Published:Updated:

"எனக்கு பதவியோ, பேரோ, தேவை இல்லை

"எனக்கு பதவியோ, பேரோ, தேவை இல்லை
பிரீமியம் ஸ்டோரி
"எனக்கு பதவியோ, பேரோ, தேவை இல்லை

டி.சார்லஸ், படங்கள்: சு.குமரேசன், மீ.நிவேதன்

"எனக்கு பதவியோ, பேரோ, தேவை இல்லை

டி.சார்லஸ், படங்கள்: சு.குமரேசன், மீ.நிவேதன்

Published:Updated:
"எனக்கு பதவியோ, பேரோ, தேவை இல்லை
பிரீமியம் ஸ்டோரி
"எனக்கு பதவியோ, பேரோ, தேவை இல்லை
"எனக்கு பதவியோ, பேரோ, தேவை இல்லை

சிசி தலைவர், பிசிசிஐ தலைவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் என, பல பதவிகளில் பவர்ஃபுல் மனிதராக இருந்த என்.சீனிவாசனிடம் தற்போது இருப்பது, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவி மட்டுமே. ஆனால், அதை வைத்துக்கொண்டே தமிழ்நாடு பிரீமியர் லீக் என ஆரம்பித்து, `சென்னை போனால் என்ன... தமிழ்நாடே திரும்ப வரும்' என ஐபிஎல்-லுக்கு டஃப் ஃபைட் கொடுத்திருக்கிறார் சீனிவாசன். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ஒரு கோடி ரூபாய் பரிசுத்தொகை, சர்வதேசப் பயிற்சியாளர்கள், ஸ்டார் ஸ்போர்ட்ஸில் நேரடி ஒளிபரப்பு என மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியை, சர்வதேசத் தரத்துக்குக் கொண்டுபோய் இருக்கிறது டி.என்.பி.எல். இந்த வெற்றிக்குக் காரணமான என்.சீனிவாசனைச் சந்தித்தேன்.

``மாநில அளவிலான லீக் போட்டிகள், கர்நாடகாவில் கடந்த  சில ஆண்டுகளாக நடைபெற்றுவருகின்றன. ஆனால் அது பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. டி.என்.பி.எல்-க்கு மட்டும் இது எப்படிச் சாத்தியமானது. முதல் ஆண்டே ஸ்டார் ஸ்போர்ட்ஸில் நேரடி ஒளிபரப்பு எப்படி சாத்தியமானது?''

`` `நம்ம ஊரு... நம்ம கெத்து!'னு சொல்றது நூற்றுக்கு நூறு உண்மை.  டி.என்.பி.எல் வெற்றிக்கு முதல் காரணம், தமிழ்நாடு கிரிக்கெட் ரசிகர்கள். யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, உத்தப்பா என கடந்த மாதம் இந்திய அணியின் சீனியர் வீரர்கள் விளையாடிக் கொண்டிருந்த துலீப் டிராஃபி போட்டிகளைப் பார்க்க, மைதானத்தில் கூட்டமே இல்லை. அதே நேரத்தில் நடந்த டி.என்.பி.எல் போட்டிகளைக் காண, கூட்டம் குவிந்தது. சென்னை, திருநெல்வேலி, நத்தம் என எல்லா ஊர்களிலும் செம கூட்டம். ஸ்டார் ப்ளேயர்ஸ், சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் என்று எல்லாம் இல்லை. உண்மையான கிரிக்கெட்டை நேசிப்பவர்கள் நாங்கள் என்பதை, நம் ரசிகர்கள் நிரூபித்திருக்கிறார்கள்.

இந்தப் போட்டிகளை சரியான ஆள் நடத்தப்போகிறார், கிரிக்கெட்டில் அனுபவம் உள்ளவர்கள் இதற்குப் பின்னணியில் இருக்கிறார்கள் என்பவைதான் ஸ்டார் ஸ்போர்ட்ஸை நேரடி ஒளிபரப்பு செய்யவைத்தது. உங்ககிட்ட பணம், அதிகாரம், ஆள்பலம்னு என்னென்னவோ இருந்தாலும், நிர்வாகத் திறமை இல்லைன்னா எதையுமே வெற்றிகரமாகச் செய்ய முடியாது. எங்கள் பலமே நிர்வாகத் திறமைதான்.''

"எனக்கு பதவியோ, பேரோ, தேவை இல்லை

``டி.என்.பி.எல் போட்டிகளின் அடுத்த கட்டம் என்ன?''

``டி.என்.பி.எல் மூலமாக, இப்போது திறமையான தமிழக கிரிக்கெட் வீரர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள். இந்தப் போட்டிகளை, ஐபிஎல் டீம் உரிமையாளர்கள் ஆர்வத்துடன் பின்தொடர்ந்து வருகிறார்கள். அவர்கள், அடுத்த ஆண்டு நடைபெறும் ஏலத்தில் நிச்சயம் டி.என்.பி.எல் ஸ்டார் ப்ளேயர்களை எடுப்பார்கள். நம்ம ஊர் கிரிக்கெட்டர்களுக்கு, மிகப்பெரிய எதிர்காலத்தை டி.என்.பி.எல் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இன்னும் இரண்டு ஆண்டுகளில், டி.என்.பி.எல் போட்டிகளில் மேலும் இரண்டு அணிகள் சேர்க்கப்பட இருக்கின்றன. பல ஊர்களிலும் கிரிக்கெட் ஸ்டேடியங்கள் கட்டப்பட இருக்கிறது.''

``சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இரண்டு ஆண்டு தடை முடிந்து மீண்டும் அதே பலத்துடன் வருமா?''

``நிச்சயமாக. அதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம். ஐபிஎல் வரலாற்றில் சூப்பர் சக்சஸ்ஃபுல் டீம் சென்னைதான். காரணம், சரியான வீரர்களைத் தேர்ந்தெடுத்து விளையாடினோம். இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம், 50 வருடங்களாக கிரிக்கெட் விளையாட்டில் முழு ஆர்வத்துடன் பங்குகொண்டு வருகிறது. அதனால், எந்த வீரர்களை எடுக்க வேண்டும், யாரை எடுக்கக் கூடாது என மிகத் தெளிவாகத் தெரியும். இப்போதைய டீமே இல்லை என்றாலும் எங்களால் நல்ல டீமை மீண்டும் உருவாக்க முடியும்.''

``இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தில், தோனி இன்னும் வேலை செய்கிறாரா?''

``ஆமாம். தோனி, இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் துணைத்தலைவராக இருக்கிறார்... தொடர்ந்து இருப்பார். அவர் எனக்கு நல்ல நண்பர்.''

`` `பிசிசிஐ-ல் 70 வயது நிரம்பியவர்களை நிர்வாகிகளாக நியமிக்கக் கூடாது' என லோதா கமிட்டி பரிந்துரைத்துள்ளதே. அது பற்றி உங்கள் கருத்து?''

``இது பற்றி நான் கவலைப்படவேண்டியது இல்லை. சரத்பவாரில் ஆரம்பித்து பல மாநிலங்களில் 70 வயதுக்கும் மேலானவர்கள்தான் தலைவர்களாக இருக்கிறார்கள். அதனால் அவர்களே இதற்கு ஒரு தீர்வைக் கண்டுபிடிப்பார்கள்.

"எனக்கு பதவியோ, பேரோ, தேவை இல்லை

எனக்கு பதவியோ, பேரோ தேவை இல்லை. எனக்கு கிரிக்கெட் பிடிக்கும். அதை இன்னும் அடுத்த கட்டத்துக்குக் கொண்டுபோவதற்கு வேலை செய்துகொண்டிருக்கிறேன். பதவியில் இருந்துதான் செய்ய வேண்டும் என்பது இல்லை.''

``சமீபத்தில் ட்விட்டரில் `உங்ககிட்ட கோஹ்லி இருக்கலாம், ரோஹித் இருக்கலாம். எங்ககிட்ட சீனி மாமா இருக்காருடா' என்ற ட்வீட் பயங்கரமாக ட்ரெண்ட் ஆனது. உண்மையிலேயே சீனி மாமாவிடம் என்ன இருக்கிறது?''

``என்னிடம் போராட்டக் குணம் இருக்கிறது. அதுதான் என் பலம். சம்பந்தமே இல்லாமல் என் மேல் குற்றச்சாட்டுகள், ஊழல் புகார்கள். என்னை ராஜினாமா செய்யச் சொல்லி ஏகப்பட்ட மிரட்டல்கள். குருநாத் மெய்யப்பனைக் கைதுசெய்வதன் மூலமாக என்னை அடிபணியவைக்க நினைத்தார்கள். ஆனால், நான் எதற்குமே அசரவில்லை. தப்பு  செய்திருந்தால்தானே, நான் ராஜினாமா செய்ய வேண்டும். இந்தியாவிலேயே மோசமானவனாக என்னைச் சித்தரித்து, தினம் தினம் என்னை தலைப்புச் செய்தியாக்கினார்கள். ஆனால், கடைசியில் என்ன ஆனது? என் மீதான குற்றச்சாட்டுகள் எதையுமே அவர்களால் நிரூபிக்க முடியவில்லை.

2007-ம் ஆண்டு, நான் பிசிசிஐ-யின் செயலாளர். அப்போதுதான் முதல்முறையாக கிரிக்கெட் லீக் தொடங்கலாம் எனப் பேசினோம். லலித் மோடி, அதை ஒருங்கிணைத்தார். ஆனால், தலைவரான சரத்பவாருக்கும் லலித் மோடிக்கும் `இவ்வளவு பணம் கொடுத்து அணிகளை வாங்க, ஓனர்ஸ் வருவார்களா?' என சந்தேகம். `சென்னை டீம் வாங்க நீங்க `பிட்' (Bid) பண்ணுங்க' என லலித் மோடி எனக்குக் கடிதம் எழுதினார். `சரத்பவாரின் செயலாளராக இருக்கும் நான் அணியை வாங்கலாமா?' எனக் கேட்டு கடிதம் அனுப்பினேன். `தாராளமாக வாங்கலாம்' என அவர் எழுத்தில் பதில் அனுப்பினார். பவார் பதில் கடிதம் அனுப்பிய பிறகுதான் நாங்கள் சென்னை அணியை வாங்க முடிவுசெய்தோம்.

1960-களில் இருந்தே கிரிக்கெட்டில் இந்தியா சிமென்ட்ஸின் பங்கு இருக்கிறது. மாநில அளவிலான பல கிரிக்கெட் போட்டிகளுக்கு ஸ்பான்சர், இந்தியா சிமென்ட்ஸ்தான். நாமே சென்னை அணியை வாங்கவில்லை என்றால், யார் இவ்வளவு பணம் போடுவார்கள் என்பதால்தான், அப்போது சென்னை அணியை வாங்கினோம். இதில் என்ன விதிமீறல்?

நான் குற்றமற்றவன். அதனால்தான் இப்போது பிசிசிஐ-யின் ஒரு பகுதியினர் எல்லா பிரச்னைகளையும் என்னிடம் கொண்டுவருகிறார்கள்; இதை எப்படிச் செய்வது என ஆலோசிக்கிறார்கள். கிரிக்கெட்டின் ரீச்சை இன்னும் அதிகப்படுத்தத்தான் நாங்கள் இருக்கிறோம்; அதன் பெயரைக் கெடுக்க அல்ல!''