Published:Updated:

ஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 7

ஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 7
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 7

டாக்டர். ஆர்.கார்த்திகேயன், ஓவியம்: காமேடி

ஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 7

டாக்டர். ஆர்.கார்த்திகேயன், ஓவியம்: காமேடி

Published:Updated:
ஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 7
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 7
ஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 7

 #உடல்மொழி

நமக்கு பென்ச்மார்க்ஸ் தொலைவில் இருப்பது இல்லை. உடன் பிறந்தவர்கள், உடன் படிப்பவர்கள்,

ஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 7

உடன் பணிபுரிபவர்கள் மற்றும் உற்றத் தோழர்கள் இவர்களின் உயரத்தைவைத்துதான், நாம் நம்மை அளந்துகொள்கிறோம். வாழ்வின் பல முக்கிய முடிவுகளை எடுப்பது இவர்களைப் பார்த்துதான்.

இதெல்லாம் சிறுவயதில், பெற்றோர் ஆரம்பித்து வைத்ததுதான். `அவன் பண்றான்... உன்னால் முடியாதா?’ பிறகு, முடியாத காலத்தில் பெற்றோர் ஜகா வாங்குவார்கள். `அவன் பண்றது எல்லாம் நம்மால் முடியுமா?’. ஆனால், ஒப்பீடுசெய்வது என்பது நமக்கு நன்கு பதிவாகிவிட்டது.

ஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 7

காரணம், நாம் கற்றவை எல்லாம் பிறர் சொல்வதைக் கேட்டு அல்ல; பிறரைப் பார்த்து. இதை `vicarious learning' என்பார்கள். அப்பா சவரம்செய்யும் பாவனை, ஆசிரியரின் அதே வார்த்தைகள், பாஸின் உடல்மொழி என எல்லாவற்றையும் பார்த்து காப்பி அடித்துதான் உலகத்தைக் கற்கிறோம்.

`எங்கள் கேங்கில் எனக்கு மட்டும் கேர்ள்ஃப்ரெண்ட் இல்லை’ என்பதில் ஆரம்பித்து, எல்லா விஷயங் களிலும் தன் தோழமைகள்தான் நம் ரெஃபரன்ஸ் பாயின்ட். முடி திருத்துதல், டாட்டூ, டேட்டிங், செக்ஸ், வேலைத் தேர்வு, வெளிநாடு வாழ் ஆசை, கார், வீடு, ஹனிமூன் சாய்ஸ், குழந்தை, முதலீடு மற்றும் பெற்றோரைப் பராமரித்தல் வரை பலவற்றை முடிவுசெய்வது, நம் பியர் குரூப்தான்.
`என் பையனுக்கு ஃப்ரெண்ட்ஸே கிடையாது. எல்லாம் நாங்கதான். லவ் புரப்போஸ் பண்ணக்கூட எங்ககிட்டதான் ஐடியா கேட்பான். என் தங்கை பையன், இவனுக்கு நேர் எதிர். இவன் மட்டும் ஏன் இப்படி இருக்கான்?’ என்று கேட்ட அம்மாவுக்கு என்ன பிரச்னை?

`பியர் குரூப் பிரஷர்’தான்!

 #நண்பர்கள்

உயர்கல்வி ஆலோசனையில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், ஆலோசகர்கள் என அனைவரையும்விட மிகவும் சக்திமிக்கவர்கள் நண்பர்கள்தான்.

`EEE-க்குதான்பா செம ஃப்யூச்சர். வினோத்தே சொல்லிட்டான்!”

வினோத் அரியர்ஸ் முடித்து EEE-க்கு கூடவருவானா என்றால், சந்தேகம்தான்!

`பி.காம் கிடைக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன். வரலாறு எல்லாம் படிக்க முடியாது’ என்று 80-களில் அடம்பிடித்த நண்பனின் தங்கை, இன்று அசாமில் டீம் டூரிஸம் செய்து ஜமாய்க்கிறார்.

