Published:Updated:

ஜென் Z - எப்ப வரும் எப்படி வரும்னு யாருக்கும் தெரியாது?

ஜென் Z - எப்ப வரும் எப்படி வரும்னு யாருக்கும் தெரியாது?
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - எப்ப வரும் எப்படி வரும்னு யாருக்கும் தெரியாது?

ச.ஆனந்தப்பிரியா, லோ.சியாம் சுந்தர், படங்கள்: க.மணிவண்ணன்

ஜென் Z - எப்ப வரும் எப்படி வரும்னு யாருக்கும் தெரியாது?

ச.ஆனந்தப்பிரியா, லோ.சியாம் சுந்தர், படங்கள்: க.மணிவண்ணன்

Published:Updated:
ஜென் Z - எப்ப வரும் எப்படி வரும்னு யாருக்கும் தெரியாது?
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - எப்ப வரும் எப்படி வரும்னு யாருக்கும் தெரியாது?
ஜென் Z - எப்ப வரும் எப்படி வரும்னு யாருக்கும் தெரியாது?

`காதல்'கிறது ஃபார்வேர்டு மெசேஜ் மாதிரி. யார், யாருக்கு எப்ப அனுப்புவாங்கனு யாருக்குமே தெரியாது. அதுல நீங்க விழுந்துட்டிங்கனா போதும்... `கபாலி’கூட ரிலீஸ் ஆன சின்னப் படம் மாதிரி

ஜென் Z - எப்ப வரும் எப்படி வரும்னு யாருக்கும் தெரியாது?

சிக்கிச் சின்னாப்பின்னம் ஆகிடுவீங்க. வைரமுத்து சொன்ன `காதலில் மொத்தம் ஏழு நிலை’ இருக்கலாம் பாஸ். ஆனா, இந்தக் காதல்ல மொத்தம் ஐந்து ஸ்டெப்தான். அந்த ஐந்தையும் நம்ம பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் எப்படிப் பண்றாங்கனு பார்ப்போம்.

ரூட் விடு தூது !

பாய்ஸ்: பக்கத்து வீட்டு பரிமளத்துக்கு ரூட் விடுறதுல தொடங்கி ஃபேஸ்புக்ல முகேஷ் அம்பானி பொண்ணுக்கு ரூட் விடுறது வரை காதல் ரூட்ல பசங்கதான் எப்பவுமே ரூட்டுதல. கண்ணால பேசுறது, வாயால கேக்குறது, காதால பார்க்குறதுனு நம்ம பசங்க ரூட் விடுற அழகே தனிதான். ஒரு பொண்ணு திரும்பிப் பாத்துட்டாபோதும் `விட்டுட்டியே லுக்கு... ஆகிட்டேன் டக்கு'னு பொயட் தனுஷ் கணக்கா கவிதையா எழுதி கரெக்ட் பண்ண ட்ரை பண்ணுவாங்க நம்ம பாய்ஸ். அதுக்கும் மடியாத தங்கப் புஷ்பங்களை, ஒத்தரோசாக்களை கரெக்ட் பண்ண, செத்த ராசாக்களா மாறி, அவங்க போற இடத்துக்கு எல்லாம் பின்னாடியே போய் வாட்ச்மேன் வேலைபார்த்து, `நான்தான்டி உன் கூர்க்கா... போடுடி பாஸ் மார்க்கா'னு பாட்டு எல்லாம் பாடி கஷ்டப்படுவானுங்க. சுருக்கமாச் சொல்லணும்னா, 24*7 காசு வாங்காத கூர்க்காவா செயல்பட்டு கரெக்ட் பண்றதுதான் பசங்க ஸ்டைல்.

கேர்ள்ஸ்: `பசங்களுக்கு நாங்களும் சளைச்சவங்க இல்லைடா லகுட பாண்டிகளா’னு பரபரனு வேலைபார்க்கிறவங்கதான் கேர்ள்ஸ். பண்பால அடிக்கிறது பாய்ஸ் பாலிசி... அன்பால அடிச்சு அடிபணியவைக்கிறதுதான் கேர்ள்ஸ் பாலிசி. ‘சாப்பிட்டியா...’ ‘தூங்குனியா?’-னு மெள்ள ஸ்டார்ட் பண்ணி, ‘அதென்ன, என்கிட்டகூட சொல்ல மாட்டியா?’னு கேர்ள் பாய்ச்சுற நங்கூரத்துல நசுங்கி சின்னாப்பின்னமாக ஆரம்பிப்பாங்க பாவப்பட்ட பாய்ஸ். இவ நம்மளை லவ்பண்றாளா... இல்லை நம்ம ஃப்ரெண்டை லவ்பண்றாளானு பாய்ஸுக்குள்ள பல கன்ஃபியூஷன் ஆஃப் த கொலாப்ரேஷன் நடக்கிற வரைக்கும் விட மாட்டாங்க. பார்க்கிற மாதிரியே இருக்கும்... ஆனா, பார்க்க மாட்டாங்க. கேக்கிற மாதிரியே இருக்கும்... ஆனா, கேக்க மாட்டாங்க... லவ்பண்ற மாதிரியே இருக்கும்... ஆனா, லவ்பண்ண மாட்டாங்க. சுருக்கமா சொல்லணும்னா, இருக்கு... ஆனா இல்லைனு பசங்களைச் சுத்தல்லவிடுறதுதான் கேர்ள்ஸ் பவர்!

