Published:Updated:

ஜென் Z - தமிழகத்தின் அயர்ன்மேன்!

ஜென் Z - தமிழகத்தின் அயர்ன்மேன்!
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - தமிழகத்தின் அயர்ன்மேன்!

சிபி, படம்: மீ.நிவேதன்

ஜென் Z - தமிழகத்தின் அயர்ன்மேன்!

சிபி, படம்: மீ.நிவேதன்

Published:Updated:
ஜென் Z - தமிழகத்தின் அயர்ன்மேன்!
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - தமிழகத்தின் அயர்ன்மேன்!
ஜென் Z - தமிழகத்தின் அயர்ன்மேன்!

தோல்வி... தோல்வி... எனத் தோல்விகளால் மட்டுமே துரத்தி அடிக்கப்பட்டவரின் முதல் வெற்றியே... கின்னஸ் சாதனை!

டேனியல் சூர்யா. கடந்த வாரம் சென்னை ஸ்பென்சர் பிளாஸாவில் தொடர்ந்து, 100 மணி நேரத்துக்கு மேல் நின்றுகொண்டே 7,000 துணிகளுக்கும் அதிகமாக `அயர்ன்’ மாரத்தான் செய்து இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.

``ஒண்ணுமே இல்லாத பய நான். தோத்தாங்குளினு சொல்வாங்கல... அப்படி.  வெறும் உடம்பை

ஜென் Z - தமிழகத்தின் அயர்ன்மேன்!

மட்டும் சுமந்துட்டு உலகத்துக்கு பாரமாத்தான் இருக்கேன்னு நினைப்பேன். சின்ன வயசுலயே அப்பா இறந்துட்டார். ரொம்ப ஏழ்மையான குடும்பம். பத்தாவது முடிச்சதும், வேலைக்குப் போகவேண்டிய சூழல். மேஸ்திரி வேலை, துணி விற்கிறதுனு சில வேலைகள் செஞ்சேன்.

அப்பதான் துணிகளை அயர்ன் பண்ணும் சிலரைச் சந்திச்சேன். அயர்ன் தொழிலில், ஒரு நாளைக்குக் குறைந்தது 1,000 ரூபாய் வரை சம்பாதிக் கலாம்னு சொன்னாங்க. வழிப்போக்கனுக்கு எங்க ஒதுங்க இடம் கிடைச்சாலும், ஒதுங்குற மாதிரி... நானும் இனி இதுதான் நம்ம வேலைனு ஒரு லாண்டரி கம்பெனியில வேலைக்குச் சேர்ந்துட்டேன். 50 துணிகளைக் கொடுத்தாலும், சும்மா சட்டு சட்டுனு பக்காவா அயர்ன் செஞ்சுடுவேன். கம்பெனியில் `குட் பாய்’னு பேர் வாங்கினேன்.

வேலைக்காக சென்னையில இருந்து பெங்களூரு போனேன். அங்கதான் ஷாலினியைச் சந்திச்சேன். ரொம்ப அழகா இருப்பாங்க. எங்க ரெண்டு பேருக்கும் அப்படி ஒரு லவ். 2001-ல திருமணம் செஞ்சுக்கிட்டோம். கின்னஸ் சாதனை மாதிரி ஏதாவது பெரிய சாதனை செய்யணும்னு அவங்ககிட்ட சொல்லிட்டே இருப்பேன். `அதை அயர்னிங்லயே பண்ணு'னு ஷாலினி உற்சாகப்படுத்தினாங்க. ஆனால், எங்கிருந்து ஆரம்பிக்கணும்னு தெரியலை.

பத்துக்கும் மேற்பட்ட கின்னஸ் சாதனைகள் செஞ்ச சுரேஷ் ஜோச்சினைப் போய்ப் பார்த்தேன். `சூப்பர்... நீங்க நிச்சயம் அயர்ன்ல சாதனை செய்யலாம். ஏதாவது பெரிய ஷாப்பிங் மாலில் முயற்சி பண்ணுங்க. இதுக்கு முன்னாடி அயர்ன்ல சாதனை பண்ணவங்க எல்லாரும் ஏதாவது ஒரு மாலில்தான் பண்ணியிருக்காங்க. எனக்கு ஸ்பென்சர் பிளாசால லிங்க் இருக்கு. நான் உங்களுக்கு சீக்கிரம் சொல்றேன்’னு சொல்லிட்டு, ஃபாரினுக்குப் பறந்துட்டார். `ஏதாவது ஒரு நல்லது நடக்காதா?’னு ஏக்கமா இருந்தது. அந்தச் சமயத்துல என் வாழ்க்கையில இன்னோர் இடி இறங்கியது. என் குழந்தை மஞ்சள் காமாலையில் இறந்துபோய்டுச்சு.

