Published:Updated:

ஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 6

ஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 6
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 6

டாக்டர். ஆர்.கார்த்திகேயன், ஓவியம்: பிரேம் டாவின்ஸி

ஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 6

டாக்டர். ஆர்.கார்த்திகேயன், ஓவியம்: பிரேம் டாவின்ஸி

Published:Updated:
ஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 6
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 6
ஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 6

#காரடையான்_நோம்பு

போட்டித் தேர்வுகள் எழுதுபவர்களைத் தவிர இன்று பலருக்கு அரசியல் தெரிவது இல்லை. அரசியல் ஈடுபாடு என்றால் கேப்டனுக்கோ, வைகோவுக்கோ, ஸ்டாலினுக்கோ மீம்ஸ் போடுவதுடன் தங்கள் கடமையை முடித்துக்கொள்கிறார்கள். அரசியல் வரலாற்றைவிட சினிமா வரலாறு பற்றி நிறையத் தெரிகிறது.

நம் வேர்கள் பற்றிய வரலாறு, அரசியல், பண்பாடு தெரிந்திருப்பது அவசியம். இன்டர்வியூக்களில் சொந்த ஊர் பற்றி சரியாகச் சொல்லாதவர்கள் வேலைவாய்ப்பை இழப்பது இப்போதெல்லாம் சகஜமாம். வேலைக்குச் சேர்ந்தும் வெள்ளைக்கார பாஸ்கள், `வாட்ஸ் காரடையான் நோம்பு?’, `ஒய் இஸ் தாராசுரம் நாட் ஸோ ஃபேமஸ் இன் தஞ்சாவூர்?’, `ஒய் இஸ் டமில் மீடியம் நாட் பேட்ரனைஸ்ட்?’ என்றெல்லாம் கேள்விகளைக் கேட்கும்போது, நம் ஆட்கள் ஆடு திருடியவர்கள் போலவே முழிப்பதைப் பார்த்திருக்கிறேன்.

`டமில் அரசியல் ஃபார் டம்மீஸ்’ என்று ஒரு புத்தகம் வந்தால், கீழ்கண்டவை பற்றி படிக்க நேரிடலாம்... நீதிக்கட்சி, கீழ்வெண்மணி, வைக்கம் போராட்டம், குலக் கல்வி, காமராஜ் திட்டம், மேல் சபை, சத்துணவுத் திட்டம்...

அடுத்த இன்டர்வியூவில் இவை எல்லாம் கேட்கப்பட்டால் எவ்வளவு ரிஸ்க்? கூகுள் பண்ணுங்க பாஸ்! 
               
#ஆபீஸ்_பாலிட்டிக்ஸ்

ஆபீஸ் பாலிட்டிக்ஸ் ஒரு புதைமணல். அதை அறிந்துகொள்வது முக்கியம். இல்லை எனில் காலைவிட்டு உயிரைக் கொடுக்க நேரிடும்.

`இந்த விஷயங்கள் எல்லாம் மெயில்ல போட வேண்டாம். போன்ல சொல்லுங்க போதும்’ என்று சொல்பவரின் உள்நோக்கம் அறிவதற்கும், மீட்டிங்கில் என்ன பேசலாம், என்ன பேசக் கூடாது என்று அறிவதற்கும், அலுவலக அரசியலின் ஆரம்பப் பாடங்களாவது தெரிய வேண்டும்.

இன்று பெரும் பிசினஸ் ஸ்கூல்களில், ஆபீஸ் பாலிட்டிக்ஸ் பற்றி பாடமே எடுக்கிறார்கள்.

`இதெல்லாம் தேவையா சார்? நாம் உண்டு நம் வேலை உண்டு என்று இருந்தால் பாலிட்டிக்ஸ் என்ன பண்ணிடும்?’ என்று தோன்றும். ஆனால், எல்லா வேலைகளிலும் மனிதர்களின் பங்கு உண்டு. அதிகாரம் குவிகையில் அரசியல் பிறக்கும். அரசியல் அறியாமல் வேலைபார்த்தால் பல நேரங்களில் வேலையையேகூட இழக்க நேரலாம்.

அரசியல் என்றால் உடனே மோசமாக எண்ண வேண்டாம். இங்கு தவறாகவும் கீழ்மையுடனும் புரிந்துகொள்ளக்கூடிய வார்த்தைகள் Politics,Selling, Lobbying, Networking போன்றவை. இந்த மென்திறன்களை மேற்கத்திய கலாசாரத்தில் மதிக்கிறார்கள்.

இங்கு முதல் ஆண்டிலேயே `வேலை செட் ஆகவில்லை’ என்று சொல்லி வெளியேறுபவர்களில் பலர், நிறுவன அரசியலையும் மனித மனோபாவங் களையும் புரிந்துகொள்ளாதவர்களே.

 #கன்ட்ரோல்_ஃப்ரீக்

அலுவலக அரசியல் பற்றியும் வேலையில் உங்கள் பாஸை எப்படிக் கையாள்வது என்பது பற்றியும் ஹார்வர்டு போன்ற பிஸினஸ் ஸ்கூல்களில் நிறுவன உளவியல் பயிற்சி நடத்துகிறார்கள்.

