Published:Updated:

இயற்கை விவசாயம்! - வழிகாட்டும் `அக்ரி எக்ஸ்போ'

இயற்கை  விவசாயம்! - வழிகாட்டும் `அக்ரி எக்ஸ்போ'
பிரீமியம் ஸ்டோரி
இயற்கை விவசாயம்! - வழிகாட்டும் `அக்ரி எக்ஸ்போ'

ஆர்.குமரேசன், படங்கள்: வீ.சிவகுமார்

இயற்கை விவசாயம்! - வழிகாட்டும் `அக்ரி எக்ஸ்போ'

ஆர்.குமரேசன், படங்கள்: வீ.சிவகுமார்

Published:Updated:
இயற்கை  விவசாயம்! - வழிகாட்டும் `அக்ரி எக்ஸ்போ'
பிரீமியம் ஸ்டோரி
இயற்கை விவசாயம்! - வழிகாட்டும் `அக்ரி எக்ஸ்போ'
இயற்கை  விவசாயம்! - வழிகாட்டும் `அக்ரி எக்ஸ்போ'

தோ ஒருவகையில் நாம் அனைவரும் விவசாயி வீட்டுப் பிள்ளைகள்தான். நமது அப்பாவோ, தாத்தாவோ, அதற்கு முந்தைய ஒரு தலைமுறையோ நிச்சயம் விவசாயம் செய்தவர்களாகத்தான் இருப்பார்கள். தலைமுறைகள் இடைவெளி இருக்கலாம். நிலத்தடியில் ஓடிக்கொண்டே இருக்கும் கண்ணுக்குத் தெரியாத நீருற்றுபோல, இன்னமும் நம்மில் பெரும்பாலானோர் நினைவுகளில் ஈரமாகவே இருக்கிறது விவசாயம் தொடர்பான எண்ணங்கள்.

சென்னை போன்ற பெருநகரங்களில்  மாடியில் விவசாயம் செய்யும் பழக்கம் வெகுவேகமாக அதிகரித்துவருவதும், ஊரெல்லாம் ஆர்கானிக் மற்றும் சிறுதானிய உணவுகள் மீதான வரவேற்புமே இதற்குச் சான்றுகள். இப்படி விவசாயத்தின் மீது புது வெளிச்சம் விழத்தொடங்கியிருக்கும் நேரத்தில், இதில் ஈடுபடும் பலரும் சரியான வழிகாட்டுதலும் ஆலோசனைகளும் இல்லாமல் தவிக்கிறார்கள்.

அவர்களுக்காக பல்வேறு தலைப்புகளில் பயிற்சிகள், கருத்தரங்குகள்... நடத்திவருகிறது `பசுமை விகடன்’.

அந்த வகையில் வேளாண்மை தொடர்பான அனைத்துச் சந்தேகங்களுக்கும் ஓர் இடத்தில் விடைகிடைக்க வழிசெய்யும் விதமாக, பசுமை விகடன், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஈரோட்டில் அக்ரி எக்ஸ்போ கண்காட்சி மற்றும் கருத்தரங்கு ஆகியவற்றை நடத்தியது. விவசாயிகளிடம் பலத்த வரவேற்பைப் பெற்ற ‘அக்ரி எக்ஸ்போ’, இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருச்சி மாநகரிலும் சிறப்பாக நடந்தது. இதைத் தொடர்ந்து வருகிற செப்டம்பர் 9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை ஈரோடு, வ.உ.சி.பூங்கா மைதானத்தில் ‘பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ 2016’ நடைபெற உள்ளது.

