Published:Updated:

ஜென் Z - “இப்போ நான் டைரக்டர்!”

ஜென் Z - “இப்போ நான் டைரக்டர்!”
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - “இப்போ நான் டைரக்டர்!”

சிபி

ஜென் Z - “இப்போ நான் டைரக்டர்!”

சிபி

Published:Updated:
ஜென் Z - “இப்போ நான் டைரக்டர்!”
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - “இப்போ நான் டைரக்டர்!”
ஜென் Z - “இப்போ நான் டைரக்டர்!”

ரண்டு தேசிய விருதுகள், 150-க்கும் மேற்பட்ட மாநில விருதுகள்...  என அனைத்தையும் தனது தூரிகையால் வென்ற ஜனார்த்தனன், பிரஷ் பிடிக்க பயன்படுத்தியவை கைகள் அல்ல; வாய்.

ஜென் Z - “இப்போ நான் டைரக்டர்!”

ஒரு விபத்தில் தனது இரண்டு கைகளை இழந்தவர், அதில் இருந்து மீண்டுவந்து ஓவியத்தில் பல சாதனைகள் செய்து, தற்போது படம் இயக்கும் முயற்சியில் இருக்கிறார்.

``சின்ன வயசுல எவ்வளவோ விளையாட்டுகள் விளையாடியிருப்போம். எதில் ஜெயித்தாலும் தோற்றாலும் ஜஸ்ட் லைக் தட் அலட்டிக்காம அடுத்த விளையாட்டையோ, வேலையையோ பார்க்க ஆரம்பிச்சுடுவோம். ஆனால், வளர்ந்ததும் அப்படிச் செய்ய மாட்டேங்குறோம். ஏன்? லைஃப் கேம்ல எனக்கு ரெண்டு கைகளும் போய்டுச்சு. அதுக்கு நான் வருத்தப்பட்டுட்டே இருந்திருந்தேன்னா... வீட்டைவிட்டுகூட வெளியே வந்திருக்க மாட்டேன். அத்தனையும் தகர்த்து எறிஞ்சுட்டு வெளியே வந்தேன். என் ஆட்டிடியூடை மாத்திக்கிட்டேன். இப்ப சந்தோஷமா இருக்கேன் ப்ரோ’’ - நம்பிக்கை வார்த்தைகள் பேசுகிறார் ஜனா.

``எட்டு வயசு இருக்கும்போது ஃப்ரெண்ட்ஸ்கூட வீட்டு மாடியில் இரும்புக் கம்பியைச் சுத்தி விளையாடுறப்போ, அது யதேச்சையாக மின்சார கம்பியில் பட்டு 11,000 வாட்ஸ் மின்சாரம் என் மேல் பாய்ந்தது. உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த என்னை, பல மருத்துவர்களும் கைவிட்ட நிலையில், குழந்தை நல மருத்துவர் சீனுராஜ்தான் என் ரெண்டு கைகளையும் நீக்கி, உயிரைக் காப்பாற்றினார்.
என்ன நடந்ததுனு உணரவே எனக்குக் கொஞ்ச காலம் ஆச்சு. எங்க அப்பா ஒரு பிரஸ் வெச்சிருந்தார். அதை வித்துதான் என்னைக் காப்பாத்துனாங்க. டாக்டர்கிட்ட `எனக்கு ரெண்டு கைகளும் இல்லாமப் பண்ணிட்டீங்களே... இனிமே நான் எப்படி ஸ்கூல் போவேன், எழுதுவேன்?னு கேட்டேன். `ஒண்ணும் பிரச்னை இல்லைப்பா. நிறையப் பேர் வாயில பேனா பிடிச்சுக்கூட எழுதுறாங்க; வரையறாங்க.

ஜென் Z - “இப்போ நான் டைரக்டர்!”

நீயும் இப்படி முயற்சிசெய்'னு சொன்னார். அவர் சொன்ன பதில் எனக்கு ஆறுதலா இருந்தது.

ஹாஸ்பிட்டலில் இருக்கும்போதே அப்பாவை பேனா, நோட் எல்லாம் வாங்கிட்டு வரச் சொன்னேன். அங்கயே `ஏ... பி... சி... டி'னு பல்லால் பேனா பிடித்து எழுதிப் பார்த்தேன். அப்படியே யானை, பொம்மைனு குட்டிக்குட்டியாக வரையத் தொடங்கினேன். எல்லாமே வெறும் கிறுக்கல்களா இருந்தது. நான் மீண்டும் முயற்சிசெஞ்சேன். எழுத்து வந்தது, தூரிகையும் வசப்பட்டது. இதைப் பார்த்த ஒரு நர்ஸ் `எங்களுக்கு மட்டும் வரைஞ்சுக் காட்டினால் எப்படி?' வெளியே போய் போட்டிகளில் வரையலாமே'னு சொன்னாங்க. ஓவியப் போட்டியில் கலந்துக்கிட்டேன். ஆச்சர்யம்... முதல் பரிசு. மருத்துவமனை முழுவதும், நான் பார்க்கிற இடத்துல எல்லாம் நான் முதல் பரிசு வாங்கின போஸ்டரை ஒட்டிவெச்சாங்க. எனக்குள் நம்பிக்கை துளிர்விட்டுச்சு’' என உற்சாகமாகப் பேசுகிறார் ஜனா.

பள்ளித்தேர்வுகளில் மாற்றுத்திறனாளி மாணவர் சொல்லச் சொல்ல, வேறு ஒரு நபர் தேர்வு எழுதுவார். ஆனால், ஜனா... தனது பள்ளித்தேர்வுகள் அனைத்தையும் வாயில் பேனா பிடித்து எழுதியே தேர்ச்சிபெற்றிருக்கிறார்.

``ஆமாம்... நம்மால் முடியும்போது எதுக்கு இன்னொ ருத்தர் உதவி? அதான் நானே எழுதி பாஸ் ஆனேன். அப்பதான் என் ஓவியங்களுக்குத் தேசிய விருது கிடைச்சது. அப்ப அப்துல் கலாம்தான் ஜனாதிபதி. என்னைப் பார்த்ததும் மேடையில் இருந்து கீழே இறங்கிவந்து, தட்டிக்கொடுத்து, `நீ எல்லாருக்கும் ரோல்மாடலாக இருக்கிற மாதிரி வாழணும்'னு சொன்னார். நம்பிக்கையா இருந்தது. அடுத்த ஆண்டே இன்னொரு தேசிய விருது கிடைச்சது. அப்பவும் `மறுபடியும் வந்துட்டீங்களா... சூப்பர்'னு பாராட்டினார் கலாம் சார். இது எல்லாம்தான் என் வாழ்க்கையில கோல்டன் மொமன்ட்ஸ்.

ஜென் Z - “இப்போ நான் டைரக்டர்!”

லயோலாவில் விஸ்காம் படிப்பில் ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் ஆனேன். அப்பதான், நிறைய காலேஜ் பசங்க எக்கசக்கமா ஷார்ட் ஃபிலிம் எடுத்துட்டிருந்தாங்க. அவங்களுக்கு ஹெல்ப் பண்ணணும்னு தோணுச்சு. கொஞ்ச நாளில் என் வேலையை விட்டுட்டு முழு நேரமாக ஷார்ட் ஃபிலிம் எடிட்டிங் பண்ண ஆரம்பிச்சேன். போன வருஷம், `Let Me Try'னு ஒரு நிமிட ஷார்ட் ஃபிலிம் எடுத்தேன். சத்யம் சினிமாஸ்ல ஸ்கிரீன் பண்ணினப்போ பலரும் பாராட்டினாங்க. இப்ப `கண்ணாடி போட்டவன் கெட்டவன்'னு 40 நிமிட மினி காமெடி டெலிஃபிலிம் எடுத்திருக்கேன். இதுக்கும் செம ரெஸ்பான்ஸ். இதையே ஒரு முழு நீளப் படமாக எடுக்கணும்னு ஆசை. ஸ்கிரிப்ட் எழுதியாச்சு. தயாரிப்பாளருக்காக வெயிட்டிங். சீக்கிரம் என் பேரை `டைரக்டர் ஜனா'னு சில்வர் ஸ்கிரீன்ல பார்க்கலாம் ப்ரதர்’’ என்கிறார் ஜனார்த்தனன்!

கலக்கல்ஸ்!