புரப்போஸிங் டெக்னாலஜி !

பாய்ஸ்: `ஆயக் கலைகள் அறுபத்துநாலுல ஐ லவ் யூ சொல்றதும் ஒரு கலைதான்'னு ஹராப்பா கல்வெட்டுலகூட எழுதியிருக் காங்களாம். புரப்போஸ் பண்றது அந்த அளவுக்கு ஒரு கஷ்டமான விஷயம். நட்டநடு ராத்திரியில மிஷ்கின் பட ஓப்பனிங் சீன் கணக்கா நடுரோட்ல புரப்போஸ் பண்றது, விடாம பெய்யுற மழையில கரன்ட் போய் கடுப்புல இருக்கும்போது வந்து கதறக் கதற புரப்போஸ் பண்றதுனு புதுசு புதுசா ஐடியா பிடிச்சு, காதல் சொல்றதுதான் பசங்க டெக்னிக்.

ஜென் Z - எப்ப வரும் எப்படி வரும்னு யாருக்கும் தெரியாது?

கேர்ள்ஸ்: ஒரு காலத்துல மேகத்தையும் புறாவையும் தோழியையும் தூது விட்டு காதல் சொன்ன பெண்கள் இப்ப எல்லாம் வாட்ஸ்அப்பை கையிலயும், ஹைக் மெசேஞ்சரை இதயத்துலயும் தாங்கிக்கிட்டு, அந்தப் பொறுப்பை மொபைலிடம் ஒப்படைச்சுட்டு ‘சோ சிம்ப்பிள், தட்ஸ் இட்’ மோட்லயே திரிவாங்க. இருந்தாலும் அங்கே ஒண்ணு இங்கே ஒண்ணா, கவிதை எழுதிச் சொல்றது, `நான் உன்னை லவ் பண்ணட்டுமா?'னு பெர்மிஷன் வாங்கி லவ் பண்றதுனு, `நமக்கு எப்போ கல்யாணம்?'னு ஆர்வமா கொஸ்டீன் பண்ணறதுனு டிசைன் டிசைன்னா ரூட் விட்டு ‘நாங்களும் புரப்போஸ் பண்ணுவோம்யா என் பொட்டட்டோ’ என கெத்து காட்டுவார்கள் நம்ம தங்கத் தமிழ் மகள்கள்.

கமிடெட் !

பாய்ஸ்: என்னதான் நம்ம பசங்க கஷ்டப்பட்டு புரப்போஸ் பண்ணி கரெக்ட் பண்ணாலும், கடைசியில காட்டுக்குள்ள மாட்டின பியர்கிரில்ஸ் மாதிரி திக்கித்திணறி அந்தக் காதல்ல உயிர்பிழைக்கவே போராடுவாங்க. பொண்ணுங்க மொபைலுக்கு ரிசார்ச் பண்ண லோன் எடுத்தது எல்லாம் அந்தக் காலம், பார்லர் போய் கையில கோன் போடவே லோன் போடுறதுதான் இந்தக் காலம். கலர் கலரா பண்ணுவோம் `மீமீ... காதலே வேணாம்டா சாமி'னு தத்துவம் சொல்ற அளவுக்கு லவ்ல கஷ்டப்பட்டு ஓடினேன்... ஓடினேன்... ஒயின்ஷாப்பின் ஓரத்துக்கே ஓடினேன்னு ஃபீலிங்ல இருப்பாங்க. பைக்கு டிரைவரா இருக்கிறது, கூப்பிட்ட இடத்துக்கு எல்லாம் போறதுனு பசங்களுக்கு காதலே ஒரு போர்க்களம்.... கண்கள் முழுக்க நீர்க்குளம்.

