Published:Updated:

ஜென் Z - ரேஸ் காதல்!

ஜென் Z - ரேஸ் காதல்!
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - ரேஸ் காதல்!

தமிழ், படம்: சொ.பாலசுப்பிரமணியன்

ஜென் Z - ரேஸ் காதல்!

தமிழ், படம்: சொ.பாலசுப்பிரமணியன்

Published:Updated:
ஜென் Z - ரேஸ் காதல்!
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - ரேஸ் காதல்!
ஜென் Z - ரேஸ் காதல்!

டாக்டர் தம்பதி, வக்கீல் தம்பதிபோல இவர்கள் ரேஸிங் தம்பதி. சிண்டி - ஆன்டி என இது இந்திய பைக் ரேஸ் சர்க்யூட்டில் சாம்பியன் ஜோடி!

‘‘சின்ன வயசுலே இருந்தே எனக்கு பைக்தான் உயிர். A  for - ஆக்ஸிலரேட்டர், B  for - பைக், C  for - க்ளெட்ச், E  for - இன்ஜின்னுதான் படிக்கவே ஆரம்பிச்சேன். தவழும்போதுகூட பைக் பொம்மைங்களை வெச்சுத்தான் விளையாடுவேனாம். சின்ன வயசுல அப்பாவுக்குத் தெரியாம தாத்தாவோட M80 டூ

ஜென் Z - ரேஸ் காதல்!

வீலரை எடுத்துட்டுப் போய் அடி வாங்குவேன். அப்புறம் `பைக் வாங்கிக் கொடுத்தாத்தான் ஸ்கூலுக்குப் போவேன்'னு வீட்ல ஒரே அடம். ‘ப்ளஸ் டூ-ல 1,100 மார்க் மேல எடு. பைக் வாங்கித் தர்றேன்’னு அம்மா ஒரு பேச்சுக்குச் சொன்னாங்க. நான் எடுக்க மாட்டேன்னு ஒரு தைரியம். ஆனா, நான் 1,127 மார்க் எடுத்தேன். ‘அப்புறம் காலேஜுக்குப் போ, வாங்கித் தர்றேன்’னாங்க. அம்மாவை நம்பினா வேலைக்கு ஆகாதுன்னு நானாவே பார்ட் டைம் ஜாப் பார்த்து, ஒரு லட்சம் லோன் போட்டு ஒரு யமஹா பைக்கும் ரேஸ் சூட்டும் ஷூவும் வாங்கினேன். ‘அடங்காப்பிடாரி’னு பேர் எடுத்தேன். ஆனா, இப்போ அம்மாவே ‘ரேஸ் டிராக்கில் யாருக்கும் அடங்காத’னு சொல்லித் தர்றாங்க!’’ என்று சொல்லும் செளந்தரி என்னும் சிண்டி, பெண்களுக்கான சுஸூகி ஒன் மேக் பைக் ரேஸில் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்துவருபவர்.

‘‘அப்ப எல்லாம் பெண்களுக்குனு தனியா ரேஸ் வெக்க மாட்டாங்க. ஆண்களோடதான் போட்டி போடணும். 2012-ம் ஆண்டு டிசம்பர்ல என்னோட முதல் ரேஸுக்கு முன்னால் தகுதிச்சுற்றில் கலந்துக்கிட்டப்பதான் ஆன்டியை முதன்முதலா பார்த்தேன். டிராக்கில்தான் என்னோட முதல் பயிற்சி என்பதால், ரேஸ் கொஞ்சம்கூட செட் ஆகலை. பைக் க்ராஷ் ஆகி, செம அடி. ‘பாப்பா... உனக்கு எதுக்கு இந்த வேலை?’னு கிண்டல் பண்ணினவங்களுக்கு மத்தியில், ஆன்டி மட்டும்தான் ஆறுதல் வார்த்தைகள் சொன்னார். என் முதல் ஹீரோ அப்பா என்றால், ஆல்டைம் ஃபேவரிட் எனக்கு அவன்தான் ஸாரி... அவர்தான்'' என, கணவரைக் கைக்காட்ட ‘`ஹலோ, என் பேர் ஆனந்தராஜ்'’ என கைகுலுக்கிறார் மூன்று முறை தேசிய பைக் ரேஸ் சாம்பியனான ஆன்டி.

``நிறைய பெண்கள், ரேஸ் ஓட்ட ஆர்வமா வருவாங்க. ஆனா, ரெண்டு முறை டிராக்ல விழுந்து அடிபட்டா போதும். ஒதுங்கிடுவாங்க. சிண்டி இதுக்கு அப்படியே நேர் எதிர். அவங்கிட்ட பிடிச்சதே அவங்க  போராட்டக் குணம்தான்'' என, பெருமையோடு மனைவியைத் தட்டிகொடுக்கிறார் ஆனந்த்ராஜ்.

``நிறைய ரேஸிங் டிப்ஸ் கொடுத்தார். கார்னரிங், ஸ்பீடிங் எல்லாத்துலயுமே எனக்கு ஆன்டிதான் குரு. திடீர்னு ஒருநாள் என்கிட்ட வந்து புரொப்போஸ் பண்ணினார். எனக்கு ஷாக். ‘ஏற்கெனவே எங்க வீட்ல நான் ரேஸ்ல நுழையிறதுக்கே ரொம்பப் போராட்டம்’னு எடுத்துச் சொன்னேன். காதுலயே வாங்கலை. நேரா எங்க அம்மாகிட்ட போய், அப்ரோச் பண்ணிட்டார். அப்புறம் இரண்டு வீடும் ஒண்ணுகூட, மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணிட்டாங்க. 2013-ம் ஆண்டில் கல்யாணம் ஆச்சு. அப்புறம் ஜோடியாவே மிரட்ட ஆரம்பிச்சுட்டோம்.

‘ஏதோ கஷ்டப்பட்டு ரேஸர் ஆகிட்டாங்க; வாழ்த்துகள்’ என்று வெறும் எமோடிக்கான் மெசேஜ் அனுப்பிவிட்டு ஒதுங்கிவிடக்கூடியது அல்ல சிண்டியின் ரேஸ் ஆர்வம். மருத்துவர்களின் எச்சரிக்கையையும் குடும்பத்தினரின் எதிர்ப்பையும் உச்சபட்சமாக மீறி, ரேஸிங் டச் விட்டுபோய்விடக் கூடாது என்பதற்காக, தனது எட்டு மாத கர்ப்பக் காலத்திலும் யமஹாவைத் தெறிக்கவிட்டிருக்கிறார் செளந்தரி.

சிண்டி-ஆன்டி தம்பதியருக்கு, இப்போது க்யூட்டாக ஒரு மகன் இருக்கிறான். அவனுக்கும் `A for - ஆக்ஸிலரேட்டர்’ வகுப்புதான் நடந்துகொண்டிருக்கிறது.