Published:Updated:

ஜென் Z - நான் பிரக்ஞானந்தா ஆனது எப்படி?

ஜென் Z - நான் பிரக்ஞானந்தா ஆனது எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - நான் பிரக்ஞானந்தா ஆனது எப்படி?

விவேக், படம்: ப.சரவணகுமார்

ஜென் Z - நான் பிரக்ஞானந்தா ஆனது எப்படி?

விவேக், படம்: ப.சரவணகுமார்

Published:Updated:
ஜென் Z - நான் பிரக்ஞானந்தா ஆனது எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - நான் பிரக்ஞானந்தா ஆனது எப்படி?
ஜென் Z - நான் பிரக்ஞானந்தா ஆனது எப்படி?

சென்னைப் புறநகர் பாடியில் இருக்கிறது அந்த வீடு. 450 சதுர அடியில் ஹால், பெட்ரூம் என நான்கு அறைகள். எல்லாவற்றிலும் வெற்றிக்கோப்பைகள் நிறைந்து, இறைந்து கிடக்கின்றன. அனைத்தும் சர்வதேச செஸ் போட்டிகளில் வென்றவை.

“எல்லாம் என் பையன் பிரக்ஞானந்தா ஜெயிச்சது சார். இன்னும் நிறைய இருந்துச்சு. டிசம்பர் மாச

ஜென் Z - நான் பிரக்ஞானந்தா ஆனது எப்படி?

மழையில கொஞ்சம் காணாமப்போயிடுச்சு” -சந்தோஷமும், சோகமும் கலந்த குரலில் சொல்கிறார் பிரக்ஞானந்தாவின் தந்தை ரமேஷ்பாபு.

செஸ் உலகின் `யங் இன்டர்நேஷனல் மாஸ்டர் (IM)’ அந்தஸ்து, இப்போது இந்த சென்னைப் பையன் வசம். ஆறாம் வகுப்பு படிக்கும் பிரக்ஞானந்தா, ஹங்கேரியைச் சேர்ந்த பிரபல செஸ் வீராங்கனை ஜூடிட் போல்கரின் 27 ஆண்டுகால சாதனையை உடைத்திருக்கிறார்.

ஜூடிட் சாதனைசெய்த அதே வருடம்தான் பிரக்ஞானந்தாவின் அப்பா ரமேஷ்பாபு வங்கி கிளார்க்காக வேலைக்குச் சேர்ந்தார். போலியாவால் பாதிக்கப்பட்டவர். தன் பிள்ளைகளும் தன்னைப்போல முடங்கிவிடக் கூடாது என, சிறுவயதிலே மகளை செஸ் பயிற்சிக்கு அனுப்பினார். அப்போது அக்காகூடவே சென்ற பிரக்ஞானந்தாவுக்கு, 64 கட்டங்களின் மீதும் அளவற்ற காதல். தற்போதைய உலக சாம்பியன்  கார்ல்ஸன், தன் அக்காவை வெற்றிபெற விரும்பியே செஸ் ஆடத் தொடங்கினார். பிரக்ஞானந்தாவுக்கும் அதே கதைதான். அக்கா வைஷாலியை ஒரு முறையாவது ஜெயிக்க வேண்டும் என்பதற்காகவே, மூன்றரை வயதில் ராஜாவைத் தொட்டு, கோச்சிங்கைத் தொடங்கிய பிரக்ஞானந்தா, ஐந்து வயது முதல் அள்ள ஆரம்பித்தது அத்தனையும் வெற்றிக்கோப்பைகள்.

``என் வயசுக் குழந்தைங்க எல்லாரும் படிச்சுட்டிருக்கும்போது நான் மட்டும் செஸ் விளையாடுவேன். அதைப் பார்த்த அப்பாவுக்கு நான் படிக்காமப் போய்டுவேன்னு பயம். ஆறு வயசுல  புனேவில் நடந்த நேஷனல் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சில்வர் மெடல் ஜெயிச்ச பிறகுதான், அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நம்பிக்கை வந்தது.

