பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - மூவிங் கிச்சன்!

``மனுஷங்ககூட ஈஸியா கனெக்ட் ஆகிற விஷயம் சாப்பாடு மட்டும்தான்” -  பன்ச் கொடுத்து ஆரம்பிக்கிறார் ‘செவன்த் சின்' என்ற பெயரில் பெண்களால் மட்டுமே இயங்கும் ஃபுட் ட்ரக் ஸ்டார்ட் அப்பைத் தொடகியிருக்கும் அர்ச்சனா சிங்.

சமைத்ததை டோர் டெலிவரி செய்ற காலத்துல, கிச்சனை தெருவுக்கே கொண்டுவருவதுதான் `செவன்த் சின் ஃபுட் ட்ரக்’ கான்செப்ட். பெங்களூரில் இயங்கிறது இந்த ஸ்டார்ட்அப் நிறுவனம். ஆசிய அளவில் முதல்முறையாக பெண்களால் இயக்கப்படும் உணவு ட்ரக் இது. `பெண்கள் மட்டுமே இயக்கும் உணவகம்’ என்பது மட்டும் அல்ல இதன் ஸ்பெஷல்... அவர்கள் தயாரிக்கும் உணவுகளும் செம ஸ்பெஷல்.

ஒவ்வொரு நாளும் வெவ்வேறு மெனு... இத்தாலியன், மெக்ஸிக்கன், நார்த் இண்டின், சவுத் இண்டியன்னு எல்லா உணவு வகைகளையும் செம டேஸ்ட்டோடு கொடுத்து, 5 ஸ்டார் ரிவ்யூஸ் வாங்குது இந்த லேடீஸ் டீம்!

செவன்த் சின் ஃபுட் ட்ரக் சர்வீஸை ஆரம்பித்து அசத்திவரும் அர்ச்சனா சிங், பெங்களூரில் வசித்தாலும், நல்ல தமிழ் பேசும் திருச்சி தமிழச்சி.

‘`என்னோட சேர்த்து மொத்தம் ஏழு பெண்கள். நான்கு பேர் சமையல். பெரும்பாலும் ட்ரக்கில்தான் சமையல். என் நிறுவனத்துக்கு மூன்று முக்கியக் குறிக்கோள்கள்தான். ஒண்ணு... பெண்களுக்கு முக்கியத்துவம். ரெண்டு... தினமும் ஒரேவிதமான உணவு இருக்கக் கூடாது. மூணு... வாரத்தில் ஆறு நாட்கள் இதை பிசினஸா செய்தாலும், ஏழாவது நாள் உணவு இல்லாமல் தவிப்பவர்களுக்கு இலவசமா கொடுக்கணும்.

குளோபல் ரெசிப்பிக்களை நம் லோக்கல் டச்சோடு சேர்த்து `குளோக்கல் ஃபுட்' எனப் பெயரிட்டு வழங்குகிறோம். பாஸ்தா, வெஜ்ஜி ரிஸாட்டோ முதல் சிக்கன் டிக்கா வரை இங்கே எல்லாம் கிடைக்கும். பெங்களூரில் உள்ள பெக்மேனே டெக் பார்க்தான் எங்களோட முக்கியமான பிசினஸ் ஸ்பாட். ஐ.டி பசங்க எல்லாவிதமான உணவுகளும் சாப்பிட்டிருப் பாங்க. அவங்களை ஏமாத்த முடியாது. பெஸ்ட்டா இருந்தா மட்டும்தான் அடுத்த நாள் வருவாங்க. எங்களுக்குக்கு வர்ற கூட்டமும் கிடைச்சிருக்கிற ரெஸ்பான்ஸுமே `நாங்க பெஸ்ட்டா பண்றோம்’கிற நம்பிக்கையைத் தந்திருக்கு.

 இப்போதைக்கு பெங்களூரில் மட்டும் செயல்படும் இந்த ஃபுட் ட்ரக் கான்செப்ட்டை சென்னைக்கும் ஹைதராபாத்துக்கும் விரிவுபடுத்தும் ஐடியா இருக்கு.

டீன் ஏஜ் பெண்களுக்கும் காலேஜ் கேர்ள்ஸுக்கும் நான் சொல்ல ஒரு விஷயம் இருக்கு... பெண்களால் டிஃபரென்ட்டா யோசிக்க முடியும். கல்யாணம், குழந்தை இவை எல்லாம் ஒரு தடையே இல்லை. உங்களோட வித்தியாசமான ஐடியாக்களைக் கொண்டாட உலகம் காத்திட்டிருக்கு’' என தம்ஸ்அப் காட்டுகிறார் அர்ச்சனா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு