பாசுமி சப்பாத்தி

தேவையானவை: கம்பு, கோதுமை மாவு - தலா 100 கிராம், மஞ்சள் பூசணித் துருவல் - 150 கிராம், வெங்காயம் - 50 கிராம், எண்ணெய் - 50 கிராம், பச்சைமிளகாய் - 2, இஞ்சி - பூண்டு விழுது, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெங்காயத்தை விழுதாக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் கம்பு, கோதுமை மாவு, துருவிய பூசணி உள்ளிட்டவற்றை ஒன்றாகச் சேர்த்துக் கலக்கி, கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்து, பிசைய வேண்டும். அரை மணி நேரம் கழித்து சப்பாத்திகளாகத் தேய்த்து தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும். இதற்கு, புதினா சட்னி தொட்டுச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

பலன்கள்: கம்பு - கோதுமையில் புரதம் நிறைவாக இருப்பதால், தசைகள் உறுதியாகும். பூசணியில் உள்ள நார்ச்சத்தும் நீர்ச்சத்தும் செரிமானத்தை மேம்படுத்தும். பூசணியில் உள்ள வைட்டமின் ஏ கண் மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

நிலக்கடலைப் பால்

தேவையானவை: வெல்லம் - 50 கிராம், நிலக்கடலை - 100 கிராம், வாழைப்பழம் - 1, ஏலக்காய், சுக்கு - சிறிதளவு, தேங்காய்ப் பால் - ஒரு கப்.

செய்முறை: நிலக்கடலையை முதல் நாள் இரவு நீரில் ஊறவைக்கவும். ஊறிய கடலையின் தோலை நீக்கி, தேங்காய்ப் பால், வாழைப்பழம், ஏலக்காய், வெல்லம், சுக்கு சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டி அருந்தலாம்.

பலன்கள்: நிலக் கடலையில் உள்ள புரதமும் வெல்லத்தில் உள்ள இரும்புச்சத்தும் உடலுக்கு வலுவைக் கூட்டும்.ரத்தசோகையைப் போக்கும். வாழைப்பழம் செரிமானப் பிரச்னையை போக்கும். சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.

உச்சி முதல் உள்ளங்கால் வரை

உடல் பருமன்

உடல் பருமனானவர்கள் கார்போஹைட்ரேட் குறைவாகவும் நார்ச்சத்து உள்ள உணவுகளை அதிகமாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும். முள்ளங்கி, முட்டைக்கோஸ், சுரைக்காய் போன்ற நீர்்காய்கறிகள் எடுத்துக்கொள்ளலாம். பப்பாளி, ஆரஞ்சு, சாத்துக்குடி உள்ளிட்டவற்றை மிதமான அளவில் எடுத்துக்கொள்ளலாம். மா, பலா உள்ளிட்டவற்றைத் தவிர்க்க வேண்டும்.