பிரீமியம் ஸ்டோரி
விகடன் சாய்ஸ்

வீட்டைச் சுத்தமாகவும் சிறப்பாகவும் வைத்துக் கொள்வது, அத்தனை எளிதான வேலை அல்ல. அதை சிம்பிள் அண்ட் சிறப்பாகச் செய்ய உதவுகின்றன இந்தச் செயலிகள்!

விகடன் சாய்ஸ்

பிரைட் நெஸ்ட்

Bright Nest – Home Tips & Ideas - வீட்டை கலர்ஃபுல்லாகவும் பிரைட்டாகவும் வைத்துக்கொள்ள நினைப்பவர்களுக்கு ஏற்ற ஆப் இது. இதில் பெட்ரூமை தூசிகள் இல்லாமல் எப்படிப் பாதுகாப்பது, மைக்ரோவேவ் அவனை எலுமிச்சம்பழம் கொண்டு சுத்தமாக்குவது எப்படி, பாத்ரூம்களைச் சுத்தம் செய்வதில் பின்பற்றவேண்டிய முக்கிய விஷயங்கள் எவை, வீட்டைப் பராமரிப்பதில் எப்படி எல்லாம் காசை மிச்சப்படுத்தலாம்... என, நூற்றுக் கணக்கிலான ஐடியாக்கள் கொட்டிக்கிடக்கின்றன. வீட்டின் எந்தெந்தப் பகுதிகளில் வெப்பம் அதிகமாகவும் குறைவாகவும் இருக்கவேண்டும், வீட்டின் அசுத்தம் நம் உடல்நலத்தை எப்படிப் பாதிக்கும் என்பது போன்ற  ஆரோக்கியத் தகவல்களும் ஏராளம் உண்டு. இதில் வீட்டைச் சுத்தமாக்குவதற்கான கால அட்டவணையையும் உருவாக்கிக்கொண்டு, அதற்கான ரிமைண்டர்களையும் செட் செய்துகொள்ள முடியும்.

விகடன் சாய்ஸ்

கூப்பிடு ஹெல்ப்பரை!

Helper - Home Service Experts - சென்னை, கோவை மாதிரி பெரிய நகரங்களில் ஒரு நல்ல எலெக்ட்ரீஷியனையோ, பிளம்பரையோ, கார்பென்ட்டரையோ கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபம் அல்ல. அதை எளிமையாக்குகிறது இந்தச் செயலி. இந்தியா முழுக்க 20 ஆயிரத்துக்கும் அதிகமான புரொஃபஷனல் வேலைக்காரர்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டுள்ளது இந்தச் செயலி. பிளம்பர் வேண்டுமா? ஒரு தேவை ரிக்வெஸ்ட் கொடுத்துவிட்டால், என்ன வேலைக்கு என்ன சார்ஜ் என்பதை உடனடியாகச் சொல்லிவிடுவார்கள். ரேட் நமக்குக் கட்டுபடியானால் பிளம்பரை அழைத்து வேலையை முடித்துக் கொள்ளலாம். கார் ரிப்பேரில் தொடங்கி பெஸ்ட் கன்ட்ரோல், பெயின்ட்டிங் என ஏகப்பட்ட சேவைகளுக்கான ஆட்கள் இங்கே கிடைக்கிறார்கள். இப்போதைக்கு இதை சென்னை மற்றும் கோவையில் மட்டும்தான் பயன்படுத்த முடியும்.

http://bit.ly/1XuooIw

விகடன் சாய்ஸ்

DIY இன்ட்டிரீயர் டெக்கரேஷன்

DIY Project Ideas - வீட்டை அழகாக்கும் சின்னச்சின்ன ஐடியாக்களின் தொகுப்பு இது. நூற்றுக்கணக்கான ஐடியாக்கள் வைத்திருக்கிறார்கள். ஒவ்வோர் ஐடியாவையும் எப்படிச் செய்வது என்கிற செய்முறையையும் கொடுத்தி ருக்கிறார்கள். இந்தச் செயலியின் உதவியோடு வித்தியாசமான முறையில் வீட்டை அழகாக்க புதுவிதமான முயற்சிகளைப் பண்ணலாம். எல்லாமே Do it yourself-தான் என்பதால், வீட்டில் இருக்கும் சாதாரணப் பொருட்களைக் கொண்டே வீட்டுக்கு எப்படி எல்லாம் ரிச் லுக் கொடுப்பது என்பதை அறிந்துகொள்ள முடியும். `இன்ட்டீரியர் டெக்கரேஷன் பண்ணணும்!' என முடிவெடுத்த பிறகு இந்தச் செயலியைப் பார்த்தால், சிந்தனைக் குதிரை நிச்சயம் சிலிர்த்து எழும்.

http://bit.ly/2bfT0cv

விகடன் சாய்ஸ்

மாடித் தோட்டம் போடலாம்!

வீட்டுத் தோட்டம் (Vivasayam) அமைக்க நினைப்பவர்களுக்கு ஏற்ற எளிமையான செயலி. இதில் வீட்டில் எப்படி தோட்டம் அமைப்பது, என்னென்ன தாவரங்களை வளர்க்கலாம், அவற்றை எப்படிப் பராமரிப்பது என்பதில் தொடங்கி, நம்முடைய மாடித் தோட்டம் குறித்த சகல கேள்விகளுக்கும் பதில் தெளிவான தமிழில் இருக்கிறது. ஒரு தோட்டம் அமைக்க ஆகும் பட்ஜெட், அதை எப்படித் திட்டமிடுவது, இருக்கும் இடத்தை எப்படி முழுமையாகப் பயன்படுத்துவது போன்ற A to Z விஷயங்களும் இதில் உண்டு. செடிகளை வளர்க்க உரங்களை வெளியே வாங்காமல், வீட்டிலேயே தயாரிக்கும் வழிமுறைகளும் இந்தச் செயலியில் உண்டு. எல்லா செடிகளையும் ஒரே மாதிரி வளர்க்க முடியாது. மாடித் தோட்டத்தில் காய்கறிகள் வளர்க்கும்போது சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். அதை எல்லாம் மிக அழகாகத் தொகுத்துத் தருகிறது இந்த சிம்பிள் செயலி!

http://bit.ly/2bE2LDF

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு