Published:Updated:

விகடன் சாய்ஸ்

விகடன் சாய்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
விகடன் சாய்ஸ்

விகடன் சாய்ஸ்

விகடன் சாய்ஸ்

விகடன் சாய்ஸ்

Published:Updated:
விகடன் சாய்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
விகடன் சாய்ஸ்

வீட்டில் நாம் பொக்கிஷமாகப் பொத்திப் பொத்தி வைத்திருக்கும் குப்பைகளின் மிக நீண்ட பட்டியல் இது. ஏன் வைத்திருக்கிறோம், எதற்கு வைத்திருக்கிறோம் எனத் தெரியாமல் குவித்துவைத்திருக்கும் இந்தப் புதையல்களை விட்டெறிந்தால்... வீடு, அழகுடன் சுத்தமாகும்.

விகடன் சாய்ஸ்

ரோல் போட்டால் படம் எடுக்கும், முன்னோர்கள் பயன்படுத்திய கோனிகா கேமராக்கள்.

விகடன் சாய்ஸ்

கிழிந்துபோன சுக்கலான உபயோகிக்கவே முடியாத பைக் கவர், கார் கவர், மற்றும் ரெயின் கோட்.

விகடன் சாய்ஸ்

பல்ப் இல்லாத, பேட்டரி போடாத, உபயோகிக்க முடியாத டார்ச் லைட்கள்.

விகடன் சாய்ஸ்

ஃப்ளாப்பி டிஸ்க்குகள், சி.டி-க்கள்

விகடன் சாய்ஸ்

யோகா பண்ணலாம் என முடிவெடுத்தபோது வாங்கிய யோகா மேட்.

விகடன் சாய்ஸ்

கீறல் விழுந்த நான்ஸ்டிக் பாத்திரங்கள்.

விகடன் சாய்ஸ்

கீறல் விழுந்து உடைந்துபோன பழைய கூலிங்கிளாஸ்கள்.

விகடன் சாய்ஸ்

ஒவ்வொரு பர்த்டேவுக்கும் புதிதாக வாங்கும் மெழுகுவத்திகள், கத்திகள், பேன்சி அயிட்டங்கள்.

விகடன் சாய்ஸ்

அமுங்கிப்போன தலையே வைக்க முடியாத தலையணைகள், உறைகள்.

விகடன் சாய்ஸ்

முப்பது அப்டேட்கள் வந்துவிட்ட  சாஃப்ட்வேர் டி.வி.டி-க்கள்.

`சந்திரமுகி' காலத்து ஓடாத திருட்டு டி.வி.டி-க்கள்.
 

விகடன் சாய்ஸ்

கட்டுக்கட்டாக பணம் வைத்து நைந்துபோன பர்ஸ்.

விகடன் சாய்ஸ்

கிஃப்டாகக் குவிந்து, பரணிலேயே வாழ்ந்து மறைந்த ஓடாத வால் க்ளாக்குகள், டைம் பீஸ்கள்.

விகடன் சாய்ஸ்

போன ஜென்மத்தில் வாங்கிய மேக்கப் கிட்கள்.

விகடன் சாய்ஸ்

நோக்கியா கம்பெனியிடமே இல்லாத புராதனமான சார்ஜர்கள்.

விகடன் சாய்ஸ்

எக்ஸிபிஷன்களில் தேடித் தேடி வாங்கிய விளம்பர புரெளச்சர்கள்.

விகடன் சாய்ஸ்

எப்போதுமே பயன்படுத்தாத இத்துப்போன வொயர்கள், கேபிள்கள்.

விகடன் சாய்ஸ்

டாய்லெட்டை அலங்கரிக்கும் உபயோகித்து உடைந்த பக்கெட்டுகள், மக்குகள், டூத்பிரஷ்.

விகடன் சாய்ஸ்

தீர்ந்துபோன நெயில்பாலீஷ் பாட்டில்.

விகடன் சாய்ஸ்

இனி எந்த காலத்திலும் எதையும் மார்க் பண்ணாத பெர்மனென்ட் மார்க்கர்.

விகடன் சாய்ஸ்

ஒருகாலத்தில் சரித்திரங்களைத் தீட்டிய, எழுதாத பேனாக்கள்.

விகடன் சாய்ஸ்

துருப்பிடித்துப்போன பழைய கவரிங் நகை.

விகடன் சாய்ஸ்

நான்கு செல்போன்கள் மாற்றிய பிறகும் வைத்திருக்கும் அந்த 1100 செல்போன்கவர்.

