Published:Updated:

நீங்களும் போராளி ஆகலாமே ஃப்ரெண்ட்ஸ்!

நீங்களும் போராளி ஆகலாமே ஃப்ரெண்ட்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
நீங்களும் போராளி ஆகலாமே ஃப்ரெண்ட்ஸ்!

ப.சூரியராஜ், ஓவியங்கள்: கண்ணா

நீங்களும் போராளி ஆகலாமே ஃப்ரெண்ட்ஸ்!

ப.சூரியராஜ், ஓவியங்கள்: கண்ணா

Published:Updated:
நீங்களும் போராளி ஆகலாமே ஃப்ரெண்ட்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
நீங்களும் போராளி ஆகலாமே ஃப்ரெண்ட்ஸ்!
நீங்களும் போராளி ஆகலாமே ஃப்ரெண்ட்ஸ்!

`போராளி' படத்தில் வரும் சசிகுமார் கெட்டப்புக்கு மாறுவதைவிட, ஃபேஸ்புக் போராளியாக மாறுவது ரொம்பவே ஈஸி!

* தினமும் நடுராத்திரி ஆறு மணிக்கே எழுந்து எல்லா வேலைகளையும் முடிச்சுட்டு, வாக்கிங் கிளம்பிடணும். அன்னைக்கு என்ன தலைப்புச் செய்தியோ, அதை நாளிதழ்களின் வால்போஸ்டரை பத்து நிமிஷம் வெறிக்கப் பார்த்து மனசுல ஏத்திக்கணும்.

* அப்பாலிக்கா, வீட்டுக்கு வந்து நியூஸ் சேனலைப் போட்டீங்கனா, உங்களுக்கே இன்னைக்கு நீங்க எதைப் பற்றிப் போராடப்போறீங்கனு ஒரு க்ளினிக் ஆல் க்ளியர் ஐடியா கிடைச்சுடும்.

`தனி ஒருவன்' படத்தில் அர்விந்த் சுவாமி சொல்றது மாதிரி அந்த ஒரே ஒரு நியூஸை எடுத்துக்கங்க. அதையே திரும்பத் திரும்ப யோசிங்க. நிச்சயமா ஏதாச்சும் பிசிறு தட்டும்.

எந்த நியூஸும் அன்னைக்குப் பெருசா நடக்கலைன்னா, மனம் தளராதீங்க மக்கா. எப்பவும் யூஸ் பண்ற மாதிரி எவர்கிரீன் மேட்டர்கள் கொஞ்சம் இருக்கு. அதை வெச்சு அந்த நாளை ஒப்பேத்திடலாம். பெண் விடுதலை, அரசு செயல்பாடு, எக்ஸட்ரா!

அன்றைய நாளோட முதல் போஸ்ட் கொஞ்சம் நீநீநீ....ளம்மா டைப் பண்ணணும். அதாவது பத்து வரிக்குக் கீழே `கன்ட்டினியூ ரீடிங்'னு வந்தே ஆகணும். அட்லீஸ்ட் `ஸீ மோர்'னாவது வரணும். அதுவும் இல்லைன்னா, வெங்கலக் கிண்ணம்கூட கிடைக்காது.

எல்லோருமே அந்த நியூஸை ஒரு கோணத்துல யோசிச்சுட்டு இருந்தால், நீங்க அரக்கோணம், கும்பகோணம் எல்லாம் தாண்டி வேற ஒரு கோணத்துல யோசிக்கணும். அப்போதான் நாலு பேர் சண்டைக்கு வருவாய்ங்க, செமத்தியா ரீச் ஆக முடியும்.

போஸ்ட்டில் அங்கே இங்கே மானே, தேனே, பொன்மானே மாதிரி சிலபல கெட்டவார்த்தைகளைப் பரபரனு தூவினீங்கனா, ஃபேஸ்புக்கே பரபரப்பாகிடும். ஃபேஸ்புக் போராளியாக, இது ஒரு முக்கியமான தகுதி.

அப்பவும் எந்த நியூஸையும் உங்க கல்லீரல் யோசிச்சுக் கொடுக்கலைனா, உங்க வீட்டுத் தெருமுனையில் இருக்கும் குப்பைத்தொட்டி பக்கத்தில் கிடக்கிற குப்பையை அள்ளிப் போட்டு, ஒரு செல்ஃபி தட்டுங்க. மேட்டர் ஓவர். அதனால், எப்பவுமே ரெடியா ரெண்டு பொல்யூஷன் மாஸ்க் வாங்கி வெச்சுக்கோங்க.

நீங்களும் போராளி ஆகலாமே ஃப்ரெண்ட்ஸ்!

ஸ்டேட்டஸ் போடுவதற்குப் பதிலா... அதையே வீடியோவா எடுத்துப் போட்டீங்கனா, ஓவர்நைட்ல ஆன்ட்ரியாவைவிட ஃபேமஸ் ஆகிடலாம். ஆனால், அதுவே பச்சைத்தண்ணி கிடைச்சாலே வெச்சு செய்யுற மீம் க்ரியேட்டர்களுக்குப் பால்பாயாசம் கொடுத்த மாதிரி ஆகிடும்.

