Published:Updated:

ஜென் Z - நினைச்சது எல்லாம் நிஜமில்லையா கோப்பால்...

ஜென் Z - நினைச்சது எல்லாம் நிஜமில்லையா கோப்பால்...
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - நினைச்சது எல்லாம் நிஜமில்லையா கோப்பால்...

நித்திஷ்

ஜென் Z - நினைச்சது எல்லாம் நிஜமில்லையா கோப்பால்...

நித்திஷ்

Published:Updated:
ஜென் Z - நினைச்சது எல்லாம் நிஜமில்லையா கோப்பால்...
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - நினைச்சது எல்லாம் நிஜமில்லையா கோப்பால்...
ஜென் Z - நினைச்சது எல்லாம் நிஜமில்லையா கோப்பால்...

காலேஜ் வாழ்க்கை - வெளியில் இருந்து கற்பனை செய்துபார்க்க ஷங்கர் இயக்கும் படங்கள்போல கலர்ஃபுல் `ரண்டக்க ரண்டக்க...'வாக இருக்கும். ஆனால், நிஜம் என்னவோ `காதல்' படம் போலத்தான்.

ஜென் Z - நினைச்சது எல்லாம் நிஜமில்லையா கோப்பால்...

`நாம நினைச்சது எல்லாம் நிஜம் இல்லையா கோப்பால்..?' எனத் தலையில் அடித்துக்கொண்டு `ஞேஞேஞே...' எனத் திரியவேண்டியதுதான். இப்படியான எக்ஸ்பெக்டேஷன் - ரியாலிட்டி பட்டியலில் தவறாமல் இடம்பிடிக்கும் விஷயங்கள் இவை.

இளசுகள் - எக்ஸ்பெக்டேஷன்:

எந்த டிரெஸ் போட்டாலும் அழகாகத் தெரியும் கண்மணிகள் கேம்பஸ் முழுவதிலும் இருப்பார்கள். மின்னற்பொழுதில் காதலில் விழவைக்கும் கனவுக்கன்னிகள்சூழ் உலகமாக டிபார்ட்மென்ட் வராண்டா இருக்கும். ஸ்மைலீக்கள் உயிர்பெற்று அந்தத் தேவதைகளின் முகத்தில் குடியிருக்கும். முரட்டு ஆர்ம்ஸும் கள்ளச் சிரிப்புமாக, காளைகள் திரிவார்கள். ட்யூக், ராயல் என்ஃபீல்ட், சி.பி.ஆர் போன்ற பைக்குகள் கைபடக் காத்திருக்கும். எங்கெங்கு காணினும் ஜெஸ்ஸிக்களும் கார்த்திக்களுமாக - திவ்யம்.

ரியாலிட்டி: சர்க்கரைப் பொங்கலும் வடகறியுமான முரட்டு கான்ட்ராஸ்ட்டில் டிரெஸ் போட்டுச் சுற்றுவார்கள், கற்பனையில் நாம் கண்ட தேவதைகள். வாரி வாரங்கள் ஆன முடி, அரைகுறை மேக்கப் என அவசரகதியில் மீட்புப்பணிகள் நடந்த முகம், நம் நெஞ்சில் அறையும். ஆரஞ்சு நிறச் சட்டை, கிரஹாம்பெல் காலத்திலேயே எக்ஸ்பைரி ஆகிப்போன பெல்பாட்டம் பேன்ட், ஸ்போர்ட்ஸ் ஷூ, தூங்கி வழியும் மூஞ்சி என, காங்கேயம் காளைகள் செம்மறி ஆடுகளாக மாறியிருப்பார்கள். ஆனால், அது என்ன மிராக்கிளோ, சொல்லிவைத்ததுபோல காலேஜில் அருக்காணிகளாக இருந்த பெண்கள் எல்லாம் வேலைக்குப் போன பிறகு ஏமி ஜாக்சன் ஆகிவிடுகிறார்கள். பையன்கள் முகத்தில் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்காக தாடி மட்டுமே முளைத்திருக்கும்.

பேராசிரியர்கள் - எக்ஸ்பெக்டேஷன்:

`உனக்குப் பிடிச்சதைப் பண்ணு, வாழ்க்கை வாழ்வதற்கே' என க்ளாஸுக்கு ஒரு `சமுத்திரக்கனி' லெக்சரர் இருப்பார். தோள் மேல் கை போட்டு, `சரக்கு அடிக்கிறது தப்புனு சொல்லலை. அடிக்கடி அடிக்கிறதுதான் தப்புனு சொல்றேன்' என நடமாடும் போதிமரமாகப் பாடம் எடுப்பார்கள். `பொண்ணுங்ககூடப் பழகுங்கடா' என லவ் குருவாகப் பரிணமிப்பார்கள். `கட் அடிச்சுட்டுப் போங்கடா, புராக்ஸிகூட வேண்டாம். நானே அட்டெண்டன்ஸ் போட்டுடுறேன்' என நம் அடிவயிற்றில் ஆவின் வார்ப்பார்கள்.

