Published:Updated:

விகடன் சாய்ஸ்

விகடன் சாய்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
விகடன் சாய்ஸ்

விகடன் சாய்ஸ்

விகடன் சாய்ஸ்

விகடன் சாய்ஸ்

Published:Updated:
விகடன் சாய்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
விகடன் சாய்ஸ்
விகடன் சாய்ஸ்

ம்முடைய சுற்றுச்சூழல், வெவ்வேறுவிதமான பாதிப்பைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. லாப நோக்கத்துக்காக நடத்தப்படும் இந்தச் சூறையாடல்களுக்கு எதிராக, உலகெங்கும் இருந்து வெவ்வேறு குரல்கள் தொடர்ந்து ஒலிக்கின்றன. சுற்றுச்சூழலைக் காக்கப் போராடும் இந்த மக்கள் மற்றும் போராட்டங்களைப் பற்றிய ஆவணப்படங்கள் இவை.

விகடன் சாய்ஸ்

மூன்று பேர் மூன்று போர்

`ஏ க்வொய்ட் ரெவல்யூஷன்', காடுகளை அழிக்கிறவர்களுக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடும் மூவரைப் பற்றிய ஆவணப்படம். இந்தியா, கென்யா, ஸ்லோவாக்கியா என உலகெங்கும் சுற்றுச்சூழலைக் காக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள மக்கள் குழுக்களைப் பற்றிய கதைகளைச் சொல்கிறது இந்தப் படம். மழைநீரைக் காக்கும் முயற்சிகளில் ஈடுபடும் ஓர் இந்தியக் கிராமம், வேதியியல் மாசுபாட்டுக்கு எதிராகப் போராடும் ஸ்லோவாக்கியாவின் மக்கள், கென்யாவின் கிரீன் பெல்ட் மூவ்மென்ட்டை முன்னெடுத்திருக்கும் வங்காரி மாத்தாய் என மூன்று வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு போராட்டங்களைப் பற்றி பேசுகிறது படம். ஆஸ்கர் விருது வென்ற மெரில் ஸ்ட்ரீப் குரலில் பதிவுசெய்யப்பட்ட இந்த ஆவணப்படம், பல விருதுகளை வென்றுள்ளது.
https://youtu.be/ytSHqNw7UM8

தனி ஒருத்தி

விகடன் சாய்ஸ்

ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா தீவு, மழைக்காடுகள் அடர்ந்த பகுதி. அங்கே மலேசிய நிறுவனம் ஒன்று, அரசு அனுமதியோடு மரங்களை வெட்ட அனுமதி பெற்றது. காக்கப்படவேண்டிய காடுகள், கண் முன்னே அழிக்கப்படுவதை பள்ளி ஆசிரியையான மிராண்டா ஜிப்சனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஒரு நல்ல நாளில் டாஸ்மானியா காட்டில் இருக்கும் ஒரு யூக்கலிப்டஸ் மரத்தில் ஏறி அங்கேயே அமர்ந்துவிட்டார். காடுகளை அழிப்பதை நிறுத்தும் வரை அதில் இருந்து இறங்கப்போவது இல்லை என உறுதியோடு தன் போராட்டத்தைத் தொடங்கினார். கிட்டத்தட்ட
15 மாதங்கள் நீண்டது போராட்டம். காட்டுத்தீ காரணமாகவே அவர் மரத்தில் இருந்து வலுக்கட்டாயமாக கீழே இறக்கப்பட்டார். அவருடைய போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு பெருகியது. மிராண்டா ஜிப்சனின் இந்தப் போராட்டத்தை விரிவாகப் பேசுகிறது `ஸ்டில் ஃபாலிங்' என்கிற இந்த 15 நிமிடக் குறும்படம்.  https://vimeo.com/93643929

கடைசி துளி

விகடன் சாய்ஸ்

உலகெங்கும் மிகக்குறைவான அளவில்தான் நல்ல நீர் நம்மிடம் எஞ்சியுள்ளது. உலகம் முழுக்க 100 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு, குடிப்பதற்கான சுத்தமான நீர் இன்று வரை கனவாகவே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் 3,900 குழந்தைகள், மோசமான நீரைப் பருகுவதால் இறந்துபோகின்றன. இன்று நல்ல நீரை அருந்த, விலை கொடுக்கவேண்டியிருக்கிறது. நம்முடைய ஆதாரத்தேவையை, அரசே விலை நிர்ணயித்து விற்பனைக்கு வைத்திருக்கிறது. பருவநிலை மாற்றத்தால் உலகின் ஒரு பகுதி நீரின்றி வறட்சியில் மூழ்க, இன்னொரு பக்கம் நீரால் சூழப்பட்டு மூழ்க, உலகமே நீரால் திண்டாட ஆரம்பித்துள்ளது. நீர்த்தேவை அதிகரித்துள்ள அளவுக்கு நீர் ஆதாரங்கள் உருவாக்கப்படவில்லை. ஆனால், இருக்கும் நீரை எல்லாம் தனியார் நிறுவனங்கள் உறிஞ்சி விற்கத் தொடங்கிவிட்டன. ஒரு துளி நீருக்காக உலகெங்கும் பல்வேறுவிதமான போராட்டங்கள் முன்னெடுக்கப் படுகின்றன. இந்தச் சூழலைப் பற்றியும் போராட்டங்கள் குறித்தும் சொல்கிறது `எ வேர்ல்டு வித்அவுட் வாட்டர்' என்கிற ஆவணப்படம். https://youtu.be/KBSI6Du2yhk

குப்பைத் தீவு

விகடன் சாய்ஸ்

உலகம் முழுக்க நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களில் வெறும் ஐந்து சதவிகிதம்தான் மறுசுழற்சிக்குச் செல்கிறது. மீதம் இருக்கும் குப்பைகள் என்ன ஆகின்றன? இந்தக் கேள்விதான் `தி கிரேட் பசிபிக் கார்பேஜ் பேட்ச்' ஆவணப்படத்தின் சாரம்சம். பசிபிக் பகுதியில், அமெரிக்காவின் டெக்சாஸ் மகாணத்தின் அளவில் ஒரு புதிய பெரிய குப்பைத்தீவு உருவாகியிருக்கிறது. அது முழுக்க முழுக்க நாம் தூக்கி எறிந்த பிளாஸ்டிக்கால் உருவானது என்று ஒரு தியரி உண்டு. ஆனால், யாருமே இந்தக் குப்பைத்தீவைக் கண்டது இல்லை. அதைத் தேடிப் பயணிக்கிறார் ஆஞ்சலா சுன் என்கிற ஆவணப்பட இயக்குநர். அவருடைய இந்தத் தேடலில், உலகெங்கும் நம்முடைய கடல் பகுதிகள் பிளாஸ்டிக்கால் என்ன மாதிரியான பாதிப்புகளைச் சந்தித்துள்ளது. மற்றும் அதன் பருவநிலையில், சுற்றுச்சூழலில் உருவான தாக்கங்கள் என்ன என்பதை அறிந்துகொள்கிறார். நாம் தூக்கி எறியும் ஒரு பிடி பிளாஸ்டிக், நம் சூழலை எப்படிப் புரட்டிப்போடுகிறது என்பதை அழுத்தமாகப் பதிவுசெய்கிறது படம். https://youtu.be/K7QXD3D75Yo