Published:Updated:

விகடன் சாய்ஸ்

விகடன் சாய்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
விகடன் சாய்ஸ்

விகடன் சாய்ஸ்

விகடன் சாய்ஸ்

விகடன் சாய்ஸ்

Published:Updated:
விகடன் சாய்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
விகடன் சாய்ஸ்

டைப்பயிற்சி செய்வது, வாழ்நாளை அதிகரிக்கக்கூடியது மட்டும் அல்ல, வாழும் நாளையும் சிறப்பாக மாற்றக்கூடியது. நடைப்பயிற்சி செய்ய விரும்புபவர்கள், செய்துகொண்டிருப்பவர்கள் பின்பற்றவேண்டிய முக்கிய விஷயங்கள் இவை.

வார்ம்அப் மற்றும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள்

விகடன் சாய்ஸ்

1. தலையை உயர்த்திவைப்பது.

2. கண்கள், 15 அடிகளுக்கு முன்னால் உள்ள பொருட்களைப் பார்க்கும்படி இருக்க வேண்டும்.

3. கீழ்த்தாடையை நிலமட்டத்துக்கு இணையாக வைக்கவேண்டும்.

4.  தோள்பட்டைகள் ரிலாக்ஸ்டாக இருக்க வேண்டும்.

5.  நடக்கும்போது கைகள் இரண்டும் இயல்பாக முன் பின்னாக அசைய வேண்டும்.

6. வயிற்றுத் தசைகள் லேசான விறைப்புடன் இருக்க வேண்டும்.

7.  நடக்கும்போது இரண்டு பாதங்களும் இணையாக பதியும்படி நடக்கவேண்டும்.

8. பாதங்கள் முழுமையாக தரையில் படும்படி நடப்பது.

விகடன் சாய்ஸ்

நடப்பது எப்படி?

விகடன் சாய்ஸ்

1. வார்ம்அப்

உடலை வெதுவெதுப்பாக வைக்கக்கூடிய உடற்பயிற்சிகள், ஐந்து நிமிடங்களுக்கு...

விகடன் சாய்ஸ்

2. ஸ்ட்ரெச்சிங்

தசைகளை இலகுவாக்கும் எளிய பயிற்சிகள், ஐந்து  நிமிடங்களுக்கு...

விகடன் சாய்ஸ்

3. நடை

30 நிமிடங்களுக்கு, சீரான வேகத்தில் நடக்க வேண்டும்.

விகடன் சாய்ஸ்

4. கூலிங்

நடை வேகத்தைக் குறைத்து ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள், ஐந்து நிமிடங்களுக்கு...

செயலிகள் சில...

விகடன் சாய்ஸ்

நடக்கும்போது, தூரத்தையும் வேகத்தையும் அவசியம் கணக்கிட வேண்டும். எவ்வளவு கலோரிகளை எரிக்கிறோம்? முன்பைவிட அதிக தூரம் நடக்கிறோமா? ஒரே சீராக நடக்கிறோமா என்பதை எல்லாம் கணக்கிட உதவும், ஆண்ட்ராய்டு செயலிகள் பல உண்டு. அவற்றில் பெஸ்ட் இந்த மூன்று!

டைமிங் முக்கியம்

விகடன் சாய்ஸ்

வ்வொரு நாளும் குறைந்தது 30 நிமிடங்களாவது நடக்க வேண்டும்.

வாரத்துக்கு, மினிமம் நான்கு நாட்கள் நடந்தால்தான் பலன் அளிக்கும்.

புதிதாக நடைப்பயிற்சி ஆரம்பிப்பவர்கள், முதலில் 20 நிமிடங்களாகத் தொடங்கி, கொஞ்சம் கொஞ்சமாக நேரத்தை அதிகரிக்கலாம்.

Please Click on the Images for  websites

விகடன் சாய்ஸ்
விகடன் சாய்ஸ்
விகடன் சாய்ஸ்

செருப்பு போட்டுக்கொண்டு நடக்கலாமா?