Control Freak பாஸிடம் எப்படி காரியம் சாதிப்பது என்பது பற்றி சமீபத்திய `ஹார்வர்டு பிஸினஸ் ரிவ்யூ' இதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது. மோசமான பாஸ்களின் ஆதார குணம் பாதுகாப்பின்மை.
 தன் அதிகாரம் பறிபோய்விடும் பயம்
. அந்தப் பயத்தில் எதையும் எல்லோரையும் சந்தேகம் கொண்டு அனைத்தையும் தங்கள் கைக்குள் வைத்திருப்பார்கள். தங்களை மீறி எதுவும் நடக்கக் கூடாது என்பதில் கவனமாக இருப்பர். எல்லாம் தங்கள் கண்ட்ரோலில் இயங்க வேண்டும் என்று விரும்புவர். யோசித்துப் பார்த்தால் அலுவலக அரசியலில் ஆரம்பப் புள்ளி இங்கிருந்துதான்!

#படுக்கை_அறை

அரசியல் இல்லாத இடம் இல்லை. தனிமனித வாழ்வில் அதிகாரமும் அரசியலும் மிகத் தீவிரமாக உள்ள இடம் படுக்கை அறை. Sexual Politics பற்றி வந்த ஒரு முக்கியமான இந்தி படம் ‘காமசூத்ரா’.

Kurt Lewin எனும் உளவியலாளர் குழு நடத்தை பற்றியும் குழு பகுப்பாய்வு (Group Dynamics) பற்றியும் நிறையக் கருத்தாக்கங்களை உருவாக்கியவர்.

இன்று குரூப் டிஸ்கஷன் என்ற தேர்வு முறை வரக் காரணமானவர். ஒரு கம்பெனியை ஆராய அதன் மனிதர்களைக் குழுவாக அமைத்து ஒரு வேலையைக் கொடுங்கள். பின் அவர்கள் செயல்பாட்டைக் கவனித்தாலே கம்பெனி பற்றிய சகல விஷயங்களும் தெரியவரும் என்றார்.

Behavioural Process Labs என்று தனி மனித, குழு மற்றும் நிறுவன நடத்தையை ஆராயத் தொடங்கியவர் லெவின்.

இன்று லெவினின் செயல்பாட்டை ஒட்டி அவர் டெக்னிக்கை அப்படியே பின்பற்றும் ஒரே இடம் ராணுவத் தேர்வு முறை எனலாம்.

அரசாங்க அலுவலகத்தில் பணியாற்றிய என் நண்பர் அடிக்கடி சொல்வார்: `ஆள சொல்லு, ரூல சொல்றேன்!’

வழிமுறைகளை எடுத்தாளும் மனித உள்நோக்கங்களை இதைவிடச் சிறப்பாகச் சொல்ல முடியாது.

அரசியல் என்பது இருமுனைக் கத்தி. எதிரியைக் கையாள மட்டும் அல்ல; தன்னைத் தற்காத்துக் கொள்ளவும் தேவை இந்த ஆயுதத் திறன்.


#பாராட்டு

‘தலைமுறைகள் பற்றி நீங்கள் எழுதும் தொடர் சூப்பர்’ என்றார் ஒரு நண்பர். `உறவுகளை balance செய்றதைப் பத்தி எழுதுற தொடர் ரொம்ப யூஸ்ஃபுல்’ என்றார் இன்னொருவர். ‘நச்சுனு சினிமா தலைப்பு மாதிரி வெச்சு சினிமா பத்தி எழுதுறீங்க’, ‘non linear’-ங்கிறதை தலைப்பிலயே கொண்டு வந்துட்டீங்க’... இப்படி எல்லாம் இந்தத் தொடர் தலைப்பு பற்றி interpretations கலந்த பாராட்டுகளைப் பெறும்போது, Apperception பற்றித்தான் நினைக்கத் தோன்றும்.

குருகிராம் தாஜுக்குப் போயிருந்தோம். நள்ளிரவில் `டெரஸ் வியூ பார்த்தே ஆக வேண்டும்’ என அடம்பிடித்தார் எங்களை விருந்துக்கு அழைத்தவர். போகும் வழியில் ஓர் உள்ளூர் ஜோடி, நிதானமாக நடுவழியில் நின்று உதட்டுக்கு உதடு உம்மா கொடுத்துக்கொண்டிருந்தது.

எங்கள் குழுவில் பல கமென்ட்கள் வரும் வழி எங்கும்... `இங்கேயும் ஃபாரின் கல்ச்சர் வந்திருச்சு!’, `இதைப் பாத்தா சின்னப் பசங்க கெட்டுப்போக மாட்டாங்க?!’, `எவ்வளவு நிதானமா யாரைப் பத்தியும் கவலைப்படாம இருந்தாங்க பாரு. சூப்பர் ஆட்டிடியூட்!’, `சூப்பரா இருந்தா அந்தப் பொண்ணு!’ ஆளாளுக்கு ஒரு அப்பர்செப்ஷன்.

அது என்ன அப்பர்செப்ஷன்?

- மற்றவை நெக்ஸ்ட் வீக்