உங்களைத் திட்டிப் போடப்படும் கமென்ட்டுகளுக்கு, `பாட்ஷா' ரஜினி மாதிரி சின்னச் சிரிப்பைத் தவிர வேற எதையும் பதிலா தரக் கூடாது. திட்டுறது உங்க நண்பனா இருந்தாலும் சிரிக்கிற ஸ்மைலியை மட்டும் கைவிட்றாதீங்க!

குலோப் ஜாமுன் தின்ன குண்டானுக்குள்ள கையை விட்டு, உங்க அம்மாகிட்ட அடி வாங்கின உங்க

நீங்களும் போராளி ஆகலாமே ஃப்ரெண்ட்ஸ்!

சொந்தக் கதை சோகக்கதையும் எழுதலாம். ஆனால், அதை அப்படியே எழுதிடக் கூடாது. அந்தச் சம்பவத்தை ஒன்லைனா வெச்சு ராஜேஷ்குமார் நாவல் மாதிரி திகிலும் திருப்பங்களும் நிறைஞ்ச மாதிரி எழுதணும். ஒரு பொய் சொன்னா, அதில் சில உண்மையும் கலந்து இருக்கணும். இதுதான் ஃபேஸ்புக் போராளியின் பேஸிக் தகுதி.

கிரிக்கெட்டர்களுக்கு `அப்டமன் கார்டு' மாதிரி, ஒரு ஃபேஸ்புக் போராளிக்கு செல்ஃபிங்கிறது ரொம்பவே முக்கியமான ஒண்ணு. `நான் சமைச்ச கத்திரிக்காய் கொத்சு', `எங்க வீட்டு சுப்ரமணி' என எதுகூடவாவது செல்ஃபி எடுத்துப் போட்டுக்கிட்டே இருக்கணும். இல்லைன்னா இருக்கிற இடம் தெரியாமப்போயிடுவோம்.

அதே மாதிரி, ராஜ்கிரண் மாதிரி மூஞ்சியை எப்பவும் சீரியஸாகவே வெச்சுக்கக் கூடாது. `சண்டக்கோழி' படத்தில் திடீர்னு அவர் மழையில் ஃபுட்பால் ஆடுற மாதிரி நீங்களும் திடீர் டப்ஸ்மாஷ், சிங்கிங், டான்ஸிங்னு எதையாவது போஸ்ட் பண்ணியே ஆகணும்.

`அவிய்ங்க என்னை இன்பாக்ஸ்ல வந்து மிரட்டுறாய்ங்க', ` `கத்தி' தெரியுமா... `துப்பாக்கி' தெரியுமா?'னு விஜய் பட டைட்டிலா கேட்டு காமெடி பண்றாய்ங்க'னு எதையாவது கிளப்பிவிடணும். ஆனால், யார் மிரட்டுறாங்கனு மட்டும் சொல்லிடவே கூடாது. ஏன்னா, யாராவது மிரட்டினாத்தானே சொல்றதுக்கு. ம்ம்ம்க்கும்!

நீங்களும் போராளி ஆகலாமே ஃப்ரெண்ட்ஸ்!

இன்பாக்ஸில் யாராவது சாட் செய்யும்போது உங்களிடம் பல்பு வாங்கினால், அதை அப்படியே விட்டுவிடக் கூடாது. குப்பு... குப்புனு ஊதிப் பெரிசாக்கிடணும். அதாவது, அந்த சாட்டை அப்படியே ஸ்க்ரீன் ஷாட் எடுத்து போஸ்ட் செஞ்சு பொளந்துரணும்.

அதே மாதிரி எந்தப் பிரச்னையைப் பற்றியும் ஒரு வாரத்துக்கு மேல பேசவே கூடாது. சிலர், வான்ட்டடா வந்து வண்டியில ஏறினாலும் நாம அந்த வண்டியில இருந்து ரன்னிங்ல இறங்கிடணும்.

எந்தப் பிரச்னையா இருந்தாலும் அன்னைக்கு மனநிலைக்குப் பேசிட்டுப் போயிட்டே இருக்கணும். அதாவது, நீங்க எப்படிப்பட்ட ஆளுனு கொஞ்ச காலம் வரைக்கும் புரிஞ்சுடவே கூடாது. உங்களைப் பற்றி நினைக்கும்போது எல்லாம் மற்றவங்களுக்கு நாலைஞ்சு இடியாப்பத்தைக் கொசகொசனு பிசைஞ்சு கையில கொடுத்த மாதிரியே இருக்கணும்.

 சரி, இப்போ முதல் வேலையா என்ன பண்றீங்கன்னா... அஞ்சாறு மாசத்துக்கு முன்னாடி யாராவது பேசின முக்கியமான ஒரு விஷயத்தை ஓட்ட, உடைசல் பார்த்து நீங்க எழுதின மாதிரி போட்டுவிடுங்க. மற்றது எல்லாம் தானா நடக்கும். கோர்ஸ் முடிஞ்சுடுச்சு. ஆயுஷ்மான் பவ!