குழந்தை இறந்ததுக்கு அப்புறம் என் காதல் மனைவிக்கும் அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போனது. 28 வயசுலேயே ரொம்ப முடியாமப் போய்ட்டாங்க. திடீர் திடீர்னு ஜுரம் வரும். ஹாஸ்பிட்டல்ல சேர்த்தோம். நல்லா பேசிட்டுத்தான் இருந்தாங்க. என்ன ஆச்சுன்னே தெரியலை. மூணு நாளில் இறந்துட்டாங்க. யாருமே இல்லாத உலகத்துல தனி ஆளா இருப்பதுபோல உணர்ந்தேன்.

`செத்துடலாமா?’னுகூட யோசிச்சேன். ஆனால் ஒருநாள் ஏதோ ஞானோதயம் கிடைச்ச மாதிரி எனக்குத்தான் யாரும் இல்லை. யாருக்காகவாவது நான் உபயோகமா இருக்கலாம்னு தோணிச்சு.

நான் தினமும் லோக்கல் ட்ரெயின்லதான் வேலைக்குப் போவேன். அங்கே கண் தெரியாதவங்க நிறையப் பேர் பிச்சை எடுப்பாங்க. அங்க ஒரு பொண்ணுகூடப் பேசினேன்; பழகினேன். புது உறவு கிடைச்ச மாதிரி இருந்தது. அவங்களுக்குப் பார்வை கிடைக்கணும்னு நினைச்சேன். ஆனால், என்னால் என்ன பண்ண முடியும்? எனக்குத் தெரிஞ்சது அயர்ன். அதுல ஏதாவது ஒரு சாதனை செய்தால் எல்லோரும் திரும்பிப்பார்ப்பாங்க. அதன் மூலமாக கண்தானம் பற்றி சொல்லலாம்னு, பழைய ஐடியாவைக் கையில் எடுத்தேன். அயர்ன் செய்த சாதனையாளர்கள் லிஸ்ட் தேடினேன். அப்ப இன்னோர் அடி விழுந்தது.

கின்னஸ் சாதனை செய்ய நான் யார்கிட்ட ஹெல்ப் கேட்டேனோ... அந்த சுரேஷ் என்னோட அயர்ன் ஐடியாவில் கின்னஸ் சாதனை பண்ணி யிருந்தார். மனசு உடைஞ்சுபோய்ட்டேன். 2002-ல அவரைப் பார்த்து இந்த ஐடியாவைச் சொல்றேன். 2005-ல அவர் அதில் கின்னஸ் சாதனை செஞ்சிருக்கார். இது எனக்கு 2012-லதான் தெரியும். அந்தச் சாதனையை நாமும் செய்யணும்னு உறுதி எடுத்தேன்.

ஜென் Z - தமிழகத்தின் அயர்ன்மேன்!

ஒருநாள் எக்மோர் கவர்மென்ட் மருத்துவமனைக்குப் போனேன். அங்க `கண் தானம் செய்ய...'னு ஒரு லயன்ஸ் கிளப் உறுப்பினரோட போன் நம்பர் எழுதியிருந்தது. போன் பண்ணினேன். முரளினு ஒருத்தர் நேர்ல வரச் சொன்னார். `சார், கண் தானம் விழிப்புஉணர்வு செய்ய கின்னஸ் சாதனை செய்யணும், எனக்கு ஹெல்ப் பண்ணுங்க’னு சொல்லி, இதுக்கு முன்னாடி, இது சம்பந்தமான சாதனையாளர்கள் லிஸ்ட் கொடுத்தேன். முதன்முதல்ல, 1999-ல் சுவிட்சர்லாந்துக்காரர் 40 மணி நேரம் தொடர்ந்து அயர்ன் பண்ணினார். நான் சொன்ன ஐடியாவை வெச்சு சுரேஷ் 2005-ல் 55 மணி நேரம் 5 நிமிஷத்துல 369  அயர்ன் செஞ்சிருக்கார். அப்புறம், 2012-ல் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த Janette Hastings என்பவர் 80 மணி நேரம் அயர்ன் செய்து, 1,157 துணிகளை அயர்ன் பண்ணினார். இதை பீட் பண்ணற மாதிரி போன வருஷம் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த Gareth Sanders என்பவர் தொடர்ந்து 100 மணி நேரம் அயர்ன் செய்து, 2,000 துணிகளை அயர்ன் பண்ணினார். `அப்போ நீங்க 100 மணி நேரத்துல 2,000 துணிகளைத் தாண்டி அயர்ன் பண்ணணும்’னு முரளி சார் சொன்னார். `ரொம்ப ஈஸியா பண்ணிடுவேன் சார்'னு சொன்னேன். அவர் சில டெஸ்ட்கள் வெச்சார்.