`ஒவ்வொருத்தருக்கும் நிறையத் திறமைகள் இருக்கு. நம் குழந்தைகளுக்கு, நம் வாழ்வில் ஏதாவது ஒண்ணுதான் வரும். அதை மட்டும்தான் பண்ண முடியும்னு தப்பா சொல்லிக்கொடுக்கிறோம் நம்ம குழந்தைகளுக்கு’ என்றார்.

 #விளம்பரம்

இந்தியாவின் விளம்பர உலக ஜாம்பவான் பியூஷ் பாண்டேவின் கனவு, இந்திய கிரிக்கெட் அணியில் சேர்வது. ராஜஸ்தான் அணிக்காக ரஞ்சி கோப்பை வரை விளையாடியும் கனவு பலிக்க வில்லை. உடன் விளையாடிய அருண்லால், வெங்சர்க்கார் எல்லாம் பெரிய அளவில் போய்விட்ட நிலையில், விளம்பர கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார். கிரிக்கெட்டை நேசித்ததுபோல விளம்பர உலகையும் நேசித்தார். உங்களுக்குப் பிடித்த டாப் 10 தொலைக்காட்சி விளம்பரங்கள் என வரிசைப்படுத்தினால், பியூஷின் பங்கு அதில் ஏழிலாவது இருக்கும்.

என் ஃபேவரிட், வோடோபோன் ஜுஜு விளம்பரங்கள்.

20-20 கிரிக்கெட்கூட இவரின் கண்டுபிடிப்புதானாம். எப்படி அந்த ஐடியா, பல தலைகள், கைகள் என்பதை அறிய, `Pandeymonium' என்ற அவரின் புத்தகம் படியுங்கள்.

கிரிக்கெட்டின் 20-20, பக்கா கமர்ஷியல் சினிமாவுக்கான களம். லலித்மோடி கதையை எப்படி பாலிவுட் காரர்கள் விட்டுவைத்தார்கள்? நிஜக் கதை எடுக்கலாம் வெங்கட் பிரபு. லோக்கல் கிரிக்கெட்டை விட்டுவிட்டு, இன்டர் நேஷனல் கிரிக்கெட்டையும் லோக்கல் மாஃபியாவையும் கலந்து படம் எடுத்தால் எப்படி இருக்கும்?

`மங்காத்தா - 28’

 #டாக்டர்_கண்ணாடி

`உளவியல்ரீதியா பார்த்தா...’ என்று பேசும் சினிமா சைக்கியாட்ரிஸ்ட்டுகள் பெரும்பாலும் தாடி வைத்திருப்பார்கள். விஞ்ஞானிகள் என்றாலும் தாடி உண்டு. டாக்டர்கள் கண்ணாடி போட்டிருப்பார்கள். மாஃபியா டான் என்றால், மசாஜ் எடுத்துக் கொண்டிருப் பான். அதேபோல ஹீரோ போலீஸ் என்றால், சதா முறுக்கிய புஜத்துடனே திரிய வேண்டியிருக்கும். கதாநாயகி மென்மை யானவள் என்றால், ஸ்கூல் டீச்சர்தான்.

சமூகவியலில் இவற்றை `சோஷியல் ஸ்டீரியோடைப்’ என்பார்கள். நிஜத்தில் போலீஸ்காரர் குழைவாய் கவிதை வாசிக்கலாம். டீச்சர் மசாஜ் எடுக்கலாம். டாக்டர்கள் ஃப்ரீக்கி-யாக இருக்கலாம்.

நர்ஸ் என்றாலும் டீச்சர் என்றாலும் உடனே பெண் முகம்தான் மனதில் தோன்றும். இப்படி ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு பிம்பம் உண்டு. நம் மனம் இந்தப் பிம்பங்களின் அடிமை எனச் சொல்லலாம்.
வெறும் அபிப்பிராயம்தானே, அதெல்லாம் நிஜமாகிவிடுமா?

 #அபிப்பிராயங்கள்

சமூக உளவியலில் அதுதான் உண்மை. Perceptions are real. `நல்ல சோப்’ என்று அபிப்பிராயம் கொண்டதை வாங்குவோம். `துடிப்பான பையன்’ எனத் தோன்றினால், வேலை தருவோம். `பெண் குடும்பம் கௌரவமானது’ என வரன் முடிப்போம். `பெரிய பில்டர்’ என அதிக விலை கொடுத்து வீடு வாங்குவோம். இப்படி எல்லாமே எண்ணங்களும் அபிப்பிராயங்களும்தான்.
டேனியல் கானேமேன் என்கிற பொருளாதார அறிஞர், முதலீட்டாளர் நடத்தை பற்றி ஆராய்ந்தார். `தர்க்கச் சிந்தனையைவிட உணர்வுகள்தான் நம்மை முடிவுகள் எடுக்கவைக்கின்றன' என்றார். இவருக்கு நோபல் பரிசு (உளவியலுக்காகக்) கிடைத்தது.

ஆனால், மனம் ஒரு தில்லாலங்கடி வேலைசெய்யும். உணர்வுரீதியாக எடுத்த முடிவை தர்க்கரீதியாக எடுத்ததுபோல வெளியில் பேசவைக்கும்.

`அவ ஃபேமிலி நல்ல டைப். நல்ல கம்பெனியில வேலை. அக்காவும் ரொம்ப சப்போர்ட். அவங்க ஊரும் நம்ம ஊருக்குப் பக்கம். பொண்ணு ஓ.கே’ என்றால் என்ன அர்த்தம்? `பெண்ணைப் பிடிச்சிருக்கு’. அதனால் மற்ற தோதான விஷயங்களைச் சேர்த்துச்சொல்லும் நம் மனசு!

 #குணம்

சரி... அப்பர்செப்ஷன் (Apperception) பற்றி சொல்கிறேன் என சென்ற வாரம் எழுதியிருந்தேன். தன் அபிப்பிராயங்களை, பொது அபிப்பிராயங்களாகச் சொல்லும் குணம் அது.

இதனால்தான் ஒரே விஷயத்தைப் பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்து சொல்கிறார்கள். `உலகம் எப்படி?' எனக் கேட்டதற்கு தர்மன், ‘எல்லாம் உத்தமம்’ எனச் சொன்னதும், துரியோதனன், ‘எங்கும் தீதும் சூதும்’ என்றதற்கும் காரணம் இதுதான்.

நம் உள் உலகை வைத்துதான் வெளி உலகைப் பார்க்கி றோம். போட்டித் தேர்வுகளில் தீமேட்டிக் அப்பர்செப்ஷன் டெஸ்ட் (Thematic Apperception Test) என்று ஓர் உளவியல் சோதனை உண்டு. படம் பார்த்து கதை சொல்லுதல் அது. ஒரே கதைக்கு ஆயிரம் பேர் ஆயிரம் கதைகள் சொல்வர். உங்கள் உள் மனம் அறிய அப்பெர்செப்ஷன் அறிதல் உதவும்.

எல்லா கதாசிரியர்களும் தங்கள் கதையைத்தான் தொடர்ந்து சொல்லிவருகிறார்கள். எல்லா படைப்புகளிலும் தெரியும் நாயகன் ஒருவர்தான். அது படைப்பாளிதான்!

அதனால்தான் மணிரத்னம் பட நாயகன் மென்மையாகவும், கே.எஸ்.ரவிகுமார் பட நாயகர்கள் `நிலப்பிரபு’க்கள் போல பந்தா வாகவும், பாரதிராஜா நாயகன் கிராமக் கட்டமைப்பை உடைக்கும் கலகக் காரனாகவும், கமல் எழுதியோ, இயக்கியோ மேலாண்மை செய்த படங்களில் கதாநாயகியை இழப்பவராகவும் இருப்பார் நாயகன்.

உங்களை அறிந்து கொள்ள வேண்டுமா? உடனே ஒரு கதை எழுதுங்கள்!

- மற்றவை நெக்ஸ்ட் வீக்