பட்டன்கள் கொண்ட வேலைசெய்யாத மொபைல் போன்கள்

விகடன் சாய்ஸ்

பர்ஸில் நிறைந்திருக்கும் விவரங்கள் அழிந்துபோன ஏ.டி.எம் சீட்டுகள்.

ஜீரோ பேலன்ஸைக் காட்டும் பேங்க் ஸ்டேட்மென்ட்கள்.

விகடன் சாய்ஸ்

கிழிந்துபோன ஓட்டை ஜட்டிகள்.

விகடன் சாய்ஸ்

வேலைசெய்யாத பழைய பேட்டரிகள்.

விகடன் சாய்ஸ்

பிய்ந்து, நைந்து, இத்துப்போன காஸ்ட்லி காலணிகள், ஷூக்கள்.

விகடன் சாய்ஸ்

பழைய மிக்ஸி, கிரைண்டர், லேப்டாப், டெஸ்க்டாப், வாட்ச் முதலான எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் குப்பை.

விகடன் சாய்ஸ்

எக்ஸ்பயரி முடிந்த மாத்திரை மருந்துகள்.

விகடன் சாய்ஸ்

யாரோ கிஃப்டாகக் கொடுத்து பரணில் வீசி உடைந்த பீங்கான் கப் செட்டுகள்.

விகடன் சாய்ஸ்

கரப்பான்பூச்சிகள் வாழும், மூடி இல்லாத கிச்சன் கன்டெய்னர்.

விகடன் சாய்ஸ்

ஜோடி இல்லாத சிங்கிள் சாக்ஸ்.

விகடன் சாய்ஸ்

நெட்டுபோன பேட்மின்டன் ராக்கெட்கள், பூப்பந்துகள்.

விகடன் சாய்ஸ்

எங்கு பார்ச்சேஸ் போனாலும் கடைக்காரர்கள் அள்ளித்தரும் டிஸ்கவுன்ட் மெம்பர்ஷிப் கார்டுகள்.

விகடன் சாய்ஸ்

உடைந்த, மியூசியத்தில் வைக்கவேண்டிய ஹெல்மெட்.

விகடன் சாய்ஸ்

வேலை செய்யாத ஹெட்போன்.

விகடன் சாய்ஸ்

உடைந்துபோன செஸ், கேரம் போர்டு, ஓடாத வீடியோ கேம் கன்சோல்.

விகடன் சாய்ஸ்

கிழிந்துபோன பழைய பூட்கட் ஜீன்ஸ் பேன்ட்டுகள்.

உபயோகித்து பல ஆண்டுகள் கடந்துவிட்ட ஒல்லிக்குச்சி உடைகள்.

விகடன் சாய்ஸ்

ஆண்டுதோறும் யார் யாரோ சடங்குக்காகக் கொடுத்த, அச்சடித்த வாழ்த்து அட்டைகள்.

எப்போதோ, எங்கிருந்தோ வந்த உபயோகம் இல்லாத கடிதங்கள்.

எப்போதோ வாங்கிய டி.வி., வாஷிங் மெஷின், மொபைலுக்கான யூஸர் மேனுவல்.

விகடன் சாய்ஸ்

ஒட்டவே ஒட்டாத அழுக்குப்பிடித்த செல்லோ, பிரவுன் டேப்பு.

விகடன் சாய்ஸ்

யார் யாரோ தந்துவிட்டுப் போன தேவை இல்லாத விசிட்டிங் கார்டுகள்.

விகடன் சாய்ஸ்

பேரன்-பேத்திகளுக்கே கல்யாணம் செய்துவிட்டவர்களின் பழைய திருமண பத்திரிகைகள்.

விகடன் சாய்ஸ்

எழுதவேண்டும் என நினைத்து சேர்த்துவைத்த பழைய டைரிகள்.

குழந்தைகளின் பழைய பாடப்புத்தகங்கள், கைடுகள், இயர் புக்குகள் (தேவையானவர்களுக்குக்கூட கொடுக்கலாம்)

படிக்கவே முடியாத ஓசியில் கிடைத்த கவிதை நூல்கள்

விகடன் சாய்ஸ்

ஸ்ட்ரெச்சிங் போய்விட்ட
ஹேர் பேண்ட்.

விகடன் சாய்ஸ்

நமக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத பழைய டாகுமென்ட்கள்.

விகடன் சாய்ஸ்

நினைவுச்சின்னமாக வைத்திருக்கும் பழைய டெலிபோன், கனெக்டே ஆகாத டயல்அப் மோடம்.