``நான் வேலை செய்யும் இடத்துலயே கேமரா வெச்சு ஒரு மணி நேரம் அயர்ன் பண்ணச் சொன்னார். ஒரு மணி நேரத்துல விறுவிறுனு 43 துணிகளைப் பக்கவா அயர்ன் செஞ்சேன். அடுத்து தூங்காமல் இருக்கணும். மூணு நாள் ஒரே இடத்துல உட்காரவெச்சு தூங்காம இருக்கேனானு, கேமரா வெச்சு டெஸ்ட் பண்ணினாங்க. மனசு முழுக்க கின்னஸ் வெறி இருக்கும்போது தூக்கம் எப்படி எட்டிப்பார்க்கும்? அசரலை. முரளி சார் மூலமாக லயன்ஸ் கிளப் மெம்பர்ஸ் நிறைய பேர் உதவி பண்ணினாங்க. ஸ்பென்சர் பிளாசாவும் இடம்கொடுத்து ஸ்பான்சர் பண்ணினாங்க. ரொம்ப நேரம் அயர்ன் பண்ணணும்னா அயர்ன் பாக்ஸ் தாங்கணும். பிலிப்ஸ் அயர்ன் பாக்ஸ் ஸ்பான்சர் பண்ணினாங்க. கனவு நினைவாகும் தருணம். எல்லாம் கைகூடி வந்தது.

அயர்ன் பாக்ஸைத் தொட்டு ஸ்டார்ட் பண்ணப்ப...  `கடவுளே... இவ்வளவு வருஷமா என்னைச் சோதிச்சுட்ட, நான் இந்தச் சாதனை பண்ணுவேன்னு எல்லோரும் நம்புறாங்க. என்னை எப்படியாவது கரைசேர்த்துடு'னு நினைச்சுக்கிட்டேன். 26 மணி நேரம் 30 நிமிஷத்துலயே 2,000 துணிகளை அயர்ன் பண்ணி, முதல் சாதனை பண்ணிட்டேன். தொடர்ந்து மூன்று நாட்கள் என்னை உற்சாகம்செய்யும் விதமா பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. 50 மணி நேரத்துக்கும் மேல நின்னுட்டே இருந்ததால், கால் நரம்புகள் இழுக்க ஆரம்பிச்சுடுச்சு. அசரலை. 90 மணி நேரமும் நெருங்கிட்டேன். எங்கே இருக்கேன்கிற உணர்வே இல்லை. அடுத்த 10 மணி நேரமும் கையில அயர்ன் பாக்ஸ் இருந்தது. ஆனா, ஒரு ரோபோ மாதிரி அயர்ன் பண்ணிட்டே இருந்தேன்.

ஜென் Z - தமிழகத்தின் அயர்ன்மேன்!

என் மனைவி கூட இருக்கிற மாதிரி, ரயிலில் கண் தெரியாத அந்தப் பொண்ணுகூட பேசுற மாதிரி வேற உலகத்துல இருந்தேன். இந்த 10 மணி நேரம் யார் என்கிட்ட பேசினாங்கனு ஒண்ணுமே தெரியல. முன்னாடி செஞ்ச சாதனையை முறியடிக்கும் விதமா 100 மணி நேரத்தைத் தாண்டிட்டேன். ஆனாலும், கூடுதலாக 2 மணி நேரம் அயர்ன் பண்ணச் சொன்னாங்க. கடைசி 26 நிமிஷம் சுத்தமா முடியலை. பசங்க என் மேல தண்ணியை ஊத்தினாங்க. எப்படியோ நினைவுவந்து சரியாக 102 மணி நேரம் 30 நிமிடம், 7,104 துணிகளை அயர்ன் பண்ணி கின்னஸ் சாதனை பண்ணிட்டேன். வேகமாக அயர்ன் செய்தது, அதிக நேரம் அயர்ன் செய்தது என இரண்டு சாதனைகள். ஒரு தோத்தாங்குளிக்கு முதன்முதலில் வெற்றிப் பட்டம் கிடைச்சது. அங்க இருந்தவங்க என்னைத் தூக்கிக் கொண்டாடினாங்க.

நிற்கக்கூட முடியாம, கீழே விழும்போதுதான் தோணுச்சு. வாழ்க்கை ரொம்ப விசித்திரமானது’’ - கண் கலங்கிய படியே கைகுலுக்குகிறார் டேனியல். 

மகிழ்ச்சி!