Published:Updated:

ஜென் Z - இருக்கு ஆனா... இல்லை!

ஜென் Z - இருக்கு ஆனா... இல்லை!
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - இருக்கு ஆனா... இல்லை!

விஜி, படங்கள்: கே.ராஜசேகரன்

ஜென் Z - இருக்கு ஆனா... இல்லை!

விஜி, படங்கள்: கே.ராஜசேகரன்

Published:Updated:
ஜென் Z - இருக்கு ஆனா... இல்லை!
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - இருக்கு ஆனா... இல்லை!
ஜென் Z - இருக்கு ஆனா... இல்லை!

வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கின் நோட்டிஃபிகேஷன் சத்தம் கேட்காத, ஒரு நல்ல இரவின் தூக்கம் முடிந்து எழுந்திருக்கிறீர்கள். மூளைக்குள் புகுந்து யாரோ Shift+delete செய்ததுபோல வெறும் `ஜீரோ’ நினைவுகள் மட்டுமே இருக்கின்றன. உங்கள் வாழ்க்கையை மீண்டும் தொடக்கத்தில் இருந்து

ஜென் Z - இருக்கு ஆனா... இல்லை!

ஆரம்பிக்க வேண்டும் என்றால், அதன் starting point எதுவென உங்களுக்குத் தெரியுமா?
கொஞ்சம் ஜாலியாகப் பேசுவோம்.

லவ் பாய்ஸ் அடிக்கடி சொல்லும் வசனம்... ‘அவளின்றி ஓர் அணுவும் அசையாது’. அந்த `அவள்’ எது? எந்தப் பொருளைப் பிரித்துக்கொண்டே சென்றாலும் கடைசியில் மிஞ்சுவது அணு.

அணு என்ற ஒன்றே உருவாவதற்கு முன்னர் இருந்த ஜீரோ நிலையை என்ன என்று சொல்வது? எதுவுமே இல்லாதபோதும் ஏதோ ஒன்று இருந்திருக்கும். இதை Non-physicality என்பார்கள். அட... அணுவுக்கு முன்னாடி, நிறை(Mass) இல்லாமல் இருந்தபோது ஒரு எனர்ஜி கண்ணுக்குத் தெரியாமல் இருந்திருக்க வேண்டுமே என, அதற்கு ஒரு தியரி எழுதி காப்பிரைட்டும் வாங்கியிருக்கிறார் ஆன்ட்டோ ஜூட்.

 25 வயது இளம் விஞ்ஞானி, நாகர்கோவில் தமிழன் ஆன்ட்டோ ஜூட். `‘Non-physicality அதாவது உருவமற்ற ஒன்று இருக்கிறது என்பது என் நிலைப்பாடு. நிறை என்பது சிறுசிறு துளிகளை ஒன்றிணைத்து, அணுக் கட்டமைப்புகளைக் கொண்டு கண்ணுக்குத் தெரிகிற ஒரு பொருளை உண்டாக்குவது. ஆனால், கடவுள் துகளையும் தாண்டி, வேராக, கண்ணுக்கே புலப்படாத, இயற்பியலுக்குள்ளேயே செல்லாத தொடக்க நிலையாக ஒன்று இருந்திருக்கும். அதைக் கண்டுபிடிக்கத்தான் நான் முயற்சிக்கிறேன்.

 நேரம் உருவாவதற்கு முந்தைய நிலையைக் கண்டறிய முடிந்தால் நம்மால் நேரத்தை நமக்கு ஏற்ற வகையில் வளைக்க முடியும். டைம் டிராவல்கூட செய்ய முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். அதேபோலத்தான் இந்த ஆராய்ச்சியும்.

ஜென் Z - இருக்கு ஆனா... இல்லை!

கிளை, இலை, கனி, காய் இப்படிப் பூத்துக்குலுங்கும் ஒரு மரத்தின் வேருக்கும் விதைக்கும் முந்தைய ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கின்றேன். அந்த ஜீரோ நிலையைக் கண்டுபிடித்துவிட்டால், பல மருத்துவக் குறைபாடுகளுக்கு, ஜீன் மாற்ற நோய்களுக்கு, சுற்றுச்சூழல் மர்மங்களுக்குக்கூட எளிதாக விடை கண்டறிந்துவிட முடியும்’’ என்கிறார் ஆன்ட்டோ.

கையில் இருக்கும் விடைக்கு, கேள்வியைக் கண்டுபிடிக்க தன் கார்ப்பரேட் வேலையைக்கூட

ஜென் Z - இருக்கு ஆனா... இல்லை!

விட்டுவிட்டார் இந்த இளைஞர். அரசின் உதவிகள் கிடைத்தால் ஆராய்ச்சியைத் தடையின்றி நடத்த முடியும் என்கிறார். தன் ஆராய்ச்சிக்காக ஆன்ட்டோ எழுதியுள்ள தியரியில், குறியீடுகளுக்கு ‘அ, ஆ, ஒ’ ஆகிய மூன்று தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்தி `தமிழன்டா’ எனக் கெத்துகாட்டுகிறார். `அ’ என்றால் கண்களுக்குத் தெரிவது, `ஆ’ என்றால் அர்த்தம் புலப்படாத ஒன்று, `ஒ’ என்றால் ஒன்றும் இல்லாதது. இந்த மூன்றையும் கணிதக் குறீயிடுகளாகத் தன் தியரியில் பதிவிட்டுள்ளார்.

தமிழகப் பள்ளியில் படித்து, பட்டம் வாங்கி, இன்று இளம் விஞ்ஞானியாகவும் உருவெடுத்திருக்கும் ஆன்ட்டோ ஜூட், `நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?’, `அதிகம் ஷேர் செய்யவும்’... போன்ற வாட்ஸ்அப், ஃபேஸ்புக் வாக்கியங்களுக்கு மிகச் சரியான உதாரணம்.

வாழ்த்துகள் ப்ரோ!