Published:Updated:

ஜென் Z - பணம் நேரம்!

ஜென் Z - பணம் நேரம்!
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - பணம் நேரம்!

சிபி, சர்வே உதவி: விகடன் மாணவ பத்திரிகையாளர்கள்

ஜென் Z - பணம் நேரம்!

சிபி, சர்வே உதவி: விகடன் மாணவ பத்திரிகையாளர்கள்

Published:Updated:
ஜென் Z - பணம் நேரம்!
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - பணம் நேரம்!
ஜென் Z - பணம் நேரம்!

தெளிவாக படிக்க படத்தை க்ளிக் செய்யவும்

ண்ணு காசு, இன்னொண்ணு நேரம்... ரெண்டு விஷயங்கள்தான் எந்தத் தலைமுறைக்கும் தலைபோற பிரச்னை. கல்லூரி மாணவர்களுக்கு இந்த ரெண்டுமே ரொம்ப லிமிட்தான். அவங்க எப்படிச் சமாளிக்கிறாங்க? 50 பேரை கையும் காசுமாகப் பிடிச்சு, டேட்டா என்ட்ரி போடச் சொன்னோம். ரிசல்ட் அதிரவெச்சது. சரி, இந்தச் செலவுகள் எல்லாம் சரியா... டைம் மேனேஜ்மென்ட் எப்படி இருக்கு? டேட்டாக்களுடன் பொருளாதார நிபுணர் வ.நாகப்பனைச் சந்தித்தோம்.

``ஜென்-Z பசங்களின் சர்வே முடிவுகளைப் பார்க்கும்போது, ஷாக்கிங் சர்ப்ரைஸாகத்தான் இருக்கு.

ஜென் Z - பணம் நேரம்!

சராசரியாக ஒருவர் மாதம் 3,380 ரூபாய் வரை செலவுசெய்கிறார். இதில், மொபைல் அண்ட் நெட் பேக் சேர்த்து 400 ரூபாய் செலவழிப்பது ஓ.கே. ஆனால், நெட்டையும் தேவை இல்லாத விஷயத்தையும் தவிர்ப்பது நல்லது. தேவையற்ற வாட்ஸ்அப் ஃபார்வேர்டு மெசேஜ்கள்தான் பாதி டேட்டாவைத் தின்கின்றன. புத்தகச் செலவுக்கு வெறும் 200 ரூபாய்தான். இப்ப எல்லாமே இன்டர்நெட்டில்தான். சோஷியல் மீடியா, இ-புக்ஸ்னு ஆன்லைன்ல நிறையப் படிக்கிறார்கள். அதனால் நோ ப்ராப்ளம்.

சினிமா-நண்பர்கள்-காதல்-பயணம்-உணவு... எல்லாமே ஒரே கேட்டகிரியில்தான் வரும். மொத்தமாக 2,000 ரூபாய்க்கு மேல் எகிறுகிறது. இது மிடில் கிளாஸ் பசங்களுக்கு ரொம்பவே அதிகம். மாஸா வாழணும், கெத்தா இருக்கணும், ரிச் லுக்கில் காட்டிக்கணும்னு செலவுகளை அதிகப்படுத்துக்கிறாங்க. அப்படி இல்லாமல் நார்மலாக இருப்பதன் மூலம் மாதம் 500 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை குறைக்கலாம்.

நேர நிர்வாகத்தில் ரெண்டு இடங்களில் தடுமாறுறாங்க. ஒண்ணு டிராவல், ரெண்டாவது என்டர்டெயின்மென்ட். ஒரே நாளில் இந்த ரெண்டுக்கு மட்டும் ஆறரை மணி நேரத்துக்கு மேல் செலவழிக்கிறாங்க. இது மிக அதிகம். இந்த வயசுலதான் நிறையக் கத்துக்க முடியும். தினமும் ரெண்டு மணி நேரம் மொபைலுக்கு ஓ.கே. படிப்பு - தூக்கம் - நண்பர்கள் - ஜிம் வொர்க்அவுட் அல்லது விளையாட்டுக்கு...

எல்லாம் சரியான நேரம் எடுத்துக்கிறாங்க. வெளிநாட்டு இளைஞர்கள்போல ஃபேஷன்ல முதல் என்டர்டெயின்மென்ட் வரைக்கும் எல்லாவற்றிலும் அப்டேட்டா இருக்கணும்னு நம் இளைஞர்கள் நினைக்கிறாங்க. இதுல தப்பு ஒண்ணும் இல்லை. ஆனால், வெளிநாட்டு இளைஞர்கள் பார்ட் டைம் வேலைக்குப் போய், அவங்க தேவைக்கு கொஞ்சம் அவங்களே சம்பாதிக்கிறாங்க. ஆனால், நம் இளைஞர்களில் பலர், பெற்றோர் தரும் பாக்கெட் மணியில்தான் செலவைச் சமாளிக்கிறாங்க. பார்ட் டைம் வேலைக்குப் போகத் தயங்கக் கூடாது. அப்பதான் உண்மையாகவே நம் இளைஞர்கள் கெத்து காட்ட முடியும்’’ என்கிறார் வ.நாகப்பன்.