கேர்ள்ஸ்: `கமிட் ஆனதுதான் ஆனோம்... தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையாவே ஆகிட்டோமோ?’ என பசங்களைப் பதறவைக்கிற அளவுக்கு இருக்கும் நம்ம கேர்ள்ஸ் அப்ரோச். வீட்டுக்குத் தெரியாம ஹாயா வெளியே சுத்தறது, க்ளாஸை கட் அடிச்சுட்டு காலேஜ்லயே காதலை வளர்க்கிறது, விடிய விடிய சாட் பண்ணி, மொபைல்ல கதற அடிக்கிறதுனு `காதல் வளர்த்தேன்... காதல் வளர்த்தேன்...’ மோட்லயே சில காலம் அலைவாங்க.

பிரேக்க புடி பிரேக்க புடி.. !

பாய்ஸ்: காதலும் கசந்துபோகும்னு காகபோ தத்தவத்தோடு லவ் பிரேக்அப் பண்றதுதான் பசங்களோட வேலை. `பண்ணிப்போம் பிரேக்கு... நீ வேணாடி பேக்கு’னு மெசேஜ் தட்டிவிட்டு, தனிமையில ஃபீலிங் கடுப்ஸ்ல இருப்பானுங்க. இப்படி பசங்க பிரேக் பண்ண காரணம், ஒரே வார்தைதான் மக்களே. நாம வாட்ஸ்அப்ல கஷ்டப்பட்டு பத்து பக்கத்துக்கு கதை கதையா எழுதி அனுப்பினாலும், ஒரே எழுத்துல `K'னு ரிப்ளே பண்றதுதான் பொண்ணுங்க வேலை. இந்த எழுத்தைப் பார்த்து வாழ்க்கையில வெக்ஸ் ஆகி விக்ஸ் வாங்கக்கூட முடியாம பிரேக்அப் முடிவெடுக்கிற பசங்கதான் அதிகம். ஆனா, பிரேக்அப் பண்ணதும் கூலா திரியுற பசங்க, நாளாக நாளாக ஃபீலிங்காகி தாடி வளர்க்க ஆரம்பிப்பாங்க.

ஜென் Z - எப்ப வரும் எப்படி வரும்னு யாருக்கும் தெரியாது?

கேர்ள்ஸ்: `மெசேஜ்க்கு ஏன் லேட் ரிப்ளை அனுப்பின, சாப்பிட்டியா, தூங்குனியா, பல் துலக்குனியா?’னு பத்து பைசா தேறாத கொஸ்டீன்ஸ் கேட்டு அதுக்கு ரிப்ளை பண்ணலைனு ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் கணக்கா பாய வருவாங்க நம்ம பொசஸ்ஸிவ் பொண்ணுகள். சில்லி ரீஸனுக்கு எல்லாம் சில்லிகளைப் போட்டு பொரிச்சா நாங்க என்னதான் பாஸ் ஆவோம்? வீ ஆல்சோ பாவம்னு ஸ்டேட்டஸைப் போட்டு பிரேக்அப்புகளைப் போட்டு ஃபீல் பண்ணுவாங்க.

மறுபடியும் மொதல்லே இருந்து...

பாய்ஸ்: `காதல் ஏன் காதல் அது கண்ணீருல...'னு லவ் ஃபெயிலியர் மூட்ல சூப் சாங்ல இருந்து பீப் சாங் வரைக்கும் பாடிக்கிட்ட இருக்கிற பசங்களுக்கு எல்லாம் ஒரே ஆசை, புதுசா ஒரு பொண்ணைப் பார்த்து லவ்பண்ணணும்கிறதுதான். `ஃபர்ஸ்ட் லவ் ஆகிடுச்சு மண்ணா.. பாருங்கடா நல்ல பொண்ணா’னு மனசைத் தேத்திக்கிட்டு புது பொண்ணைத் தேடிப் போயிடுவாங்க. சோ, மறுபடியும் மொதல்லே இருந்து தங்கள் காதல் கதையை ஆரம்பிச்சுடுவாங்க.

கேர்ள்ஸ்: ஆகச் சிறந்த காரணத்துக்கு எல்லாம் சண்டை போட்டுப் பிரிஞ்சதுக்கு அப்புறம் ‘போடா நீங்களும் உங்க காதலும்’னு சில காலம் ஃபீலிங்ஸ் ஆஃப் வாட்டர் வண்டியில் ஏறி, கண்ணைக் கசக்கினதுக்கு அப்புறம் ‘ஒன் ஃப்ளவர் ஒன் ரோஸ்’ ஆக அகெய்ன் ‘சாப்பிடியா... தூங்குனியா?’–னு கேள்வி கேட்க வருவான் ஒருத்தன்... ஏன்னா, வாழ்க்கை ஒரு வட்டம்கிறான் புத்தன்.