Published:Updated:

ஜென் Z - அதிர்ச்சியா... ஆச்சர்யமா?

ஜென் Z - அதிர்ச்சியா... ஆச்சர்யமா?
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - அதிர்ச்சியா... ஆச்சர்யமா?

ஞா.சுதாகர்

ஜென் Z - அதிர்ச்சியா... ஆச்சர்யமா?

ஞா.சுதாகர்

Published:Updated:
ஜென் Z - அதிர்ச்சியா... ஆச்சர்யமா?
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - அதிர்ச்சியா... ஆச்சர்யமா?
ஜென் Z - அதிர்ச்சியா... ஆச்சர்யமா?

செப்டம்பர் 7-ம் தேதி இரவுதான் இந்திய ஆப்பிள் ரசிகர்களுக்கு சிவராத்திரி. ஐபோன்-7 மற்றும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ்-2 ஆகிய இரண்டையும் முதன்முதலாக அன்றுதான் அறிமுகப்படுத்தியது

ஜென் Z - அதிர்ச்சியா... ஆச்சர்யமா?

ஆப்பிள்.

`இதுதான் இதுவரையில் வந்ததில் சிறந்த ஐபோன்' - இந்த டெம்ப்ளேட் வசனத்தை ஆப்பிள் மாற்றாவிட்டாலும், ஐபோன்-7ல் பளிச்சிடுகின்றன நிறைய மாற்றங்கள். போன் என்பது தற்போது கேமிங், மியூஸிக், வீடியோ... என மல்ட்டிமீடியா விஷயங்களுக்கே அதிகம் பயன்படும் நிலையில், அதற்கு ஏற்றபடி மாற்றங்களைச் செய்திருக்கிறது ஆப்பிள்.

ஐபோன் வரிசையில் இந்த முறை `7’ மற்றும் `7 ப்ளஸ்’ என இரண்டு மாடல்கள்தான். 7 மெகா பிக்ஸல் முன்பக்க கேமரா மற்றும் 12 எம்.பி பின்பக்க கேமராவோடு டூயல் லென்ஸ் என்பது இதன் முதல் அட்ராக்‌ஷன். இரண்டு லென்ஸ் என்பதால் முந்தைய ஐபோன்களைவிடவும், போட்டோக்கள் துல்லியமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். முந்தைய மாடல்களைப் போலவே, 4.7 இன்ச் மற்றும் 5.5 இன்ச் டிஸ்ப்ளே சைஸ் இவற்றிலும் தொடர்கிறது. முந்தைய ஐபோன்-6 மாடலைவிடவும், 7 ப்ளஸ் மாடலில் 2 மணி நேரம் அதிகமான பேட்டரி திறன், 50 சதவிகிதத் திறன்மிக்க ஃப்ளாஷ், 25 சதவிகிதக் கூடுதல் ப்ரைட்நெஸ் டிஸ்ப்ளே, 40 சதவிகித வேகமான புராசஸர் என, தனது முந்தைய சில ரெக்கார்டுகளை முறியடித்திருக்கிறது ஆப்பிள்.

ஜென் Z - அதிர்ச்சியா... ஆச்சர்யமா?

முதல்முறையாக A10 புராசஸர் இதில் பொருத்தப்பட்டுள்ளது. எனவே, ஐபோன் வேகத்தில் எந்தக் குறையும் இருக்காது என்றே தெரிகிறது. 3.5MM ஆடியோ ஜாக் நீக்கம்தான், ஐபோன் 7-ன்  முக்கியப் பேசுபொருள் ஆகியிருக்கிறது. 100 வருடங்களுக்கும் மேலாக பாட்டு கேட்பதற்காக இருந்த இயர்போன் போர்ட்டைத் தூக்கிக் கடாசியதில், ஏகத்துக்கும் கிளம்பியுள்ளது எதிர்ப்பு. இதற்குப் பதிலாக ஆப்பிள் `AirPods'-ஐ `இவருக்குப் பதில் இவர்’ எனப் புதிதாகக் களம் இறக்கியுள்ளது. அதாவது ஐபோனில் பாடல் கேட்க வேண்டும் என்றால், இனி சாதாரண இயர்போனைப் பயன்படுத்த முடியாது.  `வொயர்லஸ் டெக்னாலஜிதான் இனி வருங்காலம் என்பதால், இந்தத் துணிச்சலான முடிவை எடுத்திருக் கிறோம்' என்கிறது ஆப்பிள்.

 ஐபோன்-7, வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் எனவும் அறிவித்திருக் கிறது ஆப்பிள். ஆனால் கவனம், இது வாட்டர் புரூஃப் அல்ல.

இந்த முறை ஆப்பிள் பல சர்ப்ரைஸ்களைத் தந்திருக்க வேண்டும். ஆனால், சில திருப்திகள் மட்டுமே இருக்கின்றன.

இந்தியாவின் தீபாவளி பட்ஜெட்டை டார்கெட் செய்து, அக்டோபர் 7-ம் தேதி விற்பனைக்கு வருகிறது ஐபோன்-7. இந்த ஆப்பிளின் ஆட்டம் 50 ஆயிரம் ரூபாயில் இருந்து ஆரம்பிக்கும்!