பிரீமியம் ஸ்டோரி

ரியோ ஒலிம்பிக்கை அழகாக்கிய சூப்பர் கேர்ள்ஸ் இவர்கள். ஒவ்வொருவரும் வெறும் அழகு கிளிகள் மட்டும் அல்ல, திறமையிலும் சூப்பர் கில்லீஸ். ரசிகர்களே... நோட் டவுண் ப்ளீஸ்!

க்யூட் கில்லீஸ்!

அலியா முஸ்தஃபீனா

ரஷ்யாவைச் சேர்ந்த அலியா, ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்கில் நம்பர் 1 வீராங்கனை. தன்னுடைய நளினமான ஜிம்னாஸ்டிக் நடனத்தால் அத்தனை பேரையும் சொக்கவைப்பவர். 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் அன்ஈவன் பார்ஸ் பிரிவில், தங்கம் உள்பட மொத்தமாக நான்கு பதக்கங்களை வென்ற சாம்பியன். இந்த முறையும் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மூன்று பதக்கங்கள் வென்றுள்ளார். அடுத்தடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற இரண்டாவது ஜிம்னாஸ்டிக் வீராங்கனை இவரே. ரியோ ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட சூப்பர் அழகி என்ற நம்பர் 1 இடமும் அலியா முஸ்தஃபீனாவுக்குத்தான்.

க்யூட் கில்லீஸ்!

எல்லன் ஹூக்

நெதர்லாந்து ஹாக்கி அணியின் சொத்து இவர். சீறிப்பாய்ந்து எதிர் அணியின் தடைகளை உடைத்து கோல் போடுவதில் கில்லாடி. 2008-ம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக்கிலும், 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கிலும் நெதர்லாந்து அணி தங்கம் வெல்ல காரணமாக இருந்தவர் இவரே! 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்திடம் எல்லனின் அணி மண்ணைக் கவ்வியதில் இப்போது ரொம்பவே அப்செட்!

க்யூட் கில்லீஸ்!

அலெக்ஸ் மோர்கன்

தலையில் எப்போதும் பேண்ட் அணிந்து ஆடும் அலெக்ஸ் மோர்கன், அமெரிக்கப் பெண்கள் கால்பந்தாட்ட அணியின் கோல் மெஷின். இதுவரை அமெரிக்காவுக்காக
116 போட்டிகளில் விளையாடி, 69 கோல்களைப் போட்டு, எதிர் அணிகளைச் சிதறடித்திருக்கிறார். அமெரிக்க அணியை, பெண்கள் உலகக்கோப்பை சாம்பியனாக ஆக்கியதிலும் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு. இந்த முறை ஒலிம்பிக்கில் அமெரிக்காவுக்குப் பதக்கம் பெற்றுத்தர முடியாமல்போனாலும், 2012-ம் ஆண்டில் சாம்பியனாக்கியது இவரே! ஒரே ஆண்டில்
20 கோல்கள் அடித்த இளம் வீராங்கனை என்கிற சாதனையும் இவர்வசம்தான்!

க்யூட் கில்லீஸ்!

ஆம்பர் ஹில்

வித்தியாசமான கண்கள், எப்போதும் புன்னகைக்கும் முகம் யாருக்குத்தான் பிடிக்காது. இங்கிலாந்தைச் சேர்ந்த ஆம்பர் ஹில்லின் அடையாளம் இவை. பார்க்க குருவிபோல இருந்தாலும், குறிவைத்துச் சுடும் கழுகு இவர். ஒலிம்பிக் போட்டியில் புகைப்படக் கலைஞர்கள் அத்தனை பேரும் சுற்றிச் சுற்றி இவரைப் படம் எடுத்திருக்கிறார்கள். ஸ்கீட் பிரிவில் விளையாடிய இவர் பெற்றது ஐந்தாம் இடம்தான் என்றாலும், உலகக்கோப்பைப் போட்டியில் கடந்து மூன்று ஆண்டுகளாக இவர்தான் சாம்பியன்.

க்யூட் கில்லீஸ்!

கோ லியூ யிங்

மலேசியாவின் சாய்னா நேவால் இவர். பேட்மின்டனின் கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் உலக அளவில் மூன்றாவது ரேங்கில் இருப்பவர். ஆசியா, காமன்வெல்த் போட்டிகளில் கலப்பு இரட்டையர் பிரிவில் தொடர்ந்து தங்கம் வென்றாலும் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிதான் வென்றுள்ளார், சீனமுகம் கொண்ட இந்தச் சின்னப் பெண்.

க்யூட் கில்லீஸ்!

ஜாக்குலின் கார்வலோ

பிரேசிலின் செல்லம் ஜாக்குலின். 2008-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் பிரேசில் மகளிர் வாலிபால் அணிக்கு தங்கம் பெற்றுத்தந்த சாம்பியன் இவர். சொந்த மண்ணில் ஒலிம்பிக் பதக்கம் வெல்ல முடியாமல்போனதில் ரொம்பவே சோகத்தில் இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான ஃபாலோயர்களைக் கொண்ட ஜாக்குலினின் பொழுதுபோக்கு, கிறங்கடிக்கும் படங்களை இறக்கிவிட்டு, ரசிகர்களை அலறவிடுவதுதான்!

க்யூட் கில்லீஸ்!

ஜேட் ஜோன்ஸ்

கால்களால் எகிறி அடிக்கும் டேக்வாண்டோ சாம்பியன் இந்த பிரிட்டன் கேர்ள். `ஹெட் ஹன்ட்டர்' என்பதுதான் இவருடைய செல்லப்பெயர். எதிராளியின் தலையைக் குறிவைத்துத் தாக்கி வீழ்த்துவது இவருடைய பாணி. ரியோ ஒலிம்பிக்கின் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் இவா கால்வோவைப் புரட்டி எடுத்தவிதம் பார்ப்பவரைப்  பதறவைக்கும். ஆனால், டேக்வாண்டோ யூனிஃபார்மைக் கழட்டிவிட்டால் யாருக்குமே காதலிக்கத் தோன்றும்! ரியோவில் மட்டும் அல்ல, 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கிலும் இவர்தான் 57 கிலோ பிரிவில் தங்கம் வென்றார்.

க்யூட் கில்லீஸ்!

ஸூசன்னா ஜோகபஸ்

செதுக்கிவைத்தது போன்ற செவ்வக முகம்கொண்டவர் ஸூசன்னா ஜோகபஸ், ஹங்கேரியின் நீச்சல் வீராங்கனை. தண்ணீரில் குதித்துவிட்டால், மீனாக மாறி, பாய்ச்சல் காட்டி, பதக்கம் வெல்லக்கூடிய பாயும் புலி எனச் சொல்லலாம். இதுவரை 2004, 2008, 2012, 2016 என நான்கு ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டு நீச்சல் அடித்தாலும் ஒரு பதக்கம்கூட வெல்ல முடியாமல் போய்விட்டது. ஆனால், வருடந்தோறும் எப்படியாவது தகுதிபெற்றுவிடுவார். பதக்கம் இல்லை என்றாலும் இவருக்கு ஃபேன்ஸ் மிக மிக அதிகம். ஹங்கேரியின் அழகுக்கலை விளம்பரங்களில் எல்லாம் இவருடைய முகம்தான் நிறைந்திருக்கும். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு