``நீங்க கேள்வியைச் சொல்லிடுங்க, பதில் தெரிஞ்சுக்கிட்டு நானே லைன்ல வர்றேன். கூடாதா... ரொம்ப கஷ்டம் பாஸ்!'' - உஷாராகிறார் நடிகை உமா ரியாஸ்.

``அட, வி.ஐ.பி-க்கள் எல்லாம் ஜாலியா பதில் சொல்வாங்களே... கேளுங்க... கேளுங்க!” - சினிமா வசனகர்த்தா பாக்கியம் சங்கர்.

`` `குற்றமே தண்டனை' படம் ரிலீஸ் ஆனதில் இருந்து செம டாக் சார். நிறையப் பேர் பாராட்டினாங்க. ஆமா, நான் பாட்டுக்குப் பேசிட்டிருக்கேன். நீங்க எதுக்கு கால் பண்ணீங்க? என்னது... குறும்புக் கேள்வியா?'' - ஷாக்காகிறார் நடிகர் விதார்த்.

`` `இந்தியாவின் முதல் ஜனாதிபதி யார்?, சட்டையில் ரோஜா பூ வெச்சுக்கிட்ட தலைவர் யார்?'ங்கிற மாதிரி கேள்வி கேட்டால், டக்கு டக்குனு பதில் சொல்லி கெத்துகாட்டிடுவேன். ஆனா, நீங்க அப்படிக் கேட்க மாட்டீங்களே பிரதர்!'' - ஜாலி மூடுக்குத் தாவுகிறார் ஸ்டன்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன்.

``ஒபாமா மகள் நடாஷா, அவரது விடுமுறையில் என்ன வேலை செய்தார்?''

விடை: உணவகம் ஒன்றில் வெயிட்டராக வேலை பார்த்தார்.

உமா ரியாஸ் : ``இது ரீல் கேள்வியா... ரியல் கேள்வியா? அய்யோ..! இதுதான் கொஸ்டீனா? அப்ப நிஜமாவே நீங்க ரீல்விடுறீங்க. ஒபாமா பொண்ணு எதுக்குங்க வேலைக்குப் போகணும்? ஒபாமாவையும் அவங்க குடும்பத்தையும் பார்த்தா, ரொம்ப கஷ்டப்படுற ஃபேமிலி மாதிரி தெரியலையே!''

பாக்கியம் சங்கர்: ``அட, இதை விகடன் இன்பாக்ஸ்ல படிச்சனே தம்பி! டக்குனு ஞாபகம் வர மாட்டேங்குது. அந்தப் பொண்ணு வேலை செய்யும்போதுகூட நிறையப் பேர் பாதுகாப்புக்காகச் சுற்றி இருந்தாங்களே! (யோசிக்கிறார்) ம்ஹூம்... அடுத்த கேள்விக்கு வாங்க.''

விதார்த்: ``ஒபாமா, அமெரிக்க நாட்டு பிரெசிடென்ட்டா வேலைபார்க்கிறார்னு தெரியும். ஆனா, அவங்க மகள் என்ன வேலை பார்க்கிறார்னு தெரியலை. இந்த வயசுல அப்பா காசை எதிர்பார்க்காம வேலைக்குப் போவதையே நாம பாராட்டணும். நான் லாரி க்ளீனர், டிரைவர், ஹோட்டல்ல சர்வர்னு நிறைய வேலைகள் பார்த்துட்டுத்தான் சினிமாவுக்கு வந்தேன். அதெல்லாம் இப்ப ஞாபகம் வருது.''

திலீப் சுப்பராயன்: ``எங்கே... கேள்வியை இன்னோரு முறை சொல்லுங்க. ஆன்சர் ரொம்ப ஈஸி. ஹோட்டல்ல சர்வரா இருந்தாங்க. எங்ககிட்டயேவா?''

“தனுஷ் இயக்க இருக்கும் படத்தின் பெயர் என்ன?''

விடை: `பவர் பாண்டி.'

உமா ரியாஸ்: ``வாட்ஸ்அப்ல அந்தப் படத்தோட ஸ்டில்ஸ் வந்ததே... ராஜ்கிரண், பிரசன்னா எல்லாம்கூட நடிக்கிறாங்களே! `பாண்டி'னு வரும். போஸ் பாண்டியா... இல்லை பால் பாண்டியா? ப்ளீஸ் வெயிட். ஆங்ங்ங்ங்ங்... `பவர் பாண்டி'.''

பாக்கியம் சங்கர்: பட்டெனச் சொல்கிறார், `பவர் பாண்டி'. சினிமாவுல இருந்துட்டு இந்தக் கேள்விக்குப் பதில் தெரியலைன்னா எப்படி தம்பி?''

விதார்த்: ``படத்தோட பேரு `பவர் பாண்டி'. நான் முட்டை மார்க் வாங்காம தனுஷ், என்னைக் காப்பாத்திட்டார். தனுஷுக்கு நன்றியும் நிறைய வாழ்த்துகளும்.''

திலீப் சுப்பராயன்: ``ஹா... ஹா... இதுவும் ஈஸி. பாண்டி... `பவர் பாண்டி' சரியா? தனுஷ்கூட நடந்த அனுபவத்தைச் சொல்றேன். `மரியான்' படத்துல சிறுத்தைகிட்ட தனியா மாட்டிக்கிற மாதிரி சீன். அதை எடுக்கும்போது உண்மையாவே அவர் பயந்துட்டார். அந்தச் சிறுத்தை கர்ஜிக்கும்போது நமக்கே டர்ர்ர் உட்ரும். அவர் அதை சோலோவா பண்ணி முடிச்சதும், `என்னை முதல்ல சென்னைக்கு அனுப்பிடுங்கப்பா'னு சொல்ல ஆரம்பிச்சுட்டார்.''

