Published:Updated:

ஜென் Z - டிஜிட்டல் புதுமொழிகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஜென் Z - டிஜிட்டல் புதுமொழிகள்!
ஜென் Z - டிஜிட்டல் புதுமொழிகள்!

பா.ஜான்சன், படம்: மீ.நிவேதன்

பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - டிஜிட்டல் புதுமொழிகள்!

`ஆண்ட்ராய்டு முப்பது நாள்... ஐபோன் அறுபது நாள்’ காலம் இது.  சொன்னதையே சொல்லிட்டிருந்தா பசங்க சோர்ந்துபோக மாட்டாங்களா? பழமொழியை கொஞ்சம் டிஜிட்டல் பண்ணிப்பார்க்கலாம்
வாங்க டியூட்.

ஜென் Z - டிஜிட்டல் புதுமொழிகள்!

அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பிகூட உதவ மாட்டான்.
ஃபில்டர் உதவுற மாதிரி மேக்கப் கிட்கூட உதவாது.

• பொறுத்தார் பூமி ஆள்வார்.
பொறுத்தார் லைக்ஸ் அள்ளுவார்.

• நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.
நல்ல வீட்டுக்கு ஒரு வைஃபை.

• ஆள் வளர்ந்த அளவு அறிவு வளரலையே.
ஆப் வளந்த அளவுக்கு ஸ்டோரேஜ் வளரலையே.

• பட்ட காலிலேயே படும்... கெட்ட குடியே கெடும்.
உடைஞ்ச ஸ்கிரீனே உடையும்... தொலஞ்ச சார்ஜரே தொலையும்.

• ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது.
ஓட்ட ஹெட்செட் பாட்டுக்கு உதவாது.

• தனி மரம் தோப்பாகாது.
தனி கான்டாக்ட் வாட்ஸ்அப் குரூப் ஆகாது.

• ஆடத் தெரியாதவனுக்கு தெரு கோணலாம்.
செல்ஃபி எடுக்கத் தெரியாதவனுக்கு செல்போன் கோணலாம்.

• திருட்டு மாங்காவுக்கு ருசி அதிகம்.
திருட்டு ஸ்டேட்டஸுக்கு லைக் அதிகம் விழும்.

• ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இருக்காது
மீம் போட்ட கையும், வைபரேட்ல போட்ட செல்லும் சும்மா இருக்காது.

• நெருப்பில்லாமல் புகையாது
கேம் இல்லாம ஹேங்காகாது.

ஜென் Z - டிஜிட்டல் புதுமொழிகள்!

• மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
லைக் போடுற பொண்ணு எல்லாம் லவ்வர் இல்ல.

• அதிகம் கவனி, குறைவாகப் பேசு.
ஃபேஸ்புக் போல் கவனி, ட்விட்டர் போல் பேசு!

• நிறைகுடம் தளும்பாது.
ஃப்ளைட் மோட்ல போன் வராது.

• உன் நண்பனைப் பற்றி சொல் உன்னைப் பற்றி சொல்கிறேன்.
உன் ஃபேஸ்புக் பாஸ்வேர்டு சொல்... உன்னைப் பற்றி சொல்கிறேன்.

• பகல்லயே பசு மாடு தெரியாது, ராத்திரில எருமமாடா.
4-ஜிலயே போட்டோ அப்லோடு ஆகாது... 2-ஜில யூ டியூபா.

• வெளக்கமாத்துக்குப் பட்டுக்குஞ்சம்.
கழுவாத மூஞ்சிக்கு ப்ரிஸ்மா.

• ஆசை அறுவது நாள்... மோகம் முப்பது நாள்.
ஸ்டாண்ட் பை ஒரு நாள்... நெட் யூஸ் பண்ணா அரை நாள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு