Published:Updated:

உணவு நல்லது வேண்டும்!

உணவு நல்லது வேண்டும்!
பிரீமியம் ஸ்டோரி
உணவு நல்லது வேண்டும்!

உணவு நல்லது வேண்டும்!

உணவு நல்லது வேண்டும்!

உணவு நல்லது வேண்டும்!

Published:Updated:
உணவு நல்லது வேண்டும்!
பிரீமியம் ஸ்டோரி
உணவு நல்லது வேண்டும்!
உணவு நல்லது வேண்டும்!

வெற்றிலை பானகம்

தேவையானவை: வெற்றிலை - 7, காய்ச்சிய பால் -      2 கப், சப்ஜா விதை - அரை டீஸ்பூன், ரோஸ் சிரப் - சிறிதளவு, குல்கந்து - 4 டீஸ்பூன், நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா - தலா 2, நறுக்கிய உலர்ந்த அத்திப்பழம் - 1.

செய்முறை: வெற்றிலையைக் கழுவி, சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு அரைக்க வேண்டும். இதில், பால், குல்கந்து சேர்த்துக் கலக்கி, தண்ணீரில் ஊறவைத்த சப்ஜா விதையைச் சேர்த்து, ரோஸ் சிரப்பை ஊற்றி, நறுக்கிய பாதாம், பிஸ்தா உள்ளிட்டவற்றைச் சேர்த்துக் குளிரவைத்துப் பரிமாறலாம்.

பலன்கள்: வெற்றிலை, வாய் துர்நாற்றத்தைப் போக்கும்; பல் ஈறுகளில் உள்ள நீர் வறட்சியைத் தடுக்கும். சப்ஜா விதையில் அதிக அளவு இரும்புச்சத்து இருப்பதால், ரத்தசோகையைத் தடுக்கும்.

வாய்த்தொற்று இருப்பவர்கள் சாப்பிடலாம். நட்ஸ் வகைகளில் வைட்டமின்கள், தாதுஉப்புக்கள் நிறைவாக உள்ளன. குல்கந்து, உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்; செரிமானத்தை மேம்படுத்தும்.

உணவு நல்லது வேண்டும்!

சோளக் குழிப்பணியாரம்

தேவையானவை: வெள்ளைமணிச் சோளம் - 200 கிராம், உளுந்து, சின்ன வெங்காயம் - தலா 50 கிராம், வெந்தயம் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 4, பெருங்காயத்தூள் -    ஒரு சிட்டிகை, பொடியாக நறுக்கிய தேங்காய், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: சோளம், உளுந்து, வெந்தயம் மூன்றையும் 5 மணி நேரம் ஊறவைத்து அரைக்கவும். இந்த மாவுடன், சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், தேங்காய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். பணியாரக் கல்லை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து, எண்ணெய் தடவி, மாவை ஊற்றவும். இரண்டு புறமும் பொன்னிறமாக வேகவைத்து எடுக்க வேண்டும்.

பலன்கள்: சோளத்தில் கொழுப்புச்சத்து, மாவுச்சத்து, புரதச்சத்து நிறைவாக உள்ளன. வெந்தயம், உளுந்தில் இரும்புச்சத்தும் புரதமும் அதிகம் உள்ளன. அனைத்து வைட்டமினும் நிறைந்துள்ளன. எலும்புக்கு வலு சேர்க்கும். தோல் நோய் உள்ளவர்கள் சோளத்தைத் தவிர்க்க வேண்டும்.

உணவு நல்லது வேண்டும்!
உணவு நல்லது வேண்டும்!

அழகிய கூந்தலுக்கு:

 கூந்தல் வளர புரதமும் வைட்டமின்களும் அவசியம். மீன், கீரைகள், பாதாம், அக்ரூட், சிவப்புக் கொய்யா, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, பச்சை நிறக் காய்கறிகள், முட்டை, சோயா, முழு தானியங்கள், பேரீச்சை, கறிவேப்பிலை, உலர் திராட்சை போன்றவற்றை எடுத்துக்கொள்வது கூந்தல் வளர்ச்சிக்கு உதவும்.