#போட்டோ_டேட்டா!

கல்யாண வீடுகளில் பெரிதும் அதிகாரம் செய்வது மணமகன் சொந்தங்களா அல்லது மணமகள் சொந்தங்களா என்று பட்டிமன்றம் நடத்தினால், என் தீர்ப்பு என்ன தெரியுமா? ‘இரண்டும் இல்லை. வீடியோ மற்றும் ஸ்டில் போட்டோக்காரர்கள் தான்’ என்பேன்.

இவர்களுடைய முதுகுகளைத் தாண்டி மணமக்களைத் தரிசிப்பது கடினம். மொத்தக்

கல்யாணத்தையும் இயக்குபவர்கள் இவர்களே. ஒரு ஃப்ரேமுக்குள் எல்லாம் நன்றாக வர எதையும் செய்யத் தயங்காதவர்கள். வரிசையில் நின்று பரிசு கொடுத்து 30 செகண்ட் freeze ஆகித் திரும்புகிறோம். பிரேம பாசம் போல போட்டோ பாசம்தான். எத்தனை செல்ஃபி எடுத்தாலும், நம் முகம் நமக்கு அலுப்பது இல்லை. இந்த narcissism இருக்கும் வரை கேமராக்காரர்கள் காட்டில் நல்ல மழைதான்!

செல்ஃபோனில் கேமரா வந்துவிட்டதால் புகைப்படத் தொழில் பாதிப்படைந்துவிட்டதா என்ன? இல்லையே! கலை... எதில் எடுப்பது என்பதில் இல்லை. எதை எப்படி எடுப்பது என்பதில்தான் இருக்கிறது. தொழில்நுட்பம் பல வசதிகள் செய்துதரும். ஆனால் கலை வளர சிந்தனை அவசியம்.

#எது_நல்ல_படம்?

ஆங்கிலப் படத்தின் ஒன்லைனை வைத்துக் கொண்டு தமிழுக்கு சீன் யோசிப்பதால் மட்டும் நல்ல படம் எடுத்துவிட முடியாது. புதுமைப்பித்தன் முதல் புது எழுத்தாளர்கள் வரை வாசிப்பது நல்லது.

இன்னோர் ஆச்சர்யமான விஷயம் தமிழ் சினிமா இயக்குநர்களில் படிப்பாளிகள் குறைவு. ஆனால், ஒளிப்பதிவாளர்களில் பலர் தீவிர இலக்கியம் வாசிப்பவர்கள். அதனால்தான் பல ஒளிப்பதிவாளர்கள் இயல்பாக இயக்குநர்கள் ஆகிவிடுகிறார்கள். இன்றைக்கு ஸ்மார்ட்போனை வைத்துக் கொண்டே ஒரு நல்ல சினிமா எடுக்க முடியும். ஆனால் நல்ல சினிமா எது என்று அதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டும்!

சினிமாவுக்கு மட்டும் அல்ல, வாழ்க்கைக்கும் இது பொருந்தும். எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் இருப்பதைக்கொண்டு சிறப்பாக வாழ்வது ஒரு கலைதானே?!

#திரைகளுக்குள்_உலகம்

ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் தினசரி மூன்று மணி நேரத்துக்கு மேல் வசிக்கும் பிள்ளைகள், பெற்றோர் களிடம் அதிகமாகச் சண்டை போடுகிறார்கள் என்பதை ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்திருக் கிறார்கள். எதைத் தொடர்ந்து பார்க்கி றோமோ அதில்தான் ஈர்ப்பு வரும்.

ரத்தமும் சதையுமான முகத்தைத் தொட்டும் பார்த்தும் உணர்ந்தும் உறவாடும்போதுதான் மனிதர்களிடம் ஈர்ப்பு வரும். பிறந்த குழந்தை உலகை அறிவது முதலில் அன்னையைத் தொட்டு உணர்ந்துதான். பிறர் உணர்வை தன் உணர்வாகக் கருதுவதை empathy என்பார்கள். இதுதான் உறவுகளை இணைக்கும் பசை. அடுத்தவர் நிலையை உணர்தல். இது வயது வித்தியாசமின்றிக் குறைந்து வரக் காரணம் இயந்திரங்கள் மீது நமக்கு அதிகரித்துவரும் ஈர்ப்பு.

ரோபோ சிட்டி, வசீகரன்போல காதலிப்பதை திரையில் பார்த்தோம். ஆனால், நிஜ வாழ்வில் நாமெல்லாம் ரோபோபோல ஆகிவருகிறோமோ?

#நெருக்கமான_ஆபத்து

‘அவள் சண்டை போட்டுட்டு அம்மா வீட்டுக்குப் போயி ஆறு மாசமாச்சு.

நீ எடுத்துச் சொல்லிக் கூட்டிட்டு வா. இல்லாட்டி நான் என் இஷ்டம்போல யார்கூட வேணும்னாலும் ஜாலியா திரிவேன். போய் சமாதானம் பண்ணிக் கூட்டிட்டு வா’ - இப்படி பேசும் மகனைப் பெற்ற தாய் என்ன செய்வாள்?

சைக்கோதெரபிக்கு வந்த பெண்மணி குன்றிப்போய் தன் இழி நிலையை விளக்கினார்.

‘பெற்றோர்களுடன் இருந்த ஆரோக்கியமான இடைவெளி போய்விட்டது. Spacing issue-தான் இது’ என்றார் என் பேராசிரிய நண்பர். நெருக்கம்கூட ஆபத்துதானோ?