இயற்கை  விவசாயம்! - வழிகாட்டும் `அக்ரி எக்ஸ்போ'

கடந்த இரண்டு அக்ரி எக்ஸ்போவிலும், பல்லாயிரக்கணக்கான  விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெற்றார்கள். அதில் புதுச்சேரியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி, லக்ஷ்மி நாராயணனும் ஒருவர். அக்ரி எக்ஸ்போ குறித்து அவர் பேசும்போது, “ஈரோட்டில் நடந்த கண்காட்சியில் ஒரு நாள் மட்டும்தான் கருத்தரங்கில் கலந்துக்கிட்டேன். ஆனால், நான்கு நாட்கள் நடந்த கருத்தரங்கில் வல்லுநர்கள், விவசாயிகள் பேசியதன் தொகுப்பு `பசுமை விகடன்’ இதழ்கள் தொடர்ச்சியாக வெளிவந்தது. அவை அனைத்துமே மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அதனால, திருச்சி எக்ஸ்போவில் நான்கு நாட்களும் கலந்துக்கிறதுக்காக பாண்டிச்சேரியில இருந்து வந்துட்டேன். வல்லுநர்கள், விவசாயிகள் கருத்துக்களையும், விவசாயிகள் சந்தேகங்களுக்கு வல்லுநர்கள் சொன்ன தீர்வுகளையும் குறிப்பெடுத்து வெச்சிருக்கேன். 

ஓய்வுபெற்ற பிறகு உருப்படியா ஏதாவது செய்யணும்னு யோசிச்சுட்டிருந்தப்ப, என்னை இயற்கை விவசாயம் செய்யத் தூண்டியது `பசுமை விகடன்’ இதழ்தான். எந்த ஊர்ல அக்ரி எக்ஸ்போவை `பசுமை விகடன்’ நடத்தினாலும், அதில் நிச்சயம் நான் கலந்துக்குவேன்” என மகிழ்ச்சியுடன் சொன்னார்.

இப்போது, ஈரோட்டில் நடக்க இருக்கிற அக்ரி எக்ஸ்போ கண்காட்சியில் இயற்கை வேளாண்மை ஆர்வலர், பட்டிமன்றப் பேச்சாளர்... எனப் பல பரிமாணங்கள் கொண்ட பேராசிரியர்
கு.ஞானசம்பந்தன் சிறப்புரையாற்றுகிறார். கோயில் கருவறைகளில் இருந்த பஞ்சகவ்யா பானத்தை விவசாய நிலங்களுக்குக் கொண்டுசேர்த்த பெருமைக்குரிய, பஞ்சகவ்யா சித்தர், ‘கொடுமுடி’ டாக்டர் நடராஜன், ஈரோடு விவசாயிகள் சங்கத் தலைவர் காசியண்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்கின்றனர்.

இயற்கை  விவசாயம்! - வழிகாட்டும் `அக்ரி எக்ஸ்போ'

பண்ணைக் கருவிகள், இயற்கை இடுபொருட்கள், விதைகள், வீட்டுத்தோட்டப் பொருட்கள், சிறுதானியங்கள், நர்சரி உணவு வகைகள் என அனைத்துவிதமான அரங்குகள், மற்றும் தொழில்நுட்பச் சந்தேகங்களைத் தீர்க்கும் பல்கலைக்கழக அரங்குகள் என நூற்றுக்கணக்கான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இயற்கை  விவசாயம்! - வழிகாட்டும் `அக்ரி எக்ஸ்போ'

மண்வளம், கால்நடைகளுக்கான பாரம்பர்ய வைத்திய முறைகள், இயற்கை உரம் தயாரிப்பு, தோட்டக்கலை பயிர் பராமரிப்பு நுட்பங்கள், நீர் மேலாண்மை, மீன்வளர்ப்பு, சித்த மருத்துவம், காளான் வளர்ப்பு, வீட்டுத்தோட்டம், மரபுசாரா எரிசக்தி, இயற்கை முறையில் மஞ்சள் சாகுபடி, நாட்டுக்கோழி வளர்ப்பு, ஒருங்கிணைந்த பண்ணையம்... உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் தினம்தோறும் கருத்தரங்குகள் நடைபெற இருக்கின்றன. இதில் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள், அனுபவ விவசாயிகள், கல்வியாளர்கள் கலந்துகொண்டு அனுபவங்களையும் ஆலோசனைகளையும் பகிர்ந்துகொள்ள இருக்கிறார்கள்.

விவசாயத்தைப் போற்றும், நேசிக்கும், இயற்கையை நேசிக்கும் அனைவரும் குடும்பத்துடன் கலந்துக்கொள்ளவேண்டிய நிகழ்ச்சி `அக்ரி எக்ஸ்போ’.