Published:Updated:

ஜென் Z - ஃப்ரீயா விடு மானே!

ஜென் Z - ஃப்ரீயா விடு மானே!
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - ஃப்ரீயா விடு மானே!

மேகி

ஜென் Z - ஃப்ரீயா விடு மானே!

மேகி

Published:Updated:
ஜென் Z - ஃப்ரீயா விடு மானே!
பிரீமியம் ஸ்டோரி
ஜென் Z - ஃப்ரீயா விடு மானே!
ஜென் Z - ஃப்ரீயா விடு மானே!

ரிமை எடுத்துக்கிறது வேறு; எல்லை மீறுவது வேறு. காதலில் இதுதான் பெரிய பிரச்னை. பையன்கள் என்னதான் ஓப்பன்னெஸ் உலகநாதன்களாக இருந்தாலும், காதலிகளுக்கு எதுவுமே

ஜென் Z - ஃப்ரீயா விடு மானே!

பத்தாது. `பாவப்பட்ட பையன்களுக்கும் ஒரு தனி உலகம் இருக்கும். அவங்களுக்கும் ஒரு லைஃப் ஸ்டைல் இருக்கும்’னு நினைக் காமல், காதலிக்கிறேன்கிற பேர்ல காதலிகள் காய்ச்சியெடுப்பாங்க.

எல்லாருக்கும் ‘பெர்சனல் ஸ்பேஸ்’னு ஒண்ணு இருக்கு. இதை மட்டும் இல்ல... வேறு சில விஷயங்களையும் பசங்க விட்டுக்கொடுக்க மாட்டாங்க. அதுல கை வைக்காமல் கடந்துபோனா காதல் கசாட்டாவா இனிக்கும்; இல்லாட்டி கம்பி நீட்டும்.  அப்படிப்பட்ட கேர்லெஸ் கேர்ள்ஸுக்களுக்காக ஒரு  சேஃப்ட்டி கைடு.

 மகிழ்ச்சியாக இருக்கவிடணும்

லட்ச ரூபாய்க்கு நீங்க கிஃப்ட் வாங்கிட்டுப் போறீங்க. தோனி கடைசி பாலில் சிக்ஸர் அடிச்சு ஜெயிக்கவைப்பாரானு அவன் பதறிட்டுப் மேட்ச் பார்க்கிறப்ப கிஃப்ட்டை நீட்டிட்டு, ‘நீ கண்டுக்கவே இல்ல... கவனிக்கவே இல்ல’னு சண்டை போட்டீங்கனா... ஸாரி தோழீஸ். அவனுக்குச் சில சின்னச் சின்ன விஷயங்களில் மகிழ்ச்சி ஒளிஞ்சுட்டிருக்கும். அது... ஒரு நாய்க்குட்டி ஓடுறதா இருக்கலாம். இல்ல... நயன்தாரா சிரிக்கிறதாக்கூட இருக்கலாம். அவனை எல்லாம் அப்டியே விட்றணும் தெரியுமா?

 நிதிச் சுதந்திரம்

அவனுக்கான பொருளாதாரச் சுதந்திரத்தை நீங்க கொடுத்தே ஆகணும். ‘யாருக்கு எவ்ளோ கொடுத்த, அவனுக்கு ஏன் செலவு பண்ற, வினோத்துக்கு எதுக்கு கிஃப்ட் வாங்கிட்டு?’னு அவன் செலவுபண்ற விஷயங்கள்ல கைவெச்சா, வோல்டேஜ் ஜாஸ்தி ஆகி ஷாக் அடிக்க வாய்ப்புகள் அதிகம்!

ஜென் Z - ஃப்ரீயா விடு மானே!