இன்னொரு தந்தை நொந்துகொண்டார்:

‘என் அப்பா ரொம்பக் கண்டிப்பு. அவர் என் காதலுக்குச் சம்மதிக்காததால, ரொம்பக் கஷ்டப்பட்டவன் நான். அதனால் என் பையனிடம் ஃப்ரீயா இருந்தேன். இன்னிக்கு அவனோட girl friend-கூட எந்தப் பிரச்னை வந்தாலும் என்னைப் பஞ்சாயத்து பண்ணச் சொல்றான்! ஒரு தடவை கோவத்துல சொல்லிட்டேன்... `இனிமே இந்த மாமா வேலை பார்க்கமாட்டேன்’னு. இருந்தும் ஒரே பையன்... கேட்டா தட்டமுடியலை. அந்தப் பொண்ணு என்ன நினைக்கும், இப்படி ஒவ்வொண்ணுக்கும் நான் போய் நின்னா..!’

#கராத்தே_கட்டாயம்

பெண்கள் திடமாகிவருவது மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. கல்வி, பொருளாதார விடுதலை, தனித்த சிந்தனை போன்றவை பெண்களை வலிமை ஆக்கும். ஆனால், பெண்ணின் மீதான வன்முறைகள் அதிகரித்துவருகின்றன. பின்புலத்துக்கு ஏற்ப வழிமுறைகள்தான் மாறுகின்றன.

நான் ‘ஒரு நாள்’ முதல்வரானால்... எல்லா பெண்களுக்கும் கராத்தே போன்ற தற்காப்புக் கலையைக் கட்டாயப் பாடத் திட்டத்தில் சேர்ப்பேன்!

#வானமே_எல்லை

கார்ப்பரேட்களில் பெண்கள் கொடி பறக்கிறது என்பது எல்லாம் மாயை. கம்பெனியை நிர்வகிக்கும் சி.இ.ஓ பதவிகளில் 6 சதவிகிதம்தான் பெண்கள். வெள்ளைக் காலர் பணிகளில், வங்கிகள் போன்ற துறைகளில் மட்டும் பெண்கள் 30 சதவிகிதத்துக்குச் சற்று அதிகம். கைகளால் செய்யப்படும் எல்லா வேலைகளிலும் ஆண்களுக்கு இணையாகப் பெண்கள் இருக்கிறார்கள். கூலி மட்டும் ஆணுக்கு ஒரு கூலி; பெண்ணுக்கு ஒரு கூலி. வீட்டு வேலைகளில் என்றும் பெண்தான் முன்னணி. ஆனால், கூலி கிடையாது.

ஆதலினால் கேர்ள்ஸ்... நீங்க போகவேண்டிய தூரம் நிறையவே இருக்கு.

#பெண்களுக்கு_சில_சிபாரிசுகள்

- கதாநாயகியை அரை லூஸாகக் காட்டும் படங்களைப் புறக்கணியுங்கள்.

- Cerebral ஆக பெண் பாத்திரங்கள் வரும்போது கொஞ்சம் ஆதரியுங்கள்.

- தமிழ்ப் படங்களில் இப்படி நாயகிகள் தென்படவில்லை என்றால், மற்ற மொழிப் படங்களை சப் டைட்டில்ஸுடன் பாருங்கள்.

- தமிழ்ப் படம்தான் பார்ப்பேன் என்று அடம் பிடித்தால், ‘அவள் அப்படித்தான்’ போன்ற படங்களைத் தேடிப்பிடித்துப் பாருங்கள்!

#வம்பு_பையன்கள்

‘ஆண்களின் lobby ஒன்று உள்ளது... நிறுவனங் களில். அதை உடைக்கும் பெண்ணால்தான் உயர முடியும்’ என்றார் diversity துறையில் பணியாற்றிய ஒரு பெண் உயர் அதிகாரி. புகைப்பிடிக்கும் இடங்கள், குடிக்கும் இடங்கள் இதர கேளிக்கை இடங்களில்கூட பல நிர்வாக முடிவுகள் வடிவெடுக் கலாம். பெண்களுக்குப் பல நுண்தகவல்கள் தெரியாமலேயே போகலாம்.

‘பெண்கள் அதிகம் வம்பு பேசுவார்கள் என்பதுகூட ஆணாதிக்கக் கருத்தாக்கம் தான்’ என்றார். உண்மைதான். குடிக்கும்போது ஆண்கள் பேசாத வம்பா என்ன?

இந்திரா காந்தியைப் பற்றி இப்படி, பெருமை யாகச் சொல்வது உண்டு... `அவர் அமைச்சரவையில் உள்ள ஒரே ஆண் அவர் மட்டும்தான்!’

#பிரிக்காதே

பெண், சுதந்திரம் பெற வேண்டிய இன்னோர் இடம்... தமிழ்நாட்டில் உள்ள பல பொறியியல் கல்லூரிகள். `பாதுகாப்பு' என்ற பெயரில் பெண்களை அரபு நாடுகள்போல பிரித்துவைத்து, அடைகாத்து எம்.என்.சி-களிடம் கேம்பஸில் தாரை வார்க்கிறார்கள். அங்கே கலாசார அதிர்வுகளில் கலங்கிப்போகிறார்கள் அவர்கள்.

டூரிங் டாக்கீஸ் டிக்கெட் வரிசைபோல ஆண்களையும் பெண்களையும் பிரித்துக் கையாளும் கல்லூரி முதலாளிகளையும் ஆசிரியர்களையும் ஒரு வாரம் இந்த கம்பெனிகளில் வேலை செய்யச் சொல்லணும்! அப்பத்தான் நிலவரம் தெரியும்!

#க்விஸ்

`விமன்ஸ் லிப்' என்று வார்த்தையில் சொல்லாமல் வாழ்ந்துகாட்டிய அந்தக் கால தமிழ் / தெலுங்கு சினிமாவின் அஷ்டாவதானி யார்?

- மற்றவை நெக்ஸ்ட் வீக்