Published:Updated:

ஜென் Z - நான் ஸ்ரீ ஆனது எப்படி?

ஜென் Z - நான் ஸ்ரீ ஆனது எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - நான் ஸ்ரீ ஆனது எப்படி?

சிபி, படம்: தி.குமரகுருபரன்

ஜென் Z - நான் ஸ்ரீ ஆனது எப்படி?

சிபி, படம்: தி.குமரகுருபரன்

Published:Updated:
ஜென் Z - நான் ஸ்ரீ ஆனது எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - நான் ஸ்ரீ ஆனது எப்படி?
ஜென் Z - நான் ஸ்ரீ ஆனது எப்படி?

``சின்ன வயசுல ஃப்ரெண்ட்ஸ் கூடத்தான் எப்பவும் ஊர் சுத்திட்டே இருப்பேன். சுமாரா படிப்பேன். அப்பாவும் அம்மாவும் அடிக்கடி கண்டிச்சாலும் பெருசா எதுவும் சொல்ல மாட்டாங்க. என் போக்குல விட்டுடுவாங்க. அப்ப எனக்கு பெரிய ட்ரீம் எல்லாம் இல்லை. ஒருகட்டத்துல என்னை அறியாமல் `இயக்குநர் ஆகணும்’னு தோணுச்சு. ஆனா, நடிகன் ஆகிட்டேன். எல்லாம் சினிமாதானே!'' என அழகாகப் பேசத் தொடங்குகிறார் ஸ்ரீ.

``நான் 10-வது முடிச்ச சமயம், நிறைய ஹாலிவுட் படங்களைப் பார்க்கிற வாய்ப்பு கிடைச்சது. `டைட்டானிக்' பார்த்துட்டு `ஆகுறோம்... கோலிவுட்ல ஜேம்ஸ் கேமரூன் மாதிரி இயக்குநர் ஆகுறோம்'னு கனவு காண ஆரம்பிச்சுட்டேன்.

வீட்டுலயும் என் சினிமா ஆசையைப் புரிஞ்சுக்கிட்டாங்க. ப்ளஸ் டூ முடிச்சதும் `விஸ்காம் படிக்கப்போறேன்'னு சொன்னேன். சேர்த்துவிட்டாங்க. கல்லூரிக்குப் போன பிறகுதான், `டைரக்டர் ஆகிறது பெரிய புராசஸ். அதுக்காக நிறையக் கத்துக்கணும்'னு புரிஞ்சது. 2006-ல `கனா காணும் காலங்கள்' சீரியலில் நடிக்க ஆடிஷன் நடந்தது. கலந்துக்கிட்டேன். எனக்கு ஸ்டேஜ்ல பேசியோ, நடிச்சோ பழக்கம் இல்லை. அங்கே சில பசங்க கெத்து காட்டிட்டிருந்தாங்க. இதை எல்லாம் பார்த்ததும் ஜெர்க் ஆகிட்டேன். `ஸ்ரீ... தைரியமா இரு'னு எனக்குள்ளயே சொல்லிக்கிட்டேன். என்னை மார்க்கெட்ல காய்கறி வாங்குற மாதிரி நடிக்கச் சொன்னாங்க. நான் பார்த்த விஷயங்களை வெச்சு நடிச்சுக் காமிச்சேன். என்னை செலெக்ட் பண்ணிட்டாங்க.

நல்ல இயக்குநர் ஆகணும்கிற கனவை ஓவர் நைட்ல நல்ல நடிகர் ஆகணும்னு மாத்திக்கிட்டேன். அடுத்து சில்வர் ஸ்க்ரீன்ல நடிக்கணும்னு, தெரிந்த நண்பர்களிடமும், சில இயக்குநர் அலுவலகங் களுக்கும் என் புகைப்படத்தைக் கொடுத்து வாய்ப்பு கேட்டுட்டிருந்தேன். அப்பதான், `பாலாஜி சக்திவேல் சார் அடுத்த படத்துக்கு ஆடிஷன் நடத்துறார்'னு சொன்னாங்க. போனேன். பாலாஜி சாரும் `நானும் உன்னைதான்ப்பா பார்க்கலாம்னு இருந்தேன். நீயே வந்துட்டே'னு சொன்னார். என் கேரக்டருக்கு அஞ்சு பசங்களைத் தேர்ந்தெடுத்து வெச்சிருந்தார். அதில் நானும் ஒருவன். ஹோட்டல் வேலை செய்யுற பையன் கேரக்டர். டிரெய்னிங்க்காக ஒரு ஹோட்டலில் வேலை பார்க்கச் சொன்னார். போரூர் ஹோட்டல்ல சர்வரா வேலைபார்த்த அனுபவம், நடிக்கும்போது பயன்பட்டது. `வழக்கு எண் 18/9’ படத்துல மூணு வருஷம் நடிச்சேன்.