விகடன் சாய்ஸ்

செருப்புகள் அணிந்து நடைப்பயிற்சி செய்வது கால்களுக்கு நல்லது அல்ல. ஷூ அல்லது வெறுங்காலுடன் நடக்கலாம்.

விகடன் சாய்ஸ்

மாலை நேரம் அல்லது உடற்பயிற்சிக்குப் பிறகு ஷூ வாங்க வேண்டும். அப்போதுதான் கால்கள் விரிவடைந்து பெரிதாக இருக்கும்; சரியான அளவில் ஷூ வாங்க முடியும்.

விகடன் சாய்ஸ்

ரண்டு கால்களையும் அளந்து, எந்தக் கால் பெரிய அளவில் இருக்கிறதோ, அதே அளவில் வாங்கவும்

விகடன் சாய்ஸ்

ஷூ எடை குறைவாகவும், விரல் பகுதிகளில் அகலமாகவும் இருக்க வேண்டும். குதிக்கால் பகுதியில் வழுக்கும்தன்மை உள்ளதாக இருக்கக் கூடாது.

விகடன் சாய்ஸ்

பாதங்களில் இயல்பானது, தட்டையானது, அதிக வளைவுகள் கொண்டது என வெவ்வேறு வடிவங்கள் உண்டு. உங்களுடையது அவற்றில் எந்த வடிவம் என்பதை அறிந்து அதற்கு ஏற்ற ஷூவை கடைக்காரரிடம் கேட்டு வாங்க வேண்டும்.

 நடைபயிற்சிக்குக் கிளம்புவதற்கு முன்...

விகடன் சாய்ஸ்

ட்ட முடியாத இலக்குகளை நிர்ணயிக்காதீர்கள்.

றுக்கமான, வசதியற்ற ஆடைகளைத் தவிர்க்க வேண்டும்.

விகடன் சாய்ஸ்

நிறைய தண்ணீர் அருந்துங்கள்

விகடன் சாய்ஸ்

ரையாடிக்கொண்டே நடப்பதைத் தவிர்க்கவும். மூச்சு, சீராக இருக்காது.

விகடன் சாய்ஸ்


டைப்பயிற்சிக்குச் செல்லும்போது,  எமர்ஜென்சி தொலைபேசி எண்கள்கொண்ட அடையாள அட்டையை வைத்துக்கொள்வது நல்லது.

விகடன் சாய்ஸ்

ழைக் காலங்களில் சாலைகளில் நடைப்பயிற்சி செய்வது ஆபத்தானது.

கைகள் அணிந்து கொண்டு செல்லாதீர்கள்.

யதானவர்கள் துணையுடன் செல்வது நல்லது.

விகடன் சாய்ஸ்

வெயில் அதிகமாக இருந்தால், கையில் சிறிய தண்ணீர்பாட்டில் வைத்துக்கொள்ளுங்கள்.

ங்கே நடைப்பயிற்சி செல்கிறீர்கள் என்பதை, வீட்டுக்கு அவசியம் தெரிவியுங்கள்.

விகடன் சாய்ஸ்

சாலைகளில் பயிற்சி செய்பவர்கள், ஹெட்போன் அணிந்து பாட்டு கேட்டபடி நடப்பது ஆபத்தானது. பின்னால் வரும் வாகனங்களின் ஒலிகள் கேட்காமல்போகலாம்.

விகடன் சாய்ஸ்

வாகனங்கள் வரும் திசைக்கு எதிர்த்திசையில் நடப்பதே நல்லது.

விகடன் சாய்ஸ்

கால்களில், மூட்டுகளில் வலி ஏற்பாட்டால், ஓரிரு நாட்களுக்கு ஓய்வெடுங்கள். தானாகவே சரியாகாவிட்டால் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுங்கள்.