லைஃப்ஸ்டைல்
Published:Updated:

ஜென் Z - நான் நிவாஸ் கே.பிரசன்னா ஆனது எப்படி?

ஜென் Z - நான் நிவாஸ் கே.பிரசன்னா ஆனது எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
News
ஜென் Z - நான் நிவாஸ் கே.பிரசன்னா ஆனது எப்படி?

சிபி

ஜென் Z - நான் நிவாஸ் கே.பிரசன்னா ஆனது எப்படி?

``சின்ன வயசுலேயே ஒரு இலக்கு வைத்து, அதை நோக்கி நேர்மையாகப் பயணம் செய்ததால் என்னவோ, பெரிய தடங்கல்களை, தோல்விகளை இதுவரை நான் சந்திக்கலை. நமக்கான நேரம்

ஜென் Z - நான் நிவாஸ் கே.பிரசன்னா ஆனது எப்படி?

வரும்னு தொடர்ந்து உழைச்சுட்டே இருந்தேன். இந்த உழைப்பு, என்னை வெற்றியை நோக்கி நகர்த்தும்னு நம்புறேன்''

- அடக்கமாகப் பேசுகிறார் இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா. `தெகிடி', `சேதுபதி' படங்கள் மூலம் கவனம் ஈர்த்த தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளர்.

``மதுரையில் பிறந்து திருநெல்வேலியில் வளர்ந்தவன் நான். எங்க அப்பா, வீட்டுல எப்பவும் பாட்டு பாடிட்டே இருப்பார். ரேடியோ, டேப் ரிக்கார்டர்னு ஏதோ ஒண்ணு பாடிக்கிட்டே இருக்கும். ஒருநாள் வடிவேலு மாதிரி `இந்த இசை எங்கு இருந்து வருது?'னு எங்க அப்பாகிட்ட கேட்டிருக்கேன். அவர் `இந்த இசையை உருவாக்குவது இசையமைப்பாளர். அவர்தான் இதுக்கு எல்லாம் க்ரியேட்டர்'னு சொல்ல, உடனே `நானும் இதுபோல இசையை உருவாக்கணும்'னு சொல்லியிருக்கேன். நான் அப்ப விளையாட்டுக்குக்கூட சொல்லியிருக்கலாம். ஆனா, அதை அப்பா ரொம்பக் கவனமா எடுத்துக்கிட்டு ஒண்ணாம் வகுப்பு படிக்கும்போதே பியானோ க்ளாஸ் சேர்த்துவிட்டார். அங்கு இருந்து ஆரம்பிச்சதுதான் என் இசைப் பயணம்.

ஸ்கூல் கல்ச்சுரல்ஸ் வந்தால், நான்தான் ஹீரோ. பியானோ வாசிச்சுக் கலக்குவேன்; நல்லா பாட்டும் பாடுவேன். புதுப்புது ட்யூன்கள் நிறையப் பிடிச்சு, கம்போஸ் பண்ணுவேன். நல்லா வந்தால் பிறருக்கும் போட்டுக் காண்பிப்பேன்... பாராட்டுவாங்க. இந்தச் சின்னச் சின்னப் பாராட்டுக்களால் பள்ளியில் பேனாவைப் பிடித்த நேரத்தைவிட, பியானோவைப் பிடித்த நேரம்தான் அதிகம். இதை அம்மா புரிஞ்சுக்கிட்டாங்க. ஸ்கூல் முடிச்சேன். அடுத்தகட்ட வளர்ச்சிக்கு சென்னைதான் சரியா இருக்கும்னு, ஒட்டுமொத்தக் குடும்பமும் எனக்காக சென்னை வந்துட்டாங்க.

ஜென் Z - நான் நிவாஸ் கே.பிரசன்னா ஆனது எப்படி?