ரியாலிட்டி: உன் ரேஞ்சுக்கு சமுத்திரக்கனி எல்லாம் கிடையாது, வைரஸ் சத்யராஜ்தான் என முதல் நாளே பல் இளிக்கும் விதி. வயிற்றுக்கடுப்பும் மூலமும் ஒரே நேரத்தில் வந்ததுபோல கடுகடுவெனச் சுற்றுவார்கள். பல் தெரிய சிரித்தால் அட்வான்டேஜ் எடுத்துக்கொள்வார்களாம். முதல் பெஞ்ச்சை பாண்டவர்களாகவும், கடைசி பெஞ்ச்சை கெளரவர்களாகவும் ட்ரீட் செய்வார்கள். `இன்டர்னல் மார்க் நான்தான் தெரியும்ல' என அடிக்கடி வயிற்றுப்போக்கு வரவைப்பார்கள்.

டிரஸ் கோட் - எக்ஸ்பெக்டேஷன்:

சிம்போஸியம், கல்ச்சுரல் போன்ற விழாக்களில் ஸ்டார் அட்ராக்‌ஷனாக நம் க்ளாஸ்தான் இருக்கும். ஒரே நிறத்தில் சட்டை - வேஷ்டி கட்டி மிடுக்காகத் திரிவார்கள் மைனர்கள். புடவையில் மின்னும் ஏஞ்சல்கள் வரிசையாக நின்று எல்லோரையும் வரவேற்பார்கள். செல்லச் சீண்டல்கள், சின்னச் சின்ன விவாதங்கள் என சுந்தர் சி. செட்போல ஏரியாவே கலகலவென இருக்கும். இறுதியாக அந்த ஆண்டின் சிறந்த செக்‌ஷன் என நம் க்ளாஸுக்குக் கேடயம் பார்சலாகும்.

ரியாலிட்டி:
ஒரே நிறத்தில் டிரெஸ் என்பது வரை கச்சிதமாக நிறைவேற்றிவிடுவார்கள். ஆனால், `கெத்து’தான் துபாய் பக்கம் போயிருக்கும். மொத்தமாக நின்றால், `தம்பி கொஞ்சம் பாயசம் ஊத்து' என சப்ளையர்களாக நினைக்கவும் வாய்ப்பு உண்டு. மகளிர் அணியில் பாதிப்பேருக்கு சேலை கட்டவே தெரியாது என்பதால், ஒரு மாதிரியாகச் சுற்றியிருப்பார்கள். குவியலாகப் பார்க்க பாட்டியின் சுருக்குப்பைபோலவே இருப்பார்கள். இந்தக் கடுப்புகளைத் தாண்டி கடலைபோட முயன்றாலும் கெடுபிடி காட்டித் தடுப்பார்கள் பிரமாண்ட லெக்சரர்கள்.

கேன்ட்டீன், மெஸ் - எஸ்பெக்டேஷன்:

சமையல் மாஸ்டர், செஃப் தாமுவையும் வெங்கடேஷ் பட்டையும் சேர்த்து செய்த காக்டெய்லாக இருப்பார். சோறுவைக்க அவர் பாத்திரம் கழுவும்போதே இங்கே நமக்குப் பசியெடுக்கும். இத்தாலியன், மெக்ஸிகன் என சர்வதேச மெனுகூட சர்வசாதாரணமாகக் கிடைக்கும். `சுள்ளான்' தனுஷ் சைஸில் உள்ளே நுழைந்தவர்கள், நான்கே ஆண்டுகளில் `ஐ' லிங்கேசன் மாதிரி கட்டுமஸ்தான கட்டுமரம் ஆகியிருப்பார்கள்.

ரியாலிட்டி: சமையல் மாஸ்டருக்கு முடி நிறைய உதிரும் என்பதை நம் தட்டை வைத்தே தெரிந்துகொள்ள முடியும். விலகி ஒதுக்கிய உப்புமாவை வாரத்துக்கு நான்கு நாட்கள் போடுவார்கள். ஆறிப்போன உணவை தட்டில் இருந்து பிரித்தெடுத்து வாயில் போடுவதற்கே அதிக எனர்ஜி செலவாகும். அவரவரின் லக்கை பொறுத்து ஈ, விட்டில், கரப்பான் என நான் வெஜ் அயிட்டங்கள் கிடைக்கும். பால் பச்சத்தண்ணீராகவும், டீ புளிச்சத்தண்ணீராகவும் நாக்கில் நடனம் ஆடும்.