செஸ் வீரர்களுக்கு இன்டர்நேஷனல் மாஸ்டர் (IM), கிராண்ட் மாஸ்டர் (GM) ரெண்டும்தான் மிக உயர்ந்தபட்ச டைட்டில் அங்கீகாரம். இப்போதைக்கு நான் இன்டர்நேஷனல் மாஸ்டர். ஒரு சீஸனில் இன்டர்நேஷனல் மாஸ்டர் டைட்டில் மூன்று முறை ஜெயிச்சாதான், அதிகாரபூர்வ சர்டிஃபிகேட் தருவாங்க. இந்த வருஷம் நான் கேன்ஸ் டோர்னமென்ட்லயும், ரஷ்யா டோர்னமென்ட்லயும் சேர்த்து ரெண்டு ஐ.எம் டைட்டில் ஜெயிச்சிருந்தேன். மூணாவது டைட்டில், மே மாதம் நடந்த புவனேஷ்வர் கே.ஐ.ஐ.டி இன்டர்நேஷனல் டோர்னமென்ட்ல ஜெயிச்சேன். அப்போதான் நான் உலகிலேயே மிக இளவயதில் ஐ.எம் டைட்டில் ஜெயிச்ச விஷயமே தெரியும். ஜூடிட் போல்கர் மேடம் 11 வயசுலயே ஐ.எம் டைட்டில் ஜெயிச்சாங்க. நான் 10 வயசு 9 மாசத்துல டைட்டில் ஜெயிச்சிருக்கேன். இப்போதைக்கு மொத்தம் 5 ஐ.எம் டைட்டில் வெச்சிருக்கேன். ஒருநாள் விஸ்வநாதன் ஆனந்த் சார்கிட்ட இருந்து சர்ப்பரைஸ் போன் கால் வந்தது. வீட்டுக்குக் கூப்பிட்டுப் பாராட்டினார்”

- பிரக்ஞானந்தாவுக்குப் பேச்சில் இன்னும் மழலையே மாறவில்லை. அதற்குள் `யங் இன்டர்நேஷனல் மாஸ்டர்’ என்பது இமாலய சாதனை.

இந்தியா சார்பாக விளையாடும் போட்டிகளுக்கு சென்றுவரும் செலவை, மத்திய அரசு ஏற்கும். ஆனால், இன்டர்நேஷனல் மாஸ்டர் போட்டிகள் தனிநபர் சம்பந்தமானது என்பதால், செலவை அவரவரே ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்தச் செலவைக்கூட சமாளிக்க முடியாமல் திணறுகிறார் ரமேஷ்.

``இந்த வருஷம் வேர்ல்டு சாம்பியன்ஷிப் ஆட போற செர்ஜே கர்ஜாக்கின்தான், உலகிலேயே ரொம்ப சின்ன வயசுல கிராண்ட் மாஸ்டர் பட்டம் வாங்கியவர். 12 வருஷம் ஏழு மாசத்துல இந்தச் சாதனையை அவர் நிகழ்த்தினார். சீக்கிரமே நானும் கிராண்ட் மாஸ்டர் ஆகணும். கர்ஜாக்கின் சாதனையை உடைக்க இன்னும் ஒன்றரை வருஷம்தான் மீதி இருக்கு” என்கிறார் பிரக்ஞானந்தா.

வாழ்த்துகள் வீரனே!

பொழுதுபோக்கு?

கார்ட்டூன், சினிமா

இலக்கு?

வேர்ல்டு சாம்பியன்ஷிப் ஜெயிக்கணும்

சக்ஸஸ் சீக்ரெட்?

ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் செஸ் பிராக்ட்டீஸ்

பிடித்த வீரர்?

மேக்னஸ் கார்ல்சன்

ரோல்மாடல்?

விஸ்வநாதன் ஆனந்த்