ஆன்லைனுக்கு ஆப்பு

சிட்டிசன்கள்ல பாதிப்பேர் நெட்டிசன்கள் ஆனப்பிறகு வந்த தலையாயப் பிரச்னைகளில் ஒண்ணு... ஒளியிறதுக்கு இடம் தெரியாமல் யூத்ஸ் அலைந்து திரிவதுதான். என்னதான் வாட்ஸ்அப்ல லாஸ்ட் சீனை மறைச்சுவெச்சாலும், ஃபேஸ்புக் சாட்டை ஆஃப் லைன்ல வெச்சாலும், வாய் தவறி உளறுகிற மாதிரி கை தவறி எதுக்காச்சும் லைக் போட்டோ, எதையாவது ரீட்வீட் செஞ்சோ, ‘மை ஃபாதர் இஸ் நாட் இன் த குதிர்’னு காமிச்சுடுறாங்க. அவ்ளோதான்... அதை நீங்க பகார்னு பாஞ்சு பிடிச்சுவெச்சுக்கிட்டு, ‘என்கிட்ட `தூக்கம் வருது’னு சொல்லிட்டு நைட் 11:42-க்கு வித்யா ஸ்டேட்டஸுக்கு எப்படி நீ ஸ்மைலி போடலாம்?’னு நீங்க ஆரம்பிக்கிற அதகள ஆட்ட ஸ்மாஷுக்கு, கோபிசந்தே வந்தாலும் அவுட்தான். தப்பு ஸ்வீட்டீஸ்.. ரொம்பத் தப்பு!

ஜென் Z - ஃப்ரீயா விடு மானே!

நம்பினால் நம்பட்டும்

அவனுக்குனு சில பெர்சனல் நம்பிக்கைகள் இருக்கும். `21 கி.மீ மாரத்தான் ஓடணும்’னு டெய்லி ப்ராக்ட்டீஸ் பண்ணிட்டிருப்பான். ‘மூணே மாசத்துல கத்துக்கிட்டு ‘மூணு நிமிஷ `ரெமோ' பாட்டை ரெண்டு நிமிஷத்துல வாசிக்கிறேன் பாரு’னு கிடார்லயோ, கீபோர்டுலயோ கைவைக்க ஆரம்பிச்சிருப்பான். அட... இதெல்லாம் விடுங்க. ‘கோவிலப்பம்பட்டி கோவிந்தசாமிகிட்ட குறிகேட்காம உன்கூட டேட்டிங் வர மாட்டேன்...’னு சொல்லி உங்களுக்கு அதிர்ச்சிகூட கொடுக்கலாம். அப்ப எல்லாம், டிசம்பர் மழை தலையில விழறப்ப ஐஸ்க்ரீம் சாப்பிடுற மாதிரி கூலா நில்லுங்க. அவன் நம்பிக்கை அவனுக்கு!

ஜென் Z - ஃப்ரீயா விடு மானே!

நோ பாஸ்வேர்டு ப்ளீஸ்

உங்க ஆள் லேசான மயக்கத்துல இருக்கிறப்ப, ‘ஆமா... ட்விட்டர் பாஸ்வேர்டு என்ன?’னு கேட்டு, பாஸ்வேர்டுல இருக்கிற M யாருங்கிறதுல ஆரம்பிச்சு, DM பக்கம் எட்டிப்பார்த்து ‘அலமேலு யாரு?’னு டரியல் கொடுக்கிறது வரை... கூடவே கூடாது பியூட்டீஸ். பாஸ்வேர்டு கேட்கிறதே தப்பு... இதுல அகழ்வாராய்ச்சி வேறா? தெரியாம கண்லபட்டாக்கூட, ‘டேய்.. பாஸ்வேர்டை மாத்துடா.. பாத்துட்டேன்’னு சொல்லிப்பாருங்க... கொட்டிக்குடுப்பான் காதலை!

 ஃப்ரெண்டுக்கு ஃப்ரெண்டுக்கு ஃப்ரெண்ட் எதிரி

இது மறுபடி ஒரு குழப்படி சிச்சுவேஷன் for boys. உங்ககூட சண்டை போட்ட மைத்ரியோட ஒண்ணுவிட்ட அத்தை பையனுக்கு லைக் போட்ட மிருதுளா, உங்க ஆளோடு மியூச்சுவல் ஃப்ரெண்டா இருந்தா, உர்ர்ர்ர்ன்னு உர்ராங்குட்டான் மோடுக்குப் போயிடாதீங்க கேர்ள்ஸ். அவனுக்கு அது யார்னே தெரியாம இருக்கலாம். ஆண்ட்ரியா டிபி பார்த்து ஆர்வக்கோளாறுல ஃப்ரெண்ட் ஆக்கிருப்பான். நீங்க சண்டைபோட்டு, அவங்க ரிலேஷன்ஷிப்புக்கு லீடு கொடுத்துடாதீங்க. அது ரொம்ப டேஞ்சர் ஆகிடும்!