``சமீபத்தில் தமிழ்நாடு விவசாயிகளைப் பற்றி அவதூறாகப் பேசிய தமிழ்நாடு அமைச்சர் யார்?''

விடை: தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன்.

உமா ரியாஸ்: ``நான் இந்த ஒரு வாரமா ஈ.சி.ஆருக்கு வீடு மாத்துறதுல பிஸியா இருந்துட்டேன். நியூஸ் பேப்பர் பார்க்கக்கூட டைம் இல்லை. எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு. யப்பா... இப்படி கேள்வி கேக்குறியேப்பா!”

பாக்கியம் சங்கர்: ``இதையும் நான் விகடன் இணையதளத்துல படிச்சதா ஞாபகம். ஞாபக மறதியை சீக்கிரமே சரிபண்ணணும்'' என்றவர், ``தம்பி... முதல் கேள்விக்கான பதில், ஞாபகம் வந்துடுச்சு. அந்தப் பொண்ணு ஹோட்டல்ல சமையல் வேலை பார்த்தாங்க. சரியா?''

விதார்த்: அதிர்கிறார் ``அச்சச்சோ... படம் ரிலீஸ் ஆனதில் இருந்து படத்தை ஃபாலோ பண்ணவே எனக்கு நேரம் சரியா இருந்தது. இதைக் கவனிக்கலையே சார். ஆனா, விவசாயம் பண்றவங்கதான் நாட்டுல ரொம்பப் பாவம். மொபைல், சிம்கார்டு, ஹெட்செட்னு எல்லா டெக்னாலஜி பொருட்களுக்கும் அந்த கம்பெனி என்ன விலை சொல்லுதோ அந்த விலை கொடுத்து அதை வாங்கிட்டு வந்துடுறோம். ஆனா, விவசாயி நிலத்துல ராப்பகலா உழுது விளைவித்த பொருட்களுக்கு அவனாலேயே விலையை நிர்ணயிக்க முடியலை. சரி, எந்த அமைச்சர்... என்ன பேசினார்?”

திலீப் சுப்பராயன்: ``அச்சச்சோ... ஒரு மார்க் போயிடுச்சே பிரதர்! ஏதாவது நார்த் இண்டியா மினிஸ்டர் இப்படிச் சொல்லியிருப்பார். அவர் விவசாயம் பண்ணி, நிறையப் பணம் சேர்த்துவெச்சிருப்பார். அதனால, எல்லாருமே அப்படித்தான்னு நினைச்சிருப்பார். தமிழ்நாட்டுல விவசாயிகளைப் பற்றி அவதூறாகப் பேச முடியுமா என்ன?''

“புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் பெயர் என்ன?''

விடை: உர்ஜித் பட்டேல்.

உமா ரியாஸ்: ``மிஸ்டர் ரகுமான்ராஜ னைத்தான் மோடி கவர்மென்ட் மீண்டும் கவர்னர் ஆக்கியிருக்கு. அதனால, இந்தியாவுல எவ்வளவு வளர்ச்சி, வீழ்ச்சினு எல்லாம் தெரியாது. மொத்தத்துல நான் பாஸா... ஃபெயிலா?”

பாக்கியம் சங்கர்: ``முன்னாடி ரகுராம்ராஜன் இருந்தார். இப்ப யாருனு தெரியலை. ஆனா, ரொம்பச் சுலபமான வேலைங்க. ரூபாய் நோட்ல கையெழுத்து போட்டுட்டு, ஜாலியா இருக்கலாம். அவர் கையெழுத்து போட்ட நோட்டை எடுத்து அவரே செலவுபண்ணுவார். செம வாழ்க்கைல!''

விதார்த் : ``அதைப் பத்தி எனக்குப் பெரிசா எதுவும் தெரியாதுங்களே. நோட்ல அவர் போட்ட கையெழுத்தைத்தான் பார்த்திருக்கேன். படிக்கிறவங்க `என்னடா... இவருக்கு ஒண்ணுமே தெரியலை'னு நினைச்சுடப்போறாங்க சார். `படம் ரிலீஸ்ல பிஸியா இருந்தார்'னு தெளிவா எழுதிடுங்க'' - சிரிக்கிறார்.

திலீப் சுப்பராயன்: ``முதல்ல கலாம் அய்யா இருந்தார். அடுத்து ஒரு அம்மா வந்தாங்க. இப்ப யாரா இருப்பாங்க... இருங்க யோசிக்கிறேன். (30 விநாடிகள் கழித்து) ஆங்... ரகுராம்ராஜன். இது சரியான பதில் இல்லையா! அட போங்க பிரதர். இங்கே அதுதான் ஆன்சரா வருது'' என்றவரிடம் அதிர்ந்து, ``என்னது... ஆன்சர் வருதா? கூகுள் பண்ணி பிட் அடிக்கிறீங்களா? உங்களுக்கு எல்லா மார்க்கும் மைனஸ்'' எனச் சொன்னதும், ``ப்ரோ... எல்லா ஆன்சரும் பிட்டு அடிச்சு சொல்லலை. நிறைய மார்க் வாங்கணும்னு ஒரு ஆசையிலதான் இந்தக் கேள்விக்கு மட்டும் கூகுள் பண்ணினேன். நிஜமா... நம்புங்க ப்ரோ. அவ்வ்வ்!''