2007-ம் ஆண்டு, ஒரு தனியார் காலேஜ்ல விஸ்காம் சேர்ந்தேன். இங்கேயும் நோட்புக்கை கையில் எடுக்காம, வித்தியாசமா டெலிபோன் டைரக்டரியை எடுத்தேன். சென்னையில எனக்கு யாரையும் தெரியாது. எனக்கு சிபாரிசு பண்ற அளவுக்கு நான் ஒண்ணும் பெரிய ஆள் இல்லை. அதனால் டெலிபோன் டைரக்டரியில் யார் நம்பரையாவது பிடிச்சு வாய்ப்பு தேடலாம் என்பதுதான் ஐடியா. அப்படியே பக்கங்களைப் புரட்டிப் பார்த்துட்டு இருக்கும்போது வீணை ராஜேஷ்வைத்யா சார் நம்பர் இருந்தது. அவருக்கு உடனே போன் போட்டு, `உங்க முன்னாடி பியானோ வாசிச்சுக் காட்டணும் சார்'னு சொன்னேன். நேர்ல வரச் சொன்னார். `தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசுல...'னு வாசிச்சேன். பாராட்டினார். அவர்கூட வாசிக்க சில புரோகிராமுக்கு அழைச்சுட்டுப் போனார். நல்ல பேர் வாங்கினேன். நிறைய லைவ் ஸ்டேஜ்ல பெர்ஃபாம் பண்ணியதால், ஆடியன்ஸ் பல்ஸ் ரியாக்‌ஷன் தெரியும். எந்த இடத்துல கைதட்டுறாங்க, மனசு உருகுறாங்கனு புரிஞ்சுக்க முடிந்தது. என்னாலும் நல்ல இசையைத் தர முடியும்னு நம்பினேன். அப்பதான் பாடகி சைந்தவிகூட சேர்ந்து பாரதியார் பாடல்களை வைத்து கிளாசிக் மியூஸிக்ல `கண்ணம்மா'னு ஒரு ஆல்பம் பண்ணினோம்.

ஜென் Z - நான் நிவாஸ் கே.பிரசன்னா ஆனது எப்படி?

என் மனசுக்கு ரொம்ப நெருக்கமான ஆல்பம் அது. இந்த ஆல்பத்துக்காக `திங்க் மியூஸிக்ல மேனேஜர் சந்தோஷ் சாரைப் பாருங்க'னு ஒரு நண்பர் அனுப்பினார். அங்கே போனால் `நீ படத்துக்கு மியூஸிக் பண்ணுவியா?'னு கேட்டவர் சி.வி.குமார் சார்கிட்ட அறிமுகப்படுத்தினார். `தெகிடி' படத்துல வாய்ப்பு கிடைத்தது. `விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்...' பாட்டு ஹிட். ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அடுத்து `சேதுபதி' படத்தின் மூலமா பளிச்னு ஒரு அடையாளம் கிடைத்தது. அந்தப் படத்துல எல்லா பாடல்களையுமே இசை ரசிகர்கள் ஹிட்டாக்கினாங்க. இப்ப `கூட்டத்தில் ஒருவன்' படத்துக்கு மியூஸிக் பண்ணிட்டிருக்கேன். கிளாசிக்கல், ஜாஸ், ராக், குத்துனு எல்லா வெரைட்டி யிலும் ட்யூன் போட்டு அசத்தணும். நிச்சயம் என்னால் முடியும்கிற நம்பிக்கை இருக்கு ப்ரோ'' - பியானோவில் இருந்து இசையை மீட்டுகிறார் நிவாஸ் கே.பிரசன்னா.

``அதிகமா பியானோவில் வாசித்த பாடல்?''

`` `தென்றல் வந்து தீண்டும்போது...'

``இன்ஸ்பிரேஷன்?''

``எம்.எஸ்.தோனி, ஸ்டீவ் ஜாப்ஸ், இளையராஜா, மைக்கேல் ஜாக்சன்...'’

``பிடித்த பாடகர் - பாடகி?''

``எஸ்.பி.பி. - சித்ரா.''

``பொழுதுபோக்கு?''


``கிரிக்கெட் விளையாடுவது.''