Published:Updated:

ஜென் Z - “அஷ்வின் ஒரு கிராமமாமே!”

ஜென் Z - “அஷ்வின் ஒரு கிராமமாமே!”
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - “அஷ்வின் ஒரு கிராமமாமே!”

கே, படங்கள்: பெ.கெசன்ட்ரா இவாஞ்சலின் , ஓவியம்: ஜி.ராமமூர்த்தி

ஜென் Z - “அஷ்வின் ஒரு கிராமமாமே!”

கே, படங்கள்: பெ.கெசன்ட்ரா இவாஞ்சலின் , ஓவியம்: ஜி.ராமமூர்த்தி

Published:Updated:
ஜென் Z - “அஷ்வின் ஒரு கிராமமாமே!”
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - “அஷ்வின் ஒரு கிராமமாமே!”
ஜென் Z - “அஷ்வின் ஒரு கிராமமாமே!”

கிரவுண்டுக்குள் வரும்போது பேட்டுடன் உற்சாகத்தையும் கொண்டுவருபவர் கிரிக்கெட் கில்லி கிறிஸ் கெயில். கிரிக்கெட் பார்க்கும் எல்லா நாடுகளிலும் ரசிகர் படை வைத்திருக்கும் அகில உலக

ஜென் Z - “அஷ்வின் ஒரு கிராமமாமே!”

செல்லப்பிள்ளை சென்னைக்கு வந்திருக்கிறார் என்றால், சும்மா விட முடியுமா?

“உங்க சிக்ஸர் அளவுக்கு எல்லாம் நீநீநீநீநீளமான பேட்டி இல்லை பாஸ், இது டி-ட்வென்டி பேட்டிதான்” என்றதும், கேள்விப் பந்துகளை எதிர்கொள்ளத் தயாரானார்.

``வெஸ்ட் இண்டீஸ் டீம் ஆண்கள், பெண்கள்னு ரெண்டுலயும் கலக்குதே என்ன ரகசியம்?''

``கிட்டவாங்க சொல்றேன்... ஆண்கள் அணியைப் பொறுத்தவரை அதில் கிறிஸ் கெயில்னு ஒரு பையன் இருக்கான். அவன் எல்லாத்தையும் பார்த்துப்பான். (சிரிக்கிறார்). பெண்கள் அணியிலயும் அப்படி சிலர் இருக்காங்க. கிரிக்கெட், எங்க நாட்டுக்கு இயற்கையிலே நெருக்கமான ஒரு விளையாட்டு. குறிப்பா, டி20 எங்க குணத்துக்கு ரொம்பவே செட் ஆகுது. அதனால இருக்கலாம்.''

``வெஸ்ட் இண்டீஸ், டி20-யில உலக சாம்பியன். ஆனால், டெஸ்ட் போட்டிகளில் சொதப்புறாங்களே?''

``வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியில் நிறையக் குழப்பங்கள் இருக்கு; பல சமயம் வீழ்ந்து எழுந்திருக்கு. இப்பவும் அப்படி ஒரு தருணம்தான். ஷார்ட் ஃபார்மட்ல அந்த மாற்றம் நடந்தது. டெஸ்ட் போட்டிகளிலும் அது தெரிய கொஞ்சம் நாட்கள் ஆகும். நிறைய இளம் வீரர்கள் வந்து நல்லா விளையாட ஆரம்பிச்சிருக்காங்க. அவங்க எக்ஸ்பீரியன்ஸ் ஆகி, டெஸ்ட்டிலும் கலக்குவாங்க... கொஞ்சம் வெயிட்பண்ணுங்க.''

ஜென் Z - “அஷ்வின் ஒரு கிராமமாமே!”

``அமெரிக்காவில் டி20 போட்டி. எப்படி இருந்தது?''

``செம ஜாலி. நல்ல கூட்டம். கிரிக்கெட்டை உலக அளவில் மார்க்கெட் செய்ய நல்ல வாய்ப்பு. அடுத்து, `மினி ஐ.பி.எல் அங்கே நடக்கலாம்' என்கிறார்கள். எங்கே நடந்தாலும் ஐ.பி.எல் பெரிய விஷயம். அமெரிக்காவில் நடந்தால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்.''

``டி20 லீக் மூலம் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் அதே சமயம், அவர்கள் கரியரின் ஆரம்ப நிலையிலேயே அதிக பிரஷரைச் சந்திக்கிறார்கள். அதைச் சமாளிக்க அவர்கள் தயாராகக்கூட இல்லையே...''

``நான் சொன்ன மாதிரி கிரிக்கெட் நிறைய மாறியிருக்கு; நிறையப் போட்டிகள் இருக்கு. இப்ப யார் சேலஞ்சையும் பிரஷரையும் சமாளிக்கிறாங்களோ, அவங்கதான் ஸ்டார். அந்தந்த டீம்தான் வீரர்களைப் பார்த்துக்கணும்; அவங்களைத் தயார்பண்ணணும். அதைச் செய்ற டீம் நல்லா வரும்.''

``இந்த வருஷம் ஐ.பி.எல் போட்டிகளில் நீங்க ப்ளேயிங் லெவனில் இல்லை. அப்போது என்ன நினைத்தீர்கள்?''

``எனக்கு குழந்தை பிறந்ததால், ஊருக்குப் போகவேண்டி இருந்தது. அந்த கேப்ல கே.எல்.ராகுல் இறங்கி செமயா ஆடினார். அதனால நான் விளையாடலை. அதுல எனக்கு எந்தக் கவலையும் இல்லை. நான் ஒரு டீம் ப்ளேயர். ராகுல் ஆடுறதை ஜாலியா பார்த்துக்கிட்டு ஜூஸ் குடிச்சுட்டிருந்தேன். ராகுல், செம ப்ளேயர். அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கு.''

ஜென் Z - “அஷ்வின் ஒரு கிராமமாமே!”

``உங்க சுயசரிதை `சிக்ஸ் மெஷின்'க்கு வரவேற்பு எப்படி இருக்கு?''

``ரொம்ப நல்லா இருக்கு. உலகம் முழுக்கவே நல்ல ரிசல்ட். பாசிட்டிவ் விமர்சனம்தான். ஜமைக்கா ஸ்லாங்குல அங்கங்க கொஞ்சம் எழுதியிருக்கேன். அது நல்லாருக்குனு சொன்னாங்க. நீங்களும் படிச்சுட்டுச் சொல்லுங்க. நிறைய விஷயங்களை அதில் ஷேர் பண்ணியிருக்கேன்.''

``தமிழ்நாடு பிரீமியர் லீக் மேட்சஸ் பார்த்தீங்களா?''

``டி.என்.பி.எல்-ல சர்வதேச வீரர்கள் விளையாடக் கூடாதுனு ரூல்ஸ் இருக்காம். இல்லைன்னா, இறங்கி நாலு சிக்ஸர் அடிச்சிருக்கலாம். அஷ்வின் ஊரு பக்கத்துல ஏதோ ஒரு கிராமமாமே. (என்னாது... கிராமமா?) அவர் விளையாடுவார். இளம் வீரர்களுக்கு நல்ல வாய்ப்பு. இதுதானே முதல் வருஷம். போகப்போகத்தான் கேம் இம்ப்ரூவ் ஆகும்.’’