அப்பல்லாம் `எப்படா... படம் ரிலீஸ் ஆகும்?'னு காத்திருப்பேன். படம் ரிலீஸ் ஆச்சு. படத்தைப் பார்த்த எல்லாருமே தனித்தனியா பாராட்டித் தள்ளினாங்க. `நல்ல வேலை பண்ணியிருக்கோம்'னு மனசுக்குள்ள பெரிய திருப்தி.

இந்தப் படத்தைப் பார்த்த மிஷ்கின் சாருக்கு, என் நடிப்பு ரொம்பப் பிடிச்சிருந்தது. நேர்ல பார்த்ததும் என்னைக் கட்டிப்பிடிச்சுக்கிட்டார். அதேபோல சமுத்திரக்கனி அண்ணா, `டேய் தம்பி. பின்னிட்டேடா'னு பாராட்டினார். இவங்க ரெண்டு பேர் பாராட்டும் மறக்க முடியாத நிகழ்வா என் மனசுல பதிந்துடுச்சு. அடுத்து `நான் ஹீரோவா நடிக்கிற மாதிரி ஸ்க்ரிப்ட் வேண்டாம். அந்த ஸ்க்ரிப்ட்டில் நான் ஒரு கேரக்டரா இருக்கணும். அது நல்ல இயக்குநர் படமா இருந்தால் பெட்டர்'னு தோணுச்சு. ஆனால், பல கதைகளும் `வழக்கு எண்' சாயல்லயே வந்தன. அப்பதான் மிஷ்கின் சார், கூப்பிட்டார். `ஓநாயும் ஆட்டுக் குட்டியும்' படத்தின் கதைக்காக எனக்கு ஆடிஷன் வைத்தார். அதுல நான் பண்ணின பெர்ஃபாமன்ஸ் அவருக்குப் பிடிச்சிருந்தது. படத்துல என்னை ஆட்டுக்குட்டி ஆக்கினார். அந்தப் படத்துலயும் ரொம்ப நல்ல பேர் கிடைச்சது.

அடுத்து `சோன்பப்டி', `வில்அம்பு'னு படங்கள் தொடர்ந்து நடிச்சு, இப்போ `மாநகரம்'. ரிலீஸுக்காக வெயிட்டிங். இன்னமும் என் டைரக்டர் கனவு மனசுக்குள்ள ஒரு ஓரமா இருக்கு. என் லைஃப்ல நான் ஒரு முடிவு எடுப்பதற்கு முன்னாடி யோசிச்சுட்டே இருப்பேன். முடிவு எடுத்துட்டேன்னா, அதுக்காக உழைக்க ஆரம்பிச்சுடுவேன். திறமையை வளர்த்துட்டு அதை நோக்கி டிராவல் பண்ணினால், வானத்தையே எட்டிப் பிடிச்சுடலாம்; பூமியையும் சுத்தி வந்துடலாம். அந்த நம்பிக்கை மட்டும்தான் என்னை `ஸ்ரீ'யா உயர்த்தியிருக்கு.''

``பிடித்த புத்தகம்'' 

``டான் பிரவுன் எழுதிய `டாவின்சி கோட்' ''

``பிடித்த நடிகர்''

``விக்ரம்''

பன்ச்:

வாழ்க்கையே ஒரு போர்தான். இதுல நீங்க ராஜாவா... மந்திரியா... சிப்பாயானு முடிவுசெய்து, பின்னி எடுங்க!''

``நடிக்கணும்னு ஆசைப்படுபவர்களுக்கு...'' 

``காத்திருக்கக் கத்துக்கோங்க. இதுதான் உங்களை அடுத்த கட்டத்துக்குக் கூட்டிட்டுப்போகும்.''

``பொழுதுபோக்கு''

``டேபிள் டென்னிஸ், புத்தகம் படிப்பது, ஃப்ரெண்ட்ஸ்கூட ஜாலி ஃபன்ஸ்.''