Published:Updated:

உணவு நல்லது வேண்டும்!

உணவு நல்லது வேண்டும்!
பிரீமியம் ஸ்டோரி
உணவு நல்லது வேண்டும்!

உணவு நல்லது வேண்டும்!

உணவு நல்லது வேண்டும்!

உணவு நல்லது வேண்டும்!

Published:Updated:
உணவு நல்லது வேண்டும்!
பிரீமியம் ஸ்டோரி
உணவு நல்லது வேண்டும்!
உணவு நல்லது வேண்டும்!

மசாலா கார்ன்

தேவையானவை: வேகவைத்த சோளம் - 1, உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு, வெங்காயம், தக்காளி, சின்ன குடமிளகாய், பச்சை மிளகாய் - தலா 1, கொத்தமல்லி, எலுமிச்சைச் சாறு - சிறிதளவு.
செய்முறை: வேகவைத்த சோளத்தை நன்றாக உதிர்த்துக்கொள்ளவும். இதனுடன் உப்பு, மிளகுத்தூள், வெங்காயம், குடமிளகாய், பச்சை மிளகாய்த் துண்டு, எலுமிச்சைச் சாறு ஆகியவற்றைச் சேர்த்து, ஒரு பாத்திரத்தில் போட்டு  நன்றாகக் கிளறவும். கடைசியாக, கொத்தமல்லி சேர்த்துப்  பரிமாறவும்.

பலன்கள்: வைட்டமின்  சி, மாவுச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து நிறைந்த உணவு இது. பீட்டாகரோட்டின் இருப்பதால் கண்களுக்கு நல்லது. மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்களுக்கு ஏற்ற உணவு. மாலை வேளையில் மசாலா கார்ன் சாப்பிடுவது நல்லது. சர்க்கரை நோயாளிகள் அளவோடு, சாப்பிட வேண்டும்.

உணவு நல்லது வேண்டும்!

ஹெர்பல் டீ

தேவையானவை: கிராம்பு, ஏலக்காய் - தலா 2, தனியா, மிளகு - தலா அரை டீஸ்பூன், சீரகம், சுக்குப்பொடி  - தலா ஒரு டீஸ்பூன், கருப்பட்டி (அல்லது) வெல்லம் - 5 கிராம்.

செய்முறை: இருப்புச்சட்டியைச் சூடாக்கி, தனியா, மிளகு, சீரகம், கிராம்பு, ஏலம் என ஒவ்வொன்றாகப் போட்டு, ஒரு கிளறு கிளறி எடுக்க வேண்டும். இளம் சூட்டிலேயே மிக்ஸியில் போட்டு (தனியா இரண்டாக உடைந்தால் போதும்) அரைக்க வேண்டும்.

ஒரு டம்ளர் நீரைக் கொதிக்கவைத்து, கருப்பட்டியைத் தட்டிப் போட்டு, நன்கு கொதித்ததும் சுக்குப்பொடி, மூலிகைப்பொடி இரண்டையும் தலா அரை டீஸ்பூன் போட்டு தட்டுப் போட்டு மூடிவிட்டு, அடுப்பை அணைத்துவிடவும்.  ஐந்து நிமிடங்கள் கழித்து, வடிகட்டிச் சூடாக அருந்தலாம்.

குறிப்பு: டீயில் வேறு ஃப்ளேவர் வேண்டும் என நினைத்தால், கொதிக்கும்போது துளசி இலைகளைச் சேர்க்கலாம் அல்லது கால் டீஸ்பூன் டீத்தூள் சேர்க்கலாம்.

பலன்கள்: ஹெர்பல் டீ தும்மல், இருமலைக் குறைக்கும்; கபத்தைப் போக்கும்; குளிர்காலத்தில் ஏற்படும் மந்தத்தன்மையைப் போக்கி, நன்கு பசியெடுக்கச் செய்யும்.

உணவு நல்லது வேண்டும்!
உணவு நல்லது வேண்டும்!

உச்சி முதல் உள்ளங்கள் வரை

நகங்கள் நலம்பெற

நகங்கள் நம் உடலின் ஆரோக்கியத்தைக் காட்டும் கண்ணாடி. நகம் பலவீனமாகி உடைந்தாலே ஆரோக்கிய மின்மையை உணர்த்துகிறது எனப் புரிந்துகொள்ளலாம். ஆரோக்கியமான நகத்துக்கு, முந்திரி, வாழை, முட்டை, ஆரஞ்சு, பாதாம், தோல் நீக்கப்பட்ட இறைச்சி எடுத்துக்கொள்ளலாம்.