகாப்பான பதுங்குகுழிகளுக்குள் ஓடிவிடுவதே நல்ல காதலனின் ராஜதந்திரம். தோற்றுப்போய்விடுவோம் எனத் தெரிந்தும் ஏன் வீணாகச் சண்டைபோட்டு நேரத்தை வீணடிக்க வேண்டும்? உயிரைக் காப்பாற்றிக்கொள்ள தப்பி ஓடுவதாலோ அல்லது சாஷ்டாங்கமாக காலில் விழுந்து சரணடைந்துவிடுவதாலோ நமக்கு எந்த நஷ்டமும் கிடையாது. சண்டை போட முடியாமல் போவதால் காதலிகளுக்கே லாஸ். இதைப் புரிந்துகொள்ளும் காதல்கள்தான் மாஸ்!