Published:Updated:

ஜென் Z - அசத்தும் ஆன்லைன் தியேட்டர்!

ஜென் Z - அசத்தும் ஆன்லைன் தியேட்டர்!
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - அசத்தும் ஆன்லைன் தியேட்டர்!

சிபி

ஜென் Z - அசத்தும் ஆன்லைன் தியேட்டர்!

சிபி

Published:Updated:
ஜென் Z - அசத்தும் ஆன்லைன் தியேட்டர்!
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - அசத்தும் ஆன்லைன் தியேட்டர்!
ஜென் Z - அசத்தும் ஆன்லைன் தியேட்டர்!

1. புதுப்படம் வெளியானால் அதைத் திருட்டுத்தனமாக இணையத்தில் தரவிறக்கம் செய்து, திருட்டு டி.வி.டி-யில் பார்ப்பதைத் தடுக்க வேண்டும்.

ஜென் Z - அசத்தும் ஆன்லைன் தியேட்டர்!2. `காசு கூட வாங்கிக்கோங்க. ஆனால், நான் தியேட்டருக்கு எல்லாம் வர மாட்டேன்ஜி. எப்பேர்ப்பட்ட படமாக இருந்தாலும், அதை கணினியில், டி.வி-யில் டி.வி.டி-யில் அல்லது செல்போனில்தான் பார்ப்பேன்’ என்று அடம்பிடிப்பவர்களுக்கும் படம் காட்ட வேண்டும்.

3. `நான் வெளிநாட்டில் இருக்கேன். இங்கே நான் விரும்பும் என் மொழி படங்கள் வெளியாவது இல்லை. டாரன்டுகளைவிட்டால் வேறு என்ன வழி?’ எனக் கதறும் என்.ஆர்.ஐ-களையும் சமாளிக்க வேண்டும்.

இந்த மூன்று வகை பிரச்னைகளையும் சமாளிக்க, இரண்டு கேரள இளைஞர்கள் கண்டுபிடித்திருக்கும் புதிய பாதைதான் `ரீல்மாங்க்'.

கொச்சினைச் சேர்ந்த விவேக்கும் பிளெய்ஸி எம்.கிரவ்ளியும் நெருங்கிய நண்பர்கள். வார இறுதி வந்துவிட்டால் படங்கள் பார்ப்பதுதான் இவர்களின் பொழுதுபோக்கு. கல்லூரிக் காலம் முடிந்த பிறகு, விவேக் வேலைக்காக மும்பை சென்றுவிட்டார். ஆனால், அங்கே அவருக்கு ஒரு சிக்கல். ‘மும்பையில் மலையாளப் படங்களே ரிலீஸ் ஆக மாட்டேங்குது. படம் பார்க்காம ரொம்ப கஷ்டமா இருக்கு. உலகம் முழுவதும் உள்ள மல்லுவுட் ரசிகர்களும் இப்படித்தான சிரமப்படுவாங்க?’ என கிரவ்ளியிடம் பேச, நண்பனின் சோகத்தைப் போக்க  முடிவெடுத்தார் கிரவ்ளி. அப்படித்தான் உதித்திருக்கிறது `ரீல்மாங்க்’ ஐடியா.

கிரவ்ளி, டெக்னாலஜி கில்லி. அவரே இந்த ரீல்மாங்க் சாஃப்ட்வேரை டெவலப் செய்தார். விவேக், நிதி திரட்டும் முயற்சியில் இறங்கினார். தொடங்கும்போதே பிரமாண்டமாக, மிக பிரமாண்டமாகனு மார்க்கெட்டிங் செய்து 10,000 பேரை `ரீல்மாங்க்’-ல் மெம்பர் ஆக்கினர்.

ஜென் Z - அசத்தும் ஆன்லைன் தியேட்டர்!

மல்லுவுட்டில் ரிலீஸான நான்கு ஹிட் படங்களை மீண்டும் வெளியிட்டு லைம்லைட்டுக்குக் கொண்டுவந்தார்கள். ‘Ottaal’ என்ற மலையாளப் படத்தை முதன்முதலில் தியேட்டரில் ரிலீஸ் ஆகும்போதே ஆன்லைனிலும் ரிலீஸ் செய்துள்ளனர்.

இதில் வரும் படங்களைக் காப்பியடிக்க முடியாதா?

முடியாது. நீங்க இந்தப் படத்தை ரீல்மாங்க் சாஃப்ட்வேர் மூலமாக மட்டும்தான் பார்க்க முடியும். ஒரு படத்தை டவுண்லோடு செய்துவிட்டால், எத்தனை தடவை வேண்டுமானாலும் இந்த சாஃப்ட்வேரிலேயே பார்த்துக்கொள்ளலாம். அது ஐபோன், ஐபேட், லேப்டாப்னு அனைத்திலும் சப்போர்ட் செய்யும். ஆனால், வேறு எதிலும் காப்பி செய்ய முடியாது.

படத்தை இந்த சாஃப்ட்வேரில் ஓடவிட்டு, வேற கேமரா வைத்து படம்பிடித்தால்?

இதுக்கும் வெச்சுட்டாங்க செக் மேட். இந்த சாஃப்ட்வேரில் hidden trackers பயன்படுத்துகிறார்கள். இதன் மூலம் யாராவது படத்தை ஓடவிட்டு ரிக்கார்டு செய்தால், அது எந்த ஐடி, எந்த சிஸ்டம்னு ஏ டு இஸட் அனைத்தையும் அனுப்பிவிடும். அப்படித்தான் ‘Njan Steve Lopez’ என்ற படத்தை ஒரு கும்பல் கேமரா மூலம் படம்பிடித்து ரிக்கார்டு செய்ய, 12 நிமிடங்களில் அந்தக் கும்பலைக் கைது செய்துவிட்டார்கள்.

ஆரம்பத்தில் பெரிய அளவில் இந்த ஐடியாவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால், இப்போது மலையாளிகள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ். குறிப்பாக, வெளிநாடுகளில் பிழைக்கப்போன மலையாளிகள் ஆர்வத்தோடு ரீல்மாங்கில் இணைந்துவிட்டார்கள்.

பைரசி தடுக்கப்படுவது, படத்தை ஹெச்.டி-யில் பார்க்க 300 ரூபாய், நார்மல் பிரின்ட் என்றால் 180 ரூபாய்தான் செலவாகிறது. குற்றவுணர்ச்சி இல்லாமல் படம் பார்க்க முடிகிறது என்பதால், ரீல்மாங்கில் 37 ஆயிரம் பேர் மெம்பர் ஆகிவிட்டார்கள். 2015-ம் ஆண்டில் நான்கு படங்களை மட்டும் ரிலீஸ் செய்தவர்கள், பழைய படம், புது படம் என இதுவரைக்கும் 1,000 சூப்பர் ஹிட் படங்களை ஆன்லைனில் வெளியிட்டுள்ளார்கள்.

அடுத்த ஆண்டுக்குள் 850 மலையாளப் படங்களும், 700 தெலுங்கு, கன்னடப் படங்களும் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள். அடுத்த இலக்கு, `2.5 கோடிப் பேர் ரீல்மாங்க்கைப் பயன்படுத்த வைப்பது’ என்ற மிகப்பெரிய கனவுகளுடன் பயணிக்கிறார்கள் இந்த இளைஞர்கள்.

தமிழுக்கும் வாங்